தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 18, 2022

வாழ்க்கை ஒரு விளையாட்டு..3.---ஹாக்கி

 

நானும் ஹாக்கியும் சம்பந்தப்பட்ட. மற்றுமொரு நிகழ்ச்சி.

கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும்,பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.அதற்காக நான்கைந்து குழுக்கள் அமைக்கப்படும்.அந்த ஆண்டு ஒரு குழுவின் தலைவனாக நான் நியமிக்கப்பட்டேன்.(எனது ஆரஞ்சுக் குழுதான் அந்த ஆண்டு சாம்பியன் குழுவாக வந்தது.)

போட்டிகளில் ஹாக்கியில் என் தலைமையில் என் குழு ஆடியது எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினோம்.மிகவும் கடுமையான போட்டி.ஆட்டத்தில் என் இடம்,வலது கடைசி(right-out,right extreme).நான் பாஸ் செய்த பந்தை வாங்கி,என் அணி ஆட்டக்காரர் ஒரு கோல் போட்டார். எதிர் அணியினரும் ஒரு கோல் போட்டனர்..ஆட்டம் மேலும் கடுமையானது.நான் என் முழுத்திறமையையும் காட்டி ஆடினேன்.நானே பந்தை எடுத்துச் சென்று ஒரு கோல் போட்டேன்.எதிர் அணியினரால் எங்கள் பாதுகாப்பை மீறி கோல் போட முடியவில்லை

 

.ஆட்டத்தில் சிறிது வன்முறை தலையெடுத்தது.அப்போது ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் நடுவிலிருந்து  உரத்த குரல் எழுந்தது” கேப்டனை அடிடா”.என்று(உண்மையில் வந்த வார்த்தைகள் வேறு!)சிறிது நேரத்தில் எதிர் அணி ஆட்டக்காரர் ஒருவர் என்னுடன் மோதும் போது,மட்டையால் என் காலில் அடித்தார். அதைப் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்து வேகமாக ஆடினேன். வெளியிலிருந்து என் வகுப்புத்தோழனின் குரல் வந்தது. ”சந்துரு,உன் காலைப் பார்” குனிந்து பார்த்தேன்.குருதி வழிந்து கொண்டிருந்தது.ஆட்டம் முடிய சில மணித்துளிகளே மீதம் இருந்ததால்,கைக்குட்டையால் ஒரு கட்டுப் போட்டு விட்டுத் தொடர்ந்து ஆடினேன்.இறுதியில் எங்கள் அணி வென்றது.

 

எங்கள் ஆட்டம் பலராலும் பாராட்டப் பட்டது

 

முடிவில் வெற்றி பெற்ற ஆரஞ்சுக்குழுவின் தலைவன் என்ற முறையில் குழுவுக்கானபரிசைப் பெற்றுக் கொண்ட நான்.ஹாக்கி வெற்றிக்கான பரிசை நன்கு விளையாடிய வேறொரு  மாணவரைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி அனுப்பி அதிலும் நல்ல பெயர் பெற்றேன்!

 

இந்த விஷயத்தில் தல தோனிக்கெல்லாம் நான் முன்னோடி,தெரியுமா?

 

டிஸ்கி: தம்பட்டம் இதோடு போதும் என நினைக்கிறேன்.அடுத்த பதிவில் வேறு ஏதாவது பேசுவோமா!

8 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. தம்பட்டம் ரசிக்க வைத்தது. அடுத்த பதிவை எழுதுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. "எப்போ உன்மேல நம்பிக்கை இல்லாம வன்முறைல இறங்கிணியோ அப்பவே நீ தோத்துட்டடா..." என்று கில்லி விஜய் மாதிரி சொல்லியிருக்க வேண்டும்!  எதிரணி தலைவன் வெட்கப்படவே இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரிதானே!ஆட்டம் முடிந்ததும் எல்லாம் மறந்து போகும்..நன்றி

      நீக்கு
  3. ஹாக்கி வெற்றிக்கான பரிசை நன்கு விளையாடிய வேறொரு மாணவரைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி அனுப்பி அதிலும் நல்ல பெயர் பெற்றேன்!//

    சூப்பர்!! சார்!! இந்த மனப்பான்மை ஒரு குழு தலைவனுக்கு மிக முக்கியம். ரசனையான அனுபவங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஒரு தலைவன் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை அப்போதே நிரூபித்துவிட்டீர்கள் . பலே!

    "மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்;
    கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்;
    செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
    கருமமே கண்ணாயினார்.”

    என்று குமரகுருபரர் சொன்னது தங்களைப் போன்றோர்களுக்காகத்தான் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு