அன்புள்ள அப்பா,
இக்கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும்.என்ன செய்வது ?வேறு வழியின்றி நான் இந்த முடிவுக்கு வந்தேன்.இதை நீங்கள் படிக்கும்போது நான் என் காதலியுடன் ஊரை விட்டுச் சென்றிருப்பேன். அவள் அழகானவள்.நல்ல குணங்களின் இருப்பிடம். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்.ஆனால் அவள் நம் சாதி அல்ல.
எனவே உங்களிடமும் அம்மாவிடமும் பேசினால் வீண் வாக்குவாதம்தான் வளரும் ;ஒரு முடிவு கிடைக்காது .நீங்கள் ஒருபோதும் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தேன். எங்களை வாழ்த்தா விட்டாலும் ,தயவு செய்து வசை படாதீர்கள்.நாங்கள் நிச்சயம் சிறப்பாக வாழ்வோம்.எனக்கு வயது 21.அவளை வைத்துக் காப்பாறி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.என்றாவது உங்களை உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்க்கிறோம்.
அப்பா,இது வரை நான் எழுதியது எல்லாம் பொய்!நான் என் நண்பன் குமார் வீட்டில்தான் இருக்கிறேன்.தேர்வு முடிவுகள் வந்து விட்டன.வாழ்க்கையில் தேர்வில் தோற்பதை விட மோசமான,அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன என்பதை உங்களுக்குச் உணர்த்தவேஅவ்வாறு எழுதினேன். தேர்வு இன்னொரு முறை கூட எழுதிக்கொள்ளலாம்.
நீங்கள் இருவரும் இதைப் புரிந்து கொண்டு,என் மீது கோபம் இல்லை என்ற உறுதி அளித்தவுடன் நான் திரும்பி வருகிறேன்.
உங்கள் அன்பு மகன்
(ஒரு மின்னஞ்சல் அடிப்படையில் எழுதியது)
(ஒரு மின்னஞ்சல் அடிப்படையில் எழுதியது)
அட.. இப்படியும் கிளைமாக்ஸ் கொடுக்க முடியுமா என அசந்து நிற்கிறேன்.. பாராட்டுகள்..
பதிலளிநீக்குஉணர்வுகள் குறித்த கதைப்பாடு..
பதிலளிநீக்குதேர்வின் முடிவுகளை விட, வாழ்க்கையின் முடிவு எதிர்மறையாய் இருக்க கூடாது என்ற தாக்கம் வெளிப்படுகிறது.. பாராட்டுகள்..
ஐயோ! இப்படிலாம் கூட பயமுறுத்துவாங்களா?! ஏன்னா என் பொண்ணூ ப்ளஸ் டூ
பதிலளிநீக்குஆகா...வில்லங்கமாக ஆரம்பித்து, விபரீதமாக முடிந்திருக்கே கடிதம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்குவரவர குறும்புத்தனம்
பதிலளிநீக்குஅதிகமாகிறது!
சா இராமாநுசம்
வரவர குறும்புத்தனம்
பதிலளிநீக்குஅதிகமாகிறது!
சா இராமாநுசம்
சூப்பர் மா...........எப்படி உங்களால மட்டும்
பதிலளிநீக்குநல்லாத்தான் இருக்கு புதிய சிந்தனை...
பதிலளிநீக்குவழக்கம்போல் எதிர்பாராத விதமாக முடித்து எங்களை ஏமாற்றியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமை அருமை..
பதிலளிநீக்குதேர்வில் தேறாதவன்
பதிலளிநீக்குதேர்ச்சி பெற்றுவிட்டான் வாழ்வியலில்..
அருமையான செய்திப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
தேர்வு நேரத்தில் டைமிங்.
பதிலளிநீக்குPlease mention that you have posted this story after getting inspired from a forwarded mail.
பதிலளிநீக்குMany people have complimented you thinking that the knot of the story is your original one.
Cheers, Simulation
இரு கோடுகள் தத்துவம் நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குநல்ல ஐடியா தான்.
பகிர்வுக்கு நன்றி, சார்.
மனோவியல் தெரிந்து
பதிலளிநீக்குமன மாற்றத்தை ஏற்படுத்த
கையாளப்பட்ட அருமையான
சிந்தனை...
வணக்கம்! அதிர்ச்சி வைத்தியம் என்பது இதுதானோ?
பதிலளிநீக்குஎப்படி சார்!
பதிலளிநீக்குயோசிக்கவே விடாம-
கதையை நகர்திட்டீங்க.....
நல்ல இருக்குது!
நல்லாவே அதிர்ச்சி குடுத்துட்டீங்க தல!
பதிலளிநீக்குஎன்னா டெக்னிக்கு? நாடு முன்னேறிடிச்சுடோய்
பதிலளிநீக்குநன்றி பாரத்.
பதிலளிநீக்குஇதெல்லாம் சும்மா..!
பதிலளிநீக்குநன்றி ராஜி
நன்றி நிரூ
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா
பதிலளிநீக்குநன்றி விமலன்
பதிலளிநீக்குநன்றி ரெவெரி
பதிலளிநீக்குநன்றி சபாபதி அவர்களே
பதிலளிநீக்குநன்றி முனைவர் குணசீலன்.
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி கோகுல்
பதிலளிநீக்கு@Simulation
பதிலளிநீக்குit is true that it was indeed inspired by an email,which has been deleted from my system but not from my mind.as such it was inevitable that it would find expression as a blogpost someday. omission to mention/acknowledge it was incidental and not intentional and i am sorry for the same.thank you
நன்றி வைகோ சார்
பதிலளிநீக்குநன்றி மகேந்திரன்
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குநன்றி சீனி
பதிலளிநீக்குகணேஷ் கூறியது...
பதிலளிநீக்கு//நல்லாவே அதிர்ச்சி குடுத்துட்டீங்க தல!//
நீங்களும் மனோவோட சேந்துட்டீங்களா?!
நன்றி கணேஷ்.
நல்ல ட்விஸ்ட் அய்யா...அட இதுக்கு யாருப்பா மைனஸ் ஒட்டு குத்தினது..?
பதிலளிநீக்குஅட! இப்படிக் கூட அதிர்ச்சி தருவாங்களா!
பதிலளிநீக்குநல்லாவே சொல்லிக் குடுக்கிறிங்க .
பதிலளிநீக்குஇந்தகால பிள்ளைங்களுக்கு சூப்பரான ஐடியா குடுத்துட்டீங்களே தல இனி என்னவெல்லாம் நடக்கப்போகுதோ கி கி கி கி....
பதிலளிநீக்குஇரு கோடுகள் தத்துவம் தானே ...வாசு
பதிலளிநீக்குgood twist!
பதிலளிநீக்கு