காதல் கடிதம் எழுதி அது காதலியின் கையில் கிடைக்காமல் ,அவள் அப்பா
கையில் கிடைத்தால் அவர் கொடுப்பாரு பாருங்க ஒரு பரிசு….அம்மாடியோ!
மாறாக அவள் தங்கையும் வாலிபத்தின் வாசலில் நிற்க,கடிதம் அவளிடம்
கிடைத்து,என்னை விட்டு விட்டு என் அக்காவை ஏன் காதலிக்கிறான் என்ற கோபத்தில்,விஷமத்தனம்
செய்து அதனாலும் பரிசு கிடைக்கலாம்!
எனவே இயன்றவரை பேரைக் குறிக்காமல், கண்ணே,அன்பே, அமுதே,ஆருயிரே
என்று எழுதினால் பிரச்சினை இல்லை.சம்பந்தப்பட்டவர்(ள்) கையில் கிடைத்தால் அவளுக்குத்
தெரியும் அது அவளுக்குத்தான் என்று.மாறிப்போனாலும் பிரச்சினை இல்லை.தங்கையும் காதலிக்க
(தங்கையையும் காதலிக்க ) ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது! அவள் அப்பாவிடம் என்றால் ”உங்கள்
மகளுக்கு என்று ஏன் சார் நினைக்கிறீர்கள்?இது ஒரு அழகான பெண்ணுக்கு” என்று சொல்லிச்
சமாளிக்கலாம்.(காதலியிடம் பின்னர் மண்டியிட்டு விடலாம்!)
ஆனாலும் இந்தக் கடிதம் எழுதுவது என்பது கொஞ்சம் சிக்கலான விசயம்தான்.அன்பைத்
தெரிவிக்க ஆயிரம் வழிகள்.அதெல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனாலும் காதலிப்பவனால் சும்மா இருக்க முடியாது.கை பரபரக்கும்.மனத்தில்
தோன்று வதை யெல்லாம் அவளிடம் தெரிவித்து விட வேண்டும் என்ற துடிப்பு.கடிதம் எழுதும்போது
அவளையே நேரில் பார்த்து அவளிடம் சொல்வது போன்ற ஓர் உணர்வு;இவையெல்லாம் இழக்க முடியுமா?
எனவே கடிதம் எழுத வேண்டியதுதான்;மாட்டிக் கொள்ளாமல் அனுப்புவது முக்கியம்.
தொடக்கத்தில் சொன்னது போல் அப்பாவிடமோ,தங்கையிடமோ பரிசு கிடைக்கலாம்! அல்லது
காதலியே பரிசாகக் கிடைத்தாலும் கிடைக்கலாம்(அது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்பது
பின்னர்தான் தெரியும்.)
எப்படியோ ஏதாவது பரிசு கிடைத்தால் சரி.
பிள்ளையார்,ராமர், நாராயணர்,அப்பா(காதலியின்)வின் அருட் பார்வை பட்டால் பரிசு நிச்சயம்!
நல்லாவே சொல்றீங்க ஆலோசனை! பிரம்மசாரிகளுக்கு உதவும்! நன்றி!
பதிலளிநீக்குயார்ய்க்காவது உதவினாச் சரி
நீக்குநன்றி சுரேஷ்
/// அது அதிர்ஷ்டமா...? அல்லது துரதிர்ஷ்டமா...? என்பது பின்னர்தான் தெரியும்... ///
பதிலளிநீக்குஹா... ஹா...
நன்றி தனபாலன்
நீக்குஹாஹாஹா!
பதிலளிநீக்குஅண்ணன்மார்கிட்டே லட்டர் மாட்டினாலும் பரிசு தப்பாது, என்னவோ தல மாட்டிக்காம காதல் கடிதம் எப்பிடி எழுதி கொடுப்பது என்று சொல்லி வருங்கால காதலர்களை வாழவைத்தமைக்கு நன்றி ஹி ஹி....
பதிலளிநீக்குசீனு கிளப்பி விட்டு விட்டார்!
நீக்குநன்றி
நீங்க எவர் யூத் தல! மாட்டிக்க மாட்டீங்க. அழகா அருமையா எழுதி அனுப்பிடுங்க!
பதிலளிநீக்குநம்மாலே அதெல்லாம் முடியாதுங்க!
நீக்குநன்றி
ஹா ஹா ஹா தல நீங்க இங்க எழுத வேண்டிய ஆளே இல்ல தல :-)
பதிலளிநீக்குஎங்க எழுதலாங்கறீங்க?
நீக்குநன்றி சீனு
இப்போது எங்கே காதலை கடிதத்தில் சொல்கிறார்கள். எல்லாம் கைபேசி மூலம் தானே! அதனால் தான் ‘திடங்கொண்டு போராடு’
பதிலளிநீக்குசீனு அவர்கள் காதல் கடிதம் எழுத ஒரு போட்டியே வைத்திருக்கிறார். இருப்பினும் உங்களது டிப்ஸ் சிலருக்கு உதவும்!
சீனு போட்டிதானே இதுக்கு ஆதாரமே!
நீக்குகடைசி வரி பார்த்தீர்களா?
நன்றி
சரியாகச் சொன்னீர்கள்
பதிலளிநீக்குமாட்டிக்கொண்டு அவஸ்தைப்படாமல் இருக்க
சிறந்த வழி இதுதான்
சுவாரஸ்யமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ரமணி
நீக்குtha.ma 4
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் ஐயா. ஹஹ இந்த கால பிள்ளைங்களுக்கு எல்லாம் தெரியும். நாம் சொல்லவேண்டியதே இல்லை.
பதிலளிநீக்குஅதானே!
நீக்குநன்றி சசிகலா
அனுபவம் பேசியிருக்கிறது, இருந்தாலும் நல்ல யோசனைகள்தான்.
பதிலளிநீக்குநன்றி கும்மாச்சி
நீக்குஇன்னா வாத்யாரே
பதிலளிநீக்கு"ஜங்கல்புக்" காலத்துலேர்ந்து இன்னும் வர்லியாபா?
இப்பொ லெட்டர்லாம் யார் எய்துறா?
நேரா டேடிங்க்தான்.
மாட்னாலும் நோ "பரிசு"
பெருசுங்களும் சனியன் வுட்டா போதும் தொலைதுன்னு கீறாங்க!
சீனு ப்ரதர் ஒரு போட்டி வச்சிகிறாரு ப்ரதர்.அத்தப் பட்சனா,எனக்குத் தோண்ணத எய்திக்கினேன்!
நீக்குடேங்க்ஸ் ப்ரதர்!
பெரியவர்கள் ஒரு விஷயம் சொன்ன அதை நல்லா கேட்டுகிறனும் காரணம் அவங்க சொல்லுவதெல்லாம் அனுபவத்தில்தான்...ஆமாம் இளம் வயதில் நிறைய பரிசு வாங்கி இருப்பீங்களோ?
பதிலளிநீக்குஆமாம்னு சொன்னா நம்புவீங்களா இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா?!
நீக்குநன்றி
அட்வைசுக்கு நன்றி ஐயா! அப்படியே உங்க கேர்ள் ஃப்ரெண்டுக்கு ஒரு லெட்டர் அனுப்பலாமே
நீக்குஅது வயசுக் கோளாறு தானா சரியாகிடும்.சரிசெய்துவிடும்
பதிலளிநீக்குஅதிர்ஷ்டமா... துரதிர்ஷ்டமா என பின்னால் தான் தெரியும். அதுதானே பிரச்சனையே! :)))))
பதிலளிநீக்குநல்ல ஆலோசனை. சில வருடங்களுக்கு முன்னாடி கிடைக்காம போச்சே! :)))))
ஹா...ஹா.......
பதிலளிநீக்குபரிசு கிடைக்க வாழ்த்துகள்.