தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 14, 2012

காதல்-திருக்குறள் கதை-பகுதி-2

அந்த நாளுக்குப்பின் குமாருக்கு உலகமே வெறுமையாய்த் தோன்ற ஆரம்பித்தது. ”எங்கெங்கு காணினும்” அவளே தெரிந்தாள்.நோயால் பீடிக்கப் பட்டவன் போல் ஆனான். எதிலுமே பிடிப்பில்லாத ஒரு நிலையில் இருந்தான்.

ஒரு வாரத்துக்குப் பின்-

 

ஞாயிறன்று தவிர்க்க முடியாத ஒரு திருமணத்துக்குப் போக நேர்ந்தது.வேண்டா வெறுப்பாகத்தான் சென்றான். மண்டபத்தில் நுழைந்து,தெரிந்த சிலரிடம் பேசியவன், மேடைப்பக்கம் நகர்ந்தான்.சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்றான்.அவள்! அவளேதான்!ஒரு வாரமாக அவனைப் பிடித்திருந்த நோய் நீங்கியது போல் உணர்ந்தான். உள்ளத்தின் வெறுமை நீங்கி மகிச்சி பொங்கியது.

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து,”

(நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன; ஆனால் அணிகலன்கள் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.)

அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவன் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அவளுடன் பேசிக்கொண்டிருந்த இருவர் அகன்று விடத் தனியாக விடப்பட்ட அவள் திரும்பினாள்.அவள் பார்வை அவன் மீது விழுந்த அதே நேரத்தில் அவன் அவளை நெருங்கி விட்டான்.

”ஹலோ!”

 

”ஹாய்!”
 

” நான் குமார்-அஷ்வின் குமார்.சி.டி.எஸ் ஸில் வேலை பார்க்கிறேன்”
 

“காயத்ரி-டி.சி.எஸ்.
 

”அன்று நகர் மையத்தில் பார்த்தபின் இவ்வளவு விரைவில் உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை”
 

அவள் லேசாகச் சிரித்தாள்.அவள் அழகிய கண்களும் சிரித்தன.
சிரிக்கும்போது அவள் அழகு கூடுகிறது என்று எண்ணினான். (என்ன அழகு,என்ன அழகு!)

“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு”

(மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி;முத்தே பல்;இயற்கை மணமே மணம்;வேலே மை உண்ட கண்.)

“பெண் வீட்டார் எனக்குத் தூரத்துச் சொந்தம்”-அவன்.
“பிள்ளை வீட்டார் எனக்குத் தூரத்து சொந்தம்”-அவள்

அவன் சிரித்தவாறு சொன்னான்”தூரத்து உறவினர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வந்த நாம் பக்கத்தில் வந்து விட்டோம்”.

அதன் பின் பேசினார்கள்,பேசினார்கள்,பேசினார்கள்--.சேர்ந்தே மேடைக்குச் சென்று பரிசுகளைக் கொடுத்தார்கள்;சேர்ந்தே சாப்பிடப் போனார்கள்.உறவினர்களிடம் விடை பெற்றார்கள். மண்டபத்தின் வாசல் வரை சேர்ந்தே வந்தார்கள்.

”மறுபடியும் எப்போது சந்திக்கலாம்?”அவன் கேட்டான்.

 

“ஏன் சந்திக்க வேண்டும்?’அவள் குறும்பாகக் கேட்டாள்.உடனே அவன் முகம் வாடியதைக் கண்டு சிரித்தவாறே சொன்னாள்”வரும் ஞாயிறன்று ஆர்ட் காலரியில் ஒரு ஓவியக் கண்காட்சி இருக்கிறது.காலை 10 மணிக்கு அங்கு இருப்பேன்."

அவன் சொன்னான்”அன்று அங்கு வருபவர்களுக்கு பிரச்சினை தான்-உயிரில்லாத ஓவியங்களை பார்ப்பதா அல்லது உயிருள்ள ஒவியத்தை ரசிப்பதா என்று”

அவள் அவன் தோளில் செல்லமாகத் தட்டி விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாள்.

அவன் அவள் தட்டிய இடத்தைத் தடவிக் கொண்டே இருந்தான். அவள் போவதை பார்த்துக் கொண்டே நின்றான்.

” என்ன மென்மையான தொடுகை!ஒரு பூவால் தட்டியதைப் போல் ஒரு தொடுகை!எவ்வளவு மென்மையானவளாக இருக்கின்றாள் இவள்!”எண்ணினான்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்”
(அனிச்சப்பூவே!நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்!நீ வாழ்க!யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லிய தன்மை உடையவள்.)

ஒரு பெருமூச்சு விட்டான்.அடுத்த ஞாயிறுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

காத்திருப்பதும் ஒரு சுகம்தானே?

(உங்களுக்கும்தான்!) 

23 கருத்துகள்:

  1. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையாகவே நகர்த்திச் சென்று காக்க வைத்து விட்டீர்கள் ஐயா கடைசியில் ;)))))

    பதிலளிநீக்கு
  3. இப்படிதான் திருக்குறள் படிச்சீங்களா ஐயா?

    பதிலளிநீக்கு
  4. ஞாயிறு வரை காத்திருக்கனுமா?!

    பதிலளிநீக்கு
  5. எங்களுக்கும் காத்திருப்பா........

    காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. காத்திருப்பதும் ஒரு சுகம்தானே?
    சுகம் தான் ....
    அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசம்... அதுதான் எங்கள் பித்தன்... ம் நடத்துங்க...

    பதிலளிநீக்கு
  8. பிரமாதமாக இருக்கிறது. தமிழும் காதலும் சேர்ந்தால் கேட்கவேண்டுமா?

    பதிலளிநீக்கு
  9. காத்திருப்பது சுகம் தான்...

    உங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருப்பது ஒரு சுகம் தான்...

    பதிலளிநீக்கு
  10. நாளை வரைதான்!
    நன்றி.சபாபதி அவர்களே

    பதிலளிநீக்கு
  11. ராஜி கூறியது...

    // இப்படிதான் திருக்குறள் படிச்சீங்களா ஐயா?//

    முப்பாலில் இப்பால் மட்டும் இப்படி!குறளும் பொருளும் உடனே பதிவாயிடுதில்ல!

    பதிலளிநீக்கு
  12. ராஜி கூறியது...

    த ம 4
    ஞாயிறு வரை காத்திருக்கனுமா?!

    அவர்கள்தான்!நீங்கள் நாளை வரைதான்
    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  13. தேர்வு மும்மரத்திலும் வருகை தந்தமைக்கு நன்றி சௌந்தர்

    பதிலளிநீக்கு
  14. குறள் வழி கூறும் காதல் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  15. கதையும் சரி, குறளும் சரி... வெகு அருமை. (எங்க வாத்தியார் இப்படி குறள் சொல்லித் தந்திருந்தா 1330 குறளையும் மனப்பாடம் பண்ணிருப்பேனே!) ஆவலுடன் காத்திருப்பு.

    பதிலளிநீக்கு