காதல் கடிதம் எழுதி அது காதலியின் கையில் கிடைக்காமல் ,அவள் அப்பா
கையில் கிடைத்தால் அவர் கொடுப்பாரு பாருங்க ஒரு பரிசு….அம்மாடியோ!
மாறாக அவள் தங்கையும் வாலிபத்தின் வாசலில் நிற்க,கடிதம் அவளிடம்
கிடைத்து,என்னை விட்டு விட்டு என் அக்காவை ஏன் காதலிக்கிறான் என்ற கோபத்தில்,விஷமத்தனம்
செய்து அதனாலும் பரிசு கிடைக்கலாம்!
எனவே இயன்றவரை பேரைக் குறிக்காமல், கண்ணே,அன்பே, அமுதே,ஆருயிரே
என்று எழுதினால் பிரச்சினை இல்லை.சம்பந்தப்பட்டவர்(ள்) கையில் கிடைத்தால் அவளுக்குத்
தெரியும் அது அவளுக்குத்தான் என்று.மாறிப்போனாலும் பிரச்சினை இல்லை.தங்கையும் காதலிக்க
(தங்கையையும் காதலிக்க ) ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது! அவள் அப்பாவிடம் என்றால் ”உங்கள்
மகளுக்கு என்று ஏன் சார் நினைக்கிறீர்கள்?இது ஒரு அழகான பெண்ணுக்கு” என்று சொல்லிச்
சமாளிக்கலாம்.(காதலியிடம் பின்னர் மண்டியிட்டு விடலாம்!)
ஆனாலும் இந்தக் கடிதம் எழுதுவது என்பது கொஞ்சம் சிக்கலான விசயம்தான்.அன்பைத்
தெரிவிக்க ஆயிரம் வழிகள்.அதெல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனாலும் காதலிப்பவனால் சும்மா இருக்க முடியாது.கை பரபரக்கும்.மனத்தில்
தோன்று வதை யெல்லாம் அவளிடம் தெரிவித்து விட வேண்டும் என்ற துடிப்பு.கடிதம் எழுதும்போது
அவளையே நேரில் பார்த்து அவளிடம் சொல்வது போன்ற ஓர் உணர்வு;இவையெல்லாம் இழக்க முடியுமா?
எனவே கடிதம் எழுத வேண்டியதுதான்;மாட்டிக் கொள்ளாமல் அனுப்புவது முக்கியம்.
தொடக்கத்தில் சொன்னது போல் அப்பாவிடமோ,தங்கையிடமோ பரிசு கிடைக்கலாம்! அல்லது
காதலியே பரிசாகக் கிடைத்தாலும் கிடைக்கலாம்(அது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்பது
பின்னர்தான் தெரியும்.)
எப்படியோ ஏதாவது பரிசு கிடைத்தால் சரி.
பிள்ளையார்,ராமர், நாராயணர்,அப்பா(காதலியின்)வின் அருட் பார்வை பட்டால் பரிசு நிச்சயம்!