தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

சங்கிலி

 

 சில நாட்களுக்கு முன் ஒரு நாள் காலை திடீரென்று தலை சுற்ற ஆரம்பித்தது.(தலைக்கே தலை சுற்றலா என்று பதிவு நண்பர்கள் கேட்பது காதில் விழுகிறது!) அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.

டாக்டர் வந்து பார்த்தார்.பரிசோதனைகள் செய்தார்.கடைசியில் சொன்னார் “உங்களுக்கு வெர்டிகோ”  என்று!

 

ஏனக்குத் தெரிந்து வெர்டிகோ என்றால் உயரங்களின் பயம் (fear of heights).இங்கு நான் ஒரு ஸ்டூலில் கூட ஏறவில்லையே!இது வேறு வெர்டிகோ போலும்!

 

நான் பல ஆண்டுகளுக்குமுன் ஒரு ஹிட்ச்காக் படம் பார்த்திருக்கிறேன்.

படத்தின் பெயர் வெர்டிகோ.

அதில் நாயகனுக்கு உயரத்தைக் கண்டால் பயம்.

அதைப் பயன்படுத்தி ஒரு கொலை நடக்கிறது

இந்தப் படத்தைத் தழுவித் தமிழில் ஒரு படம் எடுத்தார்கள்.

பெயர்”கலங்கரை விளக்கம்”.

 

கலங்கரை விளக்கம் என்பது கடற்கரையில்,கடலில் செல்லும்

கலங்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப் படுவது.

 

சோழர் காலத்திலேயே கடல் வாணிபம்,கடற்படை எல்லாம் இருந்த காரணத்தினால்,கலங்கரை விளக்கமும் இருந்தது.கோடிக்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கமே சாட்சி.

 

புராணகாலத்திலேயே வான் ஊர்தியும்இருந்திருக்கிறது.

இராமாயணத்தில் புஷ்பக விமானம் பற்றிச் சொல்லப்படுகிறது

மகாபாரத காலத்தில் போரில் பயங்கரமான அஸ்திரங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.நாகாஸ்திரம்,அக்னியாஸ்திரம்என்று பலப் பல.அனைத்தையும் விட சக்தி வாய்ந்தது பிரம்மாஸ்திரம்.அதுதான் இன்றைய அணுகுண்டாக இருக்க வேண்டும்.

 

அணுகுண்டு என்றதும் தீபாவளி நினைவு வருகிறது.சிறுவனாக இருந்தகாலத்தில் அணுகுண்டு வெடித்து அந்தப் பேரொலியைக் கேட்பதில் பெருமகிழ்ச்சி.

ஆனால் இப்போதோ,காதைப் பொத்திக் கொண்டு உட்காரத் தோன்றுகிறது.

 

ஒரு குடும்பத்தலைவருக்கு தீபாவளி என்றால் கலக்கம்தான்,செலவுகளை எண்ணி.

அனைவருக்கும் புதுத்துணி,இனிப்பு கார வகைகள் ,பட்டாசு என்று எத்தனை.

தலை சுற்ற ஆரம்பித்து விடும்.

அது நிச்சயம் வெர்டிகோ இல்லை!

9 கருத்துகள்:

  1. எதற்கும் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.இயன்றதெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.தனியன் ஆயிற்றே!

      நீக்கு
  2. எங்கேயோ  ஆரம்பித்து எங்கேயோ கொண்டுபோய்விட்டீர்கள்! டி ஆர் மகாலிங்கம் நடித்து 'வேதாள உலகம்' என்றொரு மாயாஜாலப்படம் வந்ததது.  அதில் இளவரசனாக வரும் ராஜசிம்மன் -அதுதான் டி ஆர் எம் - "உங்களை எல்லாம் அணுகுண்டு போட்டு கொன்று விடுவேன்" என்று பயமுறுத்துவார்!

    வெர்டிகோவுக்கு சும்மா படுத்து தூங்கி ரெஸ்ட் எடுத்தால் போதுமா அல்லது பீடாஹிஸ்டிடின் ஸ்டூஜிரான் போன்ற மாத்திரைகள் சாப்பிட வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  3. டாக்டர் பீடாஹிஸ்டின்(வெர்டின்) மாத்திரை இரண்டு வாரம் சாப்பிடச் சொன்னார்.
    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  4. ஓ வெர்டிகோவா? சிலருக்கு நீங்கள் சொல்லியிருப்பது போல் உயரம் பிரச்சனையாக இருக்கும்தான். வயதானால் சிலருக்கு இன்னர் இயர் ஃப்ளூயிட் டிஸ்டர்ப் ஆனாலும் வெர்டிகோ வரும், ஸ்பாண்டிலைட்டிஸ் இருந்தாலும் வெர்டிகோ வரும்.

    வெர்டிகோவுக்கு இன்னர் இயர் ஃப்ளூயிட் காரணம் என்றால் Epley maneuver செய்தால் சரியாகிவிடும்,. உங்களுக்கு அருகில்தான் இருக்கிறார் டாக்டர் சுந்தர். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம், திருவான்மியூர் இம்காப்ஸ் அடுத்த வளைவுக்குள் ஆனந்தா அபார்ட்மென்ட்ஸ். இப்போதும் அங்குதான் அவர் க்ளினிக் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் இந்தப் பயிற்சியை செய்கிறார்.

    எதனால் என்று பாருங்கள் சார், இந்த வெர்டிகோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெர்டிகோ பற்றிய தங்கள் அறிதல் பிரமிக்க வைக்கிறது.மீண்டும் வராது என நம்புகிறேன்.பார்க்கலாம்
      நன்றி

      நீக்கு
  5. //தனியன் ஆயிற்றே!..//

    பதிவுலகின் இனியன்!..

    பதிலளிநீக்கு

  6. சங்கிலியில் வளையங்கள் இணைந்து திரும்பவும் தொடங்கிய இடத்கிற்கே வருவதுபோல வெர்டிகோவில் தொடங்கி வெர்டிகோவில் முடிக்க தங்களால் தான் முடியும். இப்போது அந்த தலைசுற்றல் இல்லை அல்லவா/ , இதைப்படிக்கும்போது நான் வேளாண் அறிவியல் பட்டப்படிப்பு படித்தபோது ,மூன்றாம் ஆண்டில் ஆண்டுத்தேர்வில் வாய்மொழித் தேர்வில் ( viva voce) தேர்வாளர் ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு பதில் சொன்னவுடன் அந்த பதிலிலிருந்து இன்னொரு கேள்வியைக்கெட்டு பதில் தந்தவுடன் பிறிதொரு கேள்வியைக்கேட்டு சுமார் 20 மணித்துணிகள் தொடர்சியாக சங்கிலிக் கேள்வியைக் கேட்டது நினைவிற்கு வந்தது,

    பதிலளிநீக்கு