இது ஒரு குட்டிப் பதிவு
ஒரு சிறுவனும் சிறுமியும் விளயாடிக் கொண்டிருந்தனர்.
சிறுவனிடம் அழகான கோலிக் குண்டுகள் இருந்தன.
சிறுமியிடம் இனிய மிட்டாய்கள் இருந்தன.
சிறுவன் சொன்னான்”நீ உன்னிடம் இருக்கும்
எல்லா மிட்டாய்களையும் எனக்குக் கொடுத்தால் நான் என்னிடம் இருக்கும் எல்லாக் கோலிகுண்டு களையும்
உனக்குத் தருவேன்”
சிறுமி ஒப்புக் கொண்டாள்.
சிறுவன் அவளுக்குத் தெரியாமல் மிக அழகிய
கோலிக்குண்டு ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு,மீதியைக் கொடுத்தான்.
ஆனால் சிறுமி தன்னிடம் இருந்த எல்லா மிட்டாய்களையும்
அவனுக்குக் கொடுத்தாள்.
அன்றிரவு சிறுமி வழக்கம் போல் நிம்மதியாக
உறங்கிப் போனாள்.
ஆனால் சிறுவனோ தான் கோலியை மறைத்தது போல்
அவளும் மிட்டாய்களை மறைத்திருப்பாளோ என்ற எண்ணத்திலேயே தூக்கம் இழந்தான்.
ஆம்!உறவுகளும் அப்படித்தான்.
பரஸ்பர உறவுகளில் நாம் நூறு விழுக்காடு உண்மையாக
இல்லையெனில், நமக்கு மற்றவரும் நூறு விழுக்காடு
உண்மையானவர்களாக இருந்தனரா என்ற சந்தேகம் அரித்துக் கொண்டிருக்கும்.
நம்மைப் போல் அவர்களும் ஏதேனும் மறைத்திருப்பரோ
என்ற எண்ணமே உறவைப் பாழ்படுத்தி விடும்.
இதைப் புரிந்து நடந்தால் உறவுகள் மேம்படும்.
சுருக்கமான ஆனால் ஆழமான அர்த்தம் கொண்ட குட்டிக் கதை ஐயா!
பதிலளிநீக்கு-- இவ்வளவு காலமும் உங்கள் ப்ளாக் துள்ளிக்கொண்டு இருந்தது! அதனால் வர முடியவில்லை! நேற்று, உங்கள் ப்ளாக் படிப்பதற்கு என்ன வழி என்று சக நண்பர்களிடத்தில் கேட்டிருந்தேன்! அவர்கள் சொன்ன வழி முறையைப் பின்பற்றி, இப்போது உங்கள் ப்ளாக் படிக்க கூடியதாக இருக்கிறது ஐயா!!!
இந்த பதிவுக்கும், சமீபத்திய மாநில மற்றும் மைய அரசியல் நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் உண்டா?
பதிலளிநீக்குஅருமையா சொன்னீங்க .
பதிலளிநீக்குஉறவுகள் மேம்பட நல்லதொரு சிறுகதை... உணர வேண்டிய கருத்து...
பதிலளிநீக்குஎளிமையான குட்டிக் கதையின் மூலம் அருமையான, அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் அறிவுரையைச் சொல்ல உங்களால மட்டும்தான் முடியும் நண்பரே!
பதிலளிநீக்குஉறவுகளை பலப்படுத்த நல்ல ஆலோசனை ஒரு கதையின் மூலம்ம். பகிர்வுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குநல்லஅறிவுரைதரும் கதை.
பதிலளிநீக்குசின்ன உதாரணம் மூலம் மிகப் பெரிய விஷயத்தினைச் சொல்லி இருக்கீங்க தல!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.