தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 13, 2012

சத்யஜித்ரேயின் “சாருலதா”


முன்பெல்லாம் இணை திரைப்படம்,என்றும்,ஆர்ட் ஃபிலிம் என்றும் சொல்லப்படும் திரைப்படங்களைத் தேடிச் சென்று பார்ப்பது என் வழக்கமாக இருந்தது.70 களின் முன்பாதியில் நான் மதுரையில் பணி புரிந்த காலத்தில் அங்குரே ஃபிலிம் சொசைட்டிஎன்று ஒரு அமைப்பு இருந்தது.ஞாயிற்றுக் கிழமைகளில் காலைக் காட்சியாக ஒரு திரையரங்கில்(அலங்கார்?) சத்யஜித் ரேயின் படங்கள்திரையிட்டு வந்தார்கள்.அதில் ஒரு சில படங்களை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது.ஏனெனில் அப்போது எங்கள் மதுரைக்கிளையின் சார்மேலாளராக இருந்த நான் ஞாயிறன்று கூட அரை நாள் அலுவலகம் சென்று விடுவேன்!

அப்படிப் பார்த்த படங்களில் என் மனதில் நின்ற படங்களில் ஒன்றுசாருலதா.மாதவி முகர்ஜி,சௌமித்ரோ சாட்டர்ஜி ஆகியோர் நடித்த படம்.கதைக் கருவைக் கூறுவதென்றால் ஒரு முக்கோணக் கதைதான்.ஒரு பணக்காரப் பத்திரிகையாளர்.அரசியலில் விருப்பம் உள்ளவர்.அவரது மனைவி;கலை,இலக்கியம்,கவிதை என்று விருப்பம் உள்ளவள்.அவர் மனைவியை நேசித்தாலும் அதை வெளிக்காட்டாதவர்.அவரது விருப்பங்கள் வேறு திசையில் .பின்னர் வரும் அவரது உறவினர் இளைஞன்.சாருவைப்போல விருப்பங்கள் உள்ளவன்.அவன் மீது சாருவுக்கு ஏற்படும் காதல்.குற்ற உணர்ச்சியால் அவன் சென்று விடச் சாரு உடைந்து போகிறாள்.இதை அறிந்த அவள் கணவன் அதிர்ச்சி அடைகிறான்.கடைசிக்காட்சியில் இருவர் கரங்களும்  இணைய வரும்போது  முடிவு.

இதில் நான் மிக ரசித்த,மனதில் நிற்கும் காட்சிகள்-

தொடக்கத்தில் எம்ப்ராயடரி செய்யும் சாரு.அவளைத்தாண்டிச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டே அவளைப் பார்க்காமல் செல்லும் கணவன்.அவனையே தொடரும் அவள் பார்வை.ஜன்னல் வழியாக, வீதியைப் பார்ப்பது.ஒரு குண்டான மனிதர் செல்லும்போது அவள் முகத்தில் படரும் சிரிப்பு, அவரைத் தொடர்ந்து பார்க்க அடுத்த ஜன்னலுக்குச் செல்லுதல். கடைசியில் மீண்டும் வந்து அமர்தல். இப்படி சில ஃப்ரேம்களிலேயே அவள் எந்த அளவுக்குப் போரடித்துப் போயிருக்கிறாள் என்பதைச் சொல்லி விடுகிறார் இயக்குநர்.

(’பேருதான் .......!சங்கீதம்னா  ’ என்றவுடன் கட் ஷாட்டில் கத்திரிக்காய் வாங்கும் பெண் ‘கிலோ என்ன விலை’  என்று கிம்மிக்ஸ் செய்வது நமக்கெல்லாம் சிறந்த டைரக்சன்! கடவுளே!)

மற்றொரு காட்சி.”தாங்க்யூ,தாங்க்யூ” என்று பாட்டுப்போல் பாடியபடியே ஊஞ்சலில் ஆடும் நாயகியின் அந்த உற்சாகம்.

கடைசியில் கலக்க வரும் கைகள் சேரும் முன்பே உறைந்து  நிற்கும் ஷாட். அதோடு படம் முடிகிறது,ஆயிரம் எண்ணங்களை நம் மனதில் எழுப்பிய படி.

இதில் வரும் கிளைக்கதையை நான் விட்டுவிட்டேன்.

இந்தியாவின் ஏழ்மையைப் படமாக்கிப் பெயர் பெறுபவர் ரே என்று குற்றம் சாட்டுபவர்கள் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று ’சாருலதா.’

20 கருத்துகள்:

 1. உண்மையில் சத்யஜித்ரே பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது சார். அவரது படம் ஒன்றை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. அண்ணே விமர்சனம் உங்களையும் பாதிச்சிருக்கு போல!

  பதிலளிநீக்கு
 3. நான் சத்யஜித் ரேயின் திரைப்படங்களைப் பார்த்ததில்லை.அவைகளைப் பார்க்காத குறையை உங்கள் பதிவு போக்கிவிட்டது.நான் அவரின் படத்தைப் பார்க்காததன் காரணத்தை நீங்களே கூறிவிட்டீர்கள்.அவர் எதார்த்தம் என்ற பெயரில் வறுமையை மட்டும் திரையில் காட்டுபவர் என அடையாளம் காட்டப்பட்டிருந்ததால்,நான் அவரது படங்களைப் பார்க்கவில்லை. இதுபோன்ற படங்களையும் அவர் இயக்கியிருக்கிறார் எனத் தெரியாமல் போய்விட்டது.

  தெரிய வைத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு படத்தை அடையாளம் காட்டியமைக்கு நன்றி. அவசியம் பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. கதாநாயகி ஊஞ்சலாடும் அந்தக் காட்சியில் கேமராவும் சேர்ந்து ஊஞ்சலாடியதை மறக்கவே முடியாது செ.பி.ஸார். அதை எப்படித்தான் துளி ஷேக் இல்லாமல் எடுத்தார்களோ என்று பலமுறை நான் வியந்ததுண்டு. நினைவலைகளை என்னுள்ளும் எழுப்பியதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நிச்சியமாக இந்தியாவின் மிக சிறந்த படங்களுள் ஒன்று..., அவர் வறுமையை படமாக்குகிறார்ன்னு சொன்னவங்கள்லாம் ராஜ்கபூர் மாதிரி மசாலா படம் எடுத்து தள்ளியவர்கள்...

  பதிலளிநீக்கு
 7. கேள்விப்பட்டதில்லை. அறிமுகத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. மனதைத் தொட்ட கதை!தந்தீர்!
  மனதில் நிலைக்க அதை

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு