தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 20, 2012

எளிது எது? அரிது எது?


தொலைபேசிப் புத்தகத்தில் இடம் பிடிப்பது எளிது!
ஒருவர் இதயத்தில் இடம் பிடிப்பது அரிது!!

மற்றவர் குறைகளை  விமரிசிப்பது எளிது!
தன் குறைகளைக் கண்டறிந்து கொள்வது அரிது!!

அன்பர்கள் மனதைப் புண்படுத்துவது எளிது!
நாம் செய்த காயத்தைக் குணப்படுத்துவது அரிது!!

மன்னிப்பது எளிது!
மன்னிப்புக் கேட்பது அரிது!!

வெற்றியில் களிப்பது எளிது!
தோல்வியைக் கண்ணியமாய் ஏற்பது அரிது!!

கனவு காண்பது எளிது!
கனவை நனவாக்க முயல்வது அரிது!!

தினமும் கடவுளை வணங்குவது எளிது!
எல்லா உயிர்களிலும் கடவுளைக் காண்பது அரிது!!

விரும்புகிறேன் என்று சொல்வது எளிது!
அதை எப்போதும் மெய்ப்பிப்பது அரிது!!

நம்மை மேம்படுத்திக் கொள்ள எண்ணுவது எளிது!
எண்ணத்தைச் செயலாக்குவது அரிது!!

பெற்றுக் கொள்வது எளிது!
கொடுப்பது அரிது!!



34 கருத்துகள்:

  1. பதிவின் மூலம் சொல்வது எளிது.

    படித்து பின்னோட்டம் இடுவது அரிது.

    பதிலளிநீக்கு
  2. கண்டதையும் எழுதுவது எளிது...

    இது மாதிரி எழுதுவது அரிது..!!

    பதிலளிநீக்கு
  3. எளிதும் அரிதும் ந்ன்றாகவே புரிந்தன.

    ////விரும்புகிறேன் என்று சொல்வது எளிது!

    அதை எப்போதும் மெய்ப்பிப்பது அரிது!!//

    இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  4. அறிந்துக் கொண்டேன்..

    அரிதையும்.. எளிதையும்....


    அழகிய பதிவு...

    பதிலளிநீக்கு
  5. எளியது கேட்கின் கூர்வடிவேலோய்... செ.பி.யின் பதிவுகளைப் படித்து கருத்தை உள்வாங்கிக் கொள்ளல் எளிது. அரியது கேட்கின் கூர்வடிவேலோய்... வித்தியாசமான கமெண்ட் சொல்வது அரிதரிது.

    பதிலளிநீக்கு
  6. எளிதும் அரிதுமான கவிதை மிக அருமை

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்! திருவிளையாடல் கே.பி. சுந்தராம்பாள் பாணியில் புதுமையான கேள்வி – பதில்.

    பதிலளிநீக்கு
  8. படிப்பது எளிது
    அதனைப் பின்பற்றுவது அரிது .
    அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  9. அரிது அரிது சென்னை பித்தன் போல் பதிவிடுவது அரிது !

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டமிடுவது எளிது இதுபோல்
    சிந்தித்து எழுதுவது அரிது
    மனம் கவர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
  11. எளிதும் அரிதுமான கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
  12. கமெண்ட் போடுவது எளிது
    பதிவு போடுவது அரிது

    பதிலளிநீக்கு
  13. படிப்பது எளிது-கடை
    பிடிப்பது அரிது



    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. பல அறிய கருத்துக்களை ஒரே நேரத்தில் கூறுவது அரிது ...
    ஆனால் யாரவது அப்படி கொடுத்தால் அதனை படித்து பயன் பெறுவது எளிது வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  15. எளிதும் அரிதும்.

    படித்தேன்... ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  16. அரிது அரிதாகக் காணக்கிடைக்கும் விஷயங்களை அறிவுக்கண் திறக்கும் வண்ணம் தாங்கள் அறியத்தந்தது மட்டில்லா மகிழ்ச்சி ஐயா!!..

    பதிலளிநீக்கு
  17. நிச்சயமாய் அரிதுதான்
    இது போன்ற ஒரு கவிதை நடையை எழுதுவது....அருமை


    நட்புடன்
    கவிதை காதலன்

    பதிலளிநீக்கு