தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 16, 2015

தெய்வம் தந்த வீடு!



 நானும் ரவுடிதான் தொடர்ச்சி....


...................

அப்போது நீதிபதியின் மகள் நிறை கர்ப்பிணியாக இருந்தாள். நவம்பர் 15க்கு பிறகு பிரசவம்னு டாக்டரம்மா சொல்லிருக்காங்க என்று பெருமிதமடைந்தான். அம்மா மாரியைப் பார்த்து காபியைக் கீழே போட்றப்போறே, பாத்துஎன்றார் நீதிபதி மகளும் உட்கார்ந்தாள்.

இன்னிக்கு எங்க வீட்லேயே சாப்பிடணும்என்றாள் மனைவி.தாயும் மகளும் உள்ளே சென்றார் கள். நீதிபதி அவனை பற்றி செய்திகளை கேட்டார். மாரி நிதானமாக விளக்கிவிட்டு, “ஐயா, எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும். எங்கப்பா அம்மா இருந்த வீட்டிலேயே போய் வாழணும்னு ஆசை.  அதை எனக்கு மீட்டுத் தர உதவறேங்களா?” என்றான் .”பணம் செலவாகுமேஎன்றார் நீதிபதி.

”டெல்லியிலேயே ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சேன். என் சக்திக்குள்ளே இருந்தா செலவு பண்ண தயார்என்றான் மாரி. நான் உங்களை ஏன் தொந்தரவு பண்றேன்னா என்ன யாரும் ஏமாத்திட கூடாது பாருங்க;எனக்க உங்கள விட்டா யாரு இருக்காங்க உதவி பண்ணஎன்றான். நானே உன்னை ஏமாத்திட்டேனே”;2½ வருஷத்துக்குமேலே எங்களுக்காக உழைச்சே! ஒரு பைசா தந்தேனா? மேலே எவ்வளவு ஆனாலும் நான் பாத்துகிறேன். உங்கம்மா அப்பா வீடு உனக்கேஎன்று உறுதியாக கூறினார்.பொண்ணு பிரசவம் வரை நீ எங்களோடேயே இரேன் என்று வேண்டிக் கொண்டார்.இந்த முறை மாரி படுத்துக் கொண்டது கயிற்றுக் கட்டிலில் அல்ல.குளியலறை வசதி கொண்ட தனி அறையில்.மெத்தையுடன் கூடிய கட்டிலில்!

அன்றே மதியம் 3மணிக்கு சமயபுரம் புறப்பட்டார்கள். வீடு பாழடைந்த நிலையில் பூட்டிக் கிடந்தது.ஏன் நம்ம வீட்டை யாரும் பராமரிக்காமல் கேட்பாரற்று கிடக்கிறதே என்ற ஆதங்கம் மாரியை தாக்கியது. அக்கம் பக்கத்தோரை விசாரித்த போது, அந்த வீட்டில் உள்ளவர்களை பெயர் தெரியாத விஷக்காய்ச்சல் தாக்கி அவர்கள் வரிசையாக இறக்க நேரிட்டது. தெய்வ சாபம் தான் இதற்கு காரணம் என்று அச்சம் அவர்களுக்குள் எழுந்தது.

மாரிக்கு தாயார் ஒரு தூய மாரியம்மன் பக்தை அவர்களின் அகால மரணமும் மாriக்கு கிடைத்த அவமரியாதைகளும் தான். இத்தகைய நிகழ்வுகளுக்குக் காரணம் என பூரணமாக நம்ப ஆரம்பித்தனர். மாரியம்மன் கோயில் பூசாரியும் இதை உறுதி செய்ததால் யாரும் இந்த வீட்டில் குடியிருக்க துணியவில்லை.

மாரியின் வருகைக்காகத் தான் வீடு பதினெட்டு வருடங்களாக காத்து கிடக்கிறது.

இவ்வளவு வருடங்களாக யாரும், குடியிருக்காத வீடு எவ்வளவு சிதைந்திருக்கும். ஆனால், அந்தளவு சேதாரம் ஏற்படவிடாமல் தெய்வசக்தி காத்திருக்கிறது.

இதை அறிந்த மாரி, வெகு நாட்களுக்கு பிறகு, தாயை நினைத்து கதறி அழுதான். நீதிபதி பவ்யமாக அவரை ஆறுதல் அடையச் செய்தான்.

 தாலுக்கா ஆபிஸ், சப்-ரிஜிஸ்தாரர் ஆபீஸ் போய் விசாரித் தார்கள். ரிகார்டுகளை சரி செய்து ஆவன செய்வதாக உறுதியளித்தார்கள்.நீதிபதி மரியாதைக்குரியவர் ரூ.20,000/-. செலவில் வேலை 15 நாட்களில் முடிந்து விட்டது. இன்னொரு ரூ.20.000 செலவை நீதிபதியே செய்து வீட்டைப் புதுப்பித்துக் கொடுத் தார். கிட்டத்தட்ட புது வீடு போல் ஆகியது. மின்சாரம் தண்ணீர் வசதிகளும் கிடைத் தன. வேறு சிக்கல்கள் எதுவும் இல்லாமல் புது வீட்டில் குடியேற வேண்டுமே என்ற கவலை ஏற்பட்டது மாரிக்கு.

மறுநாள் நீதிபதி மனைவியுடன் ஸ்ரீரங்கம் போயிருந்தார். அவருக்கு கார் ஒட்டத் தெரியும். இரவில் ஒட்டுவதற்கு பயம். அதனால் தான் மாரியை அவரோடு தங்க வைத்தார். அவர்கள் வீட்டில் பஜாஜ் எம்-50 இருசக்கர வண்டி இருந்தது. அதை சர்வீஸ் செய்து மாரியை உபயோகப்படுத்தச் சொன்னார்.

அன்று மதியம் மாரியுடன் நீதிபதியின் மகள் பேசிக் கொண்டிருந்தாள்.  இன்னிக்கு ராத்திரி பிரசவம் ஆயிடும்னு தோண்றது என்றாள். குழந்தையின் அசைவு அதிகமாக இருப்பதாக  உணர்ந்தாள்.

அன்று நவம்பர் 14 எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று அன்பாக ஆறுதல் சொன்னான் மாரி.

டிரான்ஸிஸ்டரில் “முத்துக்களோ கண்கள்” பாட்டு ஒலித்தது. மாரியிடம், உனக்க பிடித்த பாட்டாயிற்றே என்றாள். இப்போதெல்லாம் “பூ முடித்தாள் இந்த பூங்குழலி” பாட்டுத் தான் பிடிக்கிறது என சோகத்தில் ஆழ்ந்தான். ஒரு படப்பாட்டு நிகழ்ச்சி போல; அடுத்ததாக  அந்தப் பாட்டு ஒலித்தது. மகள் அவனுடைய உணர்ச்சிகளை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

அன்று நன்ளிரவு அவளுக்கு வலி எடுத்தது. மாரி தான் காரில் அவர்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனான். ஆண் குழந்தை பிறந்தது. தாத்தா பாட்டிக்கு ரங்கநாதரே அவதாரம் எடுத்ததாற் போல் இருந்தது. அன்று ரேவதி நட்சத்திரம் ஆயிற்றே!

டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு நல்ல முகூர்த்த நாளில் மாரி பால் காய்ச்சி பெற்றோர் வீட்டில் குடியேறினான். வீட்டிற்கு “வள்ளுவர் இல்லம்” என்று .பெயரிட்டான். பாழடைந்த வீட்டில் பாலிதின் பையில் சுற்றிக் கிடந்த பெற்றோர். போட்டோவை சீர்செய்து, ரூபாய் 2,000/- .செலவழித்து நேர்த்தியாக டச்சப் செய்து கூடத்தில் மாட்டினான். மாடத்தில் காமாட்சி விளக்கு திருக்குறள் புத்தகம். அதுவே மாரிக்கு பிரார்த்னைக் கூடம்.



அந்தப் பொன்னான நேரத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

....தொடரும்


.

23 கருத்துகள்:

  1. கதை மிகவும் சுவாரஸ்யமாகச் செல்கிறது .....

    //அந்தப் பொன்னான நேரத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.//

    அடடா .... விறுவிறுப்பான இடத்தில் இப்படித் தொடரும் போட்டுட்டீங்கோ. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம்போல் இறுதியில் காவல் துறையினரின் நுழைவா? அடுத்து என்ன மாறி போகப்போவது ‘மாமியார்’ வீட்டிற்குத்தானே? காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா கடைசியில் வந்துட்டாரே.... மாப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசிலதான் வருவாங்க ,நம்ம சினிமால!
      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  4. புது வீடு மாரிக்கு ராசி இல்லையோ:)

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    நன்றாக உள்ளது தொடருங்கள் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. நலமே ஜெயக்குமார்
      தாங்களும் நலமென்று நம்புகிறேன்.
      நன்றி

      நீக்கு
  7. ஹூம் தொடருங்கள் ஐயா, தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. மாரிக்கு மாரி (ஒருவேளை சென்னையைப் போலவோ??!!) பொழிந்த வேளையில் போலீஸ்காரரின் வருகை!!

    தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
  9. ஆஹா.... கடைசில கரெக்டா வந்துடுச்சே போலீஸ்.... விறுவிறுப்பு! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. கதை நடப்பது சமயபுரம் என்பதே இழுக்கிறது

    பதிலளிநீக்கு