தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 17, 2015

மாதங்களில் அவள் மார்கழி!



ஒரு திரைப்பாடல் 

கதாநாயகியைக் கவிஞர் வர்ணிக்கும்போது சொல்கிறார்”மாதங்களில் அவள் மார்கழி”

அப்படி என்ன விசேடம் மார்கழியில்?

கவிஞரின் இந்த சிந்தனைக்கான ஊற்று எது?

பகவான் கண்ணன் கீதையில் சொல்கிறான்”மாதங்களில் நான் மார்கழியாக இருக் கிறேன்”

பகவானே தான் மார்கழியாக இருப்பதாகக் கூறுகையில் மார்கழியின் உயர்வு புலப்படுகிறது அல்லவா?

ஆனால் நாம் மார்கழியைப் பீடை மாதம் என்று சொல்கிறோம்.அது எப்படிச் சரியாகும்? 

தலையை வலிக்கிறது.

பையனை அழைத்து மாத்திரை வாங்கி வரச் சொல்கிறோம்

பையன் மருந்துக்கடைக்குச் சென்று தலைவலி மாத்திரை எனக் கேட்கிறான்.கடைக்காரர் மாத்திரை கொடுக்கிறார்

அதைச் சாப்பிட்டதும் தலைவலி குணமாகிறது

கேட்டது தலவலி மாத்திரை.

என்ன பொருள்?

தலைவலி தரும் மாத்திரையா?

அல்ல.

தலைவலியைப் போக்கும் மாத்திரை.

அதையே தலைவலி மாத்திரை என்கிறோம்.

அது போல் மார்கழி பீடை ஏற்படுத்தும் மாதம் அல்ல

பீடைகளை நீக்கும் மாதம்!

மார்கழியின் குளிர் நடுக்கும் காலையில் வீதி வீதியாகப் பஜனைக் கோஷ்டி வரும்

நானும் பஜனையில் கலந்து கொண்டது உண்டு

வயதானபின் அல்ல;கல்லூரி நாட்களில்

காரணத்தைச் சொல்லவும் வேண்டுமா?

மார்கழியின் மற்றோர் விசேஷம்-கோலம்.வீட்டு வாசலைத் தெளித்துப் பெருக்கி அழகான பெரிய பெரிய கோலங்களாக வரைந்து,நடுவில் ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும்.

வாசலும் கோலமும் மட்டுமா அழகு!

இன்று சென்னையில் குடியிருப்புகள் பெருகிப் போனபின், பெரிய கோலங்கள் போட ஏது இடம்.?ஆயினும் மைலாப்பூர் மாதிரி சில இடங்களில்,சில வீடுகளில் இந்தப் பழக்கம் அழியாமல் காப்பாற்றுப்பட்டு வருகிறது.மைலாப்பூர் விழா நடக்கும்  நேரத்தில், மயிலையில் மாட வீதியில் கோலப் போட்டியே நடை பெறும்.அன்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அந்த அழகை!

எங்கள் காலனிப் பிள்ளையாருக்கு  இந்த மாதம் வழக்கமாக் காலைப் பிரசாதம் இயன்றவர்கள் செய்வதுண்டு

அதற்கான அறிவிப்பு எங்கள் பலகையில்.....


என் பங்கு ஒரு நாளைக்கு

வழக்கமான வெண்பொங்கல்தான்,வேறென்ன.

இம்மாதம் முழுவதும் சீக்கிரம் எழுந்து குளித்து கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்

நல்லதே நடக்கும்.

22 கருத்துகள்:

  1. //நானும் பஜனையில் கலந்து கொண்டது உண்டு. வயதானபின் அல்ல; கல்லூரி நாட்களில். காரணத்தைச் சொல்லவும் வேண்டுமா? மார்கழியின் மற்றோர் விசேஷம்-கோலம்.//

    புரிகிறது. நன்கு புரிகிறது. புரியும்போதே ஓர் புத்துணர்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது. பகிர்வுக்கு நன்றிகள், சார். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்துனர்ச்சி ஏற்படாமல் இருக்க முடியுமா?
      நன்றி ஐயா

      நீக்கு
  2. //என் பங்கு ஒரு நாளைக்கு

    வழக்கமான வெண்பொங்கல்தான்,வேறென்ன.

    இம்மாதம் முழுவதும் சீக்கிரம் எழுந்து குளித்து கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்//

    என்னிக்கு ? எந்தக் கோவிலில் ? அட்ரஸ் ?
    எத்தனை மணிக்கு பொங்கல் வினியோகம்?
    தொட்டுக்க என்ன ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரசாதத்துக்கெல்லாம் தொட்டுக்க வேண்டுமா?பிரசாதமே தொட்டுக்கற அளவுதானே!
      நன்றி சார்

      நீக்கு
  3. நானும் பஜனையில் கலந்து கொண்டது உண்டு
    வயதானபின் அல்ல; கல்லூரி நாட்களில்
    காரணத்தைச் சொல்லவும் வேண்டுமா ?
    ஹாஹாஹா காரணத்தை சொல்லி இருக்கலாம் ஐயா

    ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும்.
    வாசலும் கோலமும் மட்டுமா அழகு !
    ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான எதுவும் எப்போதும் மகிழ்ச்சி தரவல்லது-கீட்ஸ்
      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  4. பீடு உடைய மாதம் என்பது மறுவி பீடை மாதம் ஆகிவிட்டது என்பது என்னுடைய கருத்து ஐயா! மார்கழி அதிகாலை வெண்பொங்கல் ருசியே தனிதான்! நன்றி! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பொங்கல்! முழங்கைவழிவார! எங்கள் ஊரில் கார்த்திகை மாதம் மாலை முடிந்து இரவு அரும்பும் நேரம் வீதி வழி சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே போவது வழக்கம். அது போல மார்கழியில் காலையில் பஜனை. இரண்டிற்கும் சரியாகச் செல்வதுண்டு எப்போது? வீதி உலா முடிந்து சரியாக கிராமத்துப் பொது வீட்டிற்குள் நழையும் போது. ஏன் அப்படி? அப்போதுதானே அங்கு பிரசாதம் கிடைக்கும்! அதற்குத்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடு மண்டகப்படி. இதில் தரப்படும் பிரசாதத்தில் என்ன உள்ளன? சுவை என்று வாய்க்கும் வேலை கொடுத்துக் கொண்டே அந்தச் சிறியவயதுக் காலங்கள்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    மார்கழியின் சிறப்பு பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. //மார்கழி பீடை ஏற்படுத்தும் மாதம் அல்ல

    பீடைகளை நீக்கும் மாதம்!//

    சரியாய் சொன்னீர்கள்.

    இயந்திர மயமாகிவிட்ட இப்போது யார் காலையில் கோலம் போடுகிறார்கள்? அப்படியே போட்டாலும் அது அரிசி மாவு கொண்டு போடப்படுவதில்லை. எல்லாம் காலம் செய்த ‘கோலம்’,

    பதிலளிநீக்கு
  8. மார்கழியில் காலையில் எங்களை எழுப்பிவிட்டமைக்கு நன்றி. தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  9. கிராமங்களில் இன்றும் செய்கிறார்கள்! அது தனி அழகுதான்!

    பதிலளிநீக்கு
  10. மார்கழிச் சிறப்பு அருமை
    இன்றைய இளசுகள்
    இதை உணர வேண்டும்!

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு