தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 29, 2015

நான் மகான் அல்ல!

(நானும் ரவுடிதான் தொடர்ச்சி....)


அம்மன் கோவில் விபூதி குங்குமத்தை இட்டுக் கொண்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுத் தூங்க முயற்சித்தான். தான் செய்த பாவங்களை கழுவ ஒரே மார்க்கம் கஷ்டப் படும் மக்களுக்கு உதவி செய்ய பணம் சேர்த்து  தன்னை,தான தர்மங்களில் ஈடுபடுத்திக் கொள்வது தான் என்று தீர்மானித்தான். நள்ளிரவுக்குப் பிறகு தூக்கம் கண்களைத் தழுவியது.

மறுநாளே நீதிபதி மாரியிடம் மீதி இருந்த ரூபாயை முதலாகப் போட்டு மாரியை தொழில் செய்யத் தூண்டினார். கணக்கு வழக்குகளை பார்க்க மற்றும் மாரிக்கு சரளமாக எழுதப்படிக்க, இவற்றை கற்பிக்க ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியரை மாதம்  500 ரூபாய்  சம்பளத்தில் நியமித்தார்.

சமயபுரம் மாரியம்மன் தன் ஊர் மாரி மீது  கருணை மும்மாரி பொழிந்தாள்.உறவினர் அவனை மதிக்கத் தொடங்கினார். விரைவில் கல்யாணம் ஆகிவிடும். தினமும் தீபம் ஏற்றி மலர் வைத்து சமயயுரம் மாரியம்மன் ,தாய் தந்தையரை வணங்குவான்.



”நானும் ரௌடி தான்என்று உள்ளமுருகி மன்னிப்பு கேட்பான்.

(தொடரின் தலைப்பு வந்து விட்டதா?-செ.பி.)

இன்ஸ்பெக்டர் ராஜவேலுவின் வரவு சாதாரணமானது அல்ல. மீண்டும் மாரியான ரிஷி, தற்சமயம் போலீஸ் வட்டத்தில் கண்காணிப்பதற்கு உள்ளாகியுள்ள ஒரு நபர். சாட்சி களே இல்லாத குற்றத் தைச்  செய்த ஒருவனை, அளவில்லாத மன அழுத்தத்தை கொடுத்து, உண்மையை அவன்   வாயி லிருந்தே வரவழைப்பது தானே ராஜவேலுவிற்கு மேலதிகாரிகள் இட்ட பணி. அவர் அதை எப்படி கொண்டு செல்வார்?

மாரி ராஜவேலு உறவு வினோதமானது. ராஜவேலு பாயடியில் புகுந்தால், கோலத் திற்கடியில் சென்று ஒளிந்து கொள்ளும் திறமை படைத்தவன் மாரி தற்பொழுது மாரியின் நம்பிக்கை உச்சியில் உள்ளது.

மாரிக்கு சமயபுரத்தாள் அருள் உண்டு. நீதிதேவனின் துணை உண்டு. ராஜவேலுவிற்கு மாரியின் மீது துளிகூட சந்தேகம் எழ எந்தவிதமான சாட்சிகளும் இல்லை. வங்கியின் கணக்கில் ஐம்ப தாயிரம் ரூபாய் ரொக்கம் போட்டது ஒரு பெரிய விஷயமல்ல. துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று இலட்ச இலட்சமாக வங்கியில் ரெமிட் செய்பவர் பலர், திருச்சியை சுற்றி வாழ்ந்தனர். அவர்களோடு ஒப்பிடும்போது மாரியின் முதலீடு ஒரு ஜஜூபி. வங்கியிலும் மாரியை சந்தேகிக் கவில்லை. அவன் முன்னேறுவது குறித்துப் பொதுவாக சந்தோஷப்படுபவர்களே அதிகம்.

மாரியின் முக்கியமான பிளஸ் பாயிண்ட் ,போலீஸ் பதிவுகளில் அவன் பெயர் இதுவரை ஏறியதில்லை சட்ட ரீதியில் அவன் ஒரு நல்ல பிரஜை. நீதி நின்று கொல்லும் என்பது உண்மையெனில் மாரி மாட்டிக்கொள்ளக்கூடும். இப்போது மாரிக்கு நல்லநேரம்.

எதிர்காலம் மாரியை என்ன பண்ணுமோ?

அதுவரை மாரி சந்தோஷமாக இருந்து விட்டு போகட்டுமே?

ஆக்கம் பார்த்தசாரதி

(முடிவா?தொடக்கமா?)

7 கருத்துகள்:

  1. சுபமுடன் முடித்தீர்கள் ஐயா மாரி நலமுடன் வாழட்டுமே... ஆகவே வேறு தொடங்குங்கள்..

    பதிலளிநீக்கு
  2. //”நானும் ரௌடி தான்” என்று உள்ளமுருகி மன்னிப்பு கேட்பான்.
    (தொடரின் தலைப்பு வந்து விட்டதா?-செ.பி.)//

    நான் மகான் அல்ல என்பது பொருத்தமாக இருந்திருக்குமோ?

    முடிவா?தொடக்கமா? என்று முடித்திருக்கிறார் நண்பர் திரு பார்த்தசாரதி அவர்கள். இது முடிவின் தொடக்கம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.
    தம +1

    பதிலளிநீக்கு
  4. அதுவும் சரிதான் மாரி சந்தோஷமாக வாழட்டுமே! இப்போது உண்மை உறங்கினாலும், என்றேனும் விழித்துவிடுமோ??!! அதுவரையேனும்!!

    எதிர்காலம் என்ன பண்ணுமோ??!! ஓ அப்படினா இது முடிவல்ல....தொடரும் போல இருக்கே!

    பதிலளிநீக்கு
  5. முடிக்காதது போலுமோர் முடிவு. அப்படித்தானே?

    பதிலளிநீக்கு
  6. மாரி மீண்டும் சோமாறி ஆகாமல் போனால் சரிதான் :)

    பதிலளிநீக்கு