தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 05, 2012

மீண்டும் ஒண்ணாப்பு!!(தொடர்பதிவு)


நண்பர் வே.நடனசபாபதி அவர்கள்,என்னை மீண்டும் பள்ளிக்குப் போகச் சொல்லி,கணேஷ் சொன்னது போல் ‘மாட்டி விட்டு விட்டார்’ஆம் என் தோளில் பள்ளிப்பையை மாட்டி விட்டு விட்டார்!இதோ போகிறேன்.!

என் முதல் பள்ளி அனுபவமே மறக்க முடியாததுதான்.சென்னையில் ,என் தந்தை வாழ்ந்த காலத்தில் என் ஐந்தாவது வயதில் என் அன்னை என்னைப் பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினார்.அது என்னவாயிற்று?70 களில் ‘கணையாழி’ வாசிக்க ஆரம்பித்த புதிதில் ,அதன் பாதிப்பில், நான் எழுத முயன்ற ஒரு புதுக்கவிதை போன்ற ஒன்று அதைச் சொல்கிறது—
   “சின்ன வயதினில் என்னைப் பள்ளிக்கு
    தூக்கிச் சென்ற துரைசாமியின்
    சட்டையை கிழித்து  விட்டேன்.
    இன்றவரைத் தேடுகிறேன்.
    சட்டைகள் வாங்கித் தர!
    எங்கே இருப்பாரோ எங்க துரைசாமி?!

ஆக ஒரே நாளில் சென்னைப்பள்ளி வாழ்க்கை முடிந்து போனது!

(மீண்டும் சென்னைக்கு வரப்போவது என் பட்ட மேற்படிப்புக்காகத்தான்.என் சென்னைக் காதல் பற்றி அறிய விருப்பமா?பாருங்கள்—

என் தந்தை மறைவுக்குப்பின்,நாங்கள் குடும்பத்துடன் என் தாத்தாவுடன் (அம்மாவின் அப்பா) சாத்தூருக்குப் புறப்பட்டோம்.ரயில் பிரயாணத்தின்போது என் தாத்தா ”ஊருக்குப் போனதும் ஒரு பயலை ஸ்கூல்ல போடணும்” என்று சொல்வதும்,அதற்கு நான் ”ரயிலிலிருந்து குதிச்சிடுவேன்” என்று சொல்வ துமாகப்  பயணம் நிறைவேறியது.

சாத்தூர் சென்றதும்,பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். -சா..நா.எட்வர்ட் உயர்நிலைப்பள்ளியோடு சேர்ந்த ஆரம்பப்பள்ளி.(S.H.N.Edward high school). இப்போதெல்லாம் ஜாலியாகப் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளைக் கண்டால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பள்ளிக்குப் போகாமல் டபாய்க்கும் சுகத்தை அவர்கள் இழந்து கொண்டி ருக்கிறார்கள்!நான் முதல் வகுப்பு(ஒண்ணாப்பு) படிக்கும்போது பள்ளிக்குப் போவது போல் சென்று விட்டு எங்காவது பதுங்கிக் கொள்வேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் கண்டுபிடிக்கப்பட்டுப் பள்ளிக்கு அனுப்பப்படுவேன்!  

சில நாட்களுக்குப் பின் இந்த ஆட்டம் போரடித்து ஒழுங்காகப் பள்ளிக்குப் போக ஆரம்பித்தேன்!ஏற்கனவே 5 வயது நிறைந்து விட்ட படியால்,இரட்டை உயர்வு கொடுத்து மூணாப்புக்கு அனுப்பும் நோக்கத்தில் எனக்கு தனிப் பயிற்சி கொடுக்கப்பட்டது.அந்த ஆசிரியர்,குருநாத ஐயர்,காலை 7 மணிக்கு வந்து என்னை சிரமப் படுத்துவார்.இப்போதெல்லாம்,சிறுவர்களுக்கு பத்தாம் வாய்ப்பாடு  கூடத்தெரிவதில்லை. ஆனால் அவர் எனக்கு மாகாணி, அரைக்கால்,   முண்டாணி வாய்ப்பாடுகள் கூடச் சொல்லிக் கொடுத்தார். அதன் பலனாய் நான் நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு அனுப்பப்பட்டேன். மனக்கணக்கில் எப்போதுமே நூறு மதிப்பெண்கள் வாங்கினேனென்றால் அதற்கு அந்த ஆசிரியர் அமைத்துத் தந்த அடித்தளமே  காரணம்.

 அப்போது சீருடை எல்லாம் கிடையாது.காலில் செருப்பு கூடக் கிடையாது. சாத்தூரின் கரிசல் மண்ணில் கால் புதை நடந்தே பள்ளி செல்வேன்.

ஐந்து வகுப்புகள் முடித்தபின் அந்த உயர்நிலைப்பள்ளியிலேயே முதல் படிவம் என்று சொல்லப்பட்ட ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். ஓராண்டுக்குப் பின்  சாத்தூர் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

என் அண்ணா கோவில்பட்டியில் வேலை பார்த்து வந்தார்.அங்கு நாங்கள் குடி புகுந்தோம்.புதிய பள்ளி,புதிய நண்பர்கள்,புதிய வாழ்க்கை புதிய பேச்சு (என்னலே,வாலே,போலே). கோவில்பட்டி வ.உ.சி.போர்ட் உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் படிவத்தில்(ஏழாம் வகுப்பு) சேர்ந்தேன்.அந்த வாழ்க்கையில் முக்கியமாக நினைவு கூரவேண்டியவை இரண்டு.ஒன்று –ஹாக்கியில் என் திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.திரு தயான்சந்த்  அவர்களே ஒரு முறை பள்ளிக்கு வந்து சிறிது பயிற்சியளித்தார்! இரண்டாவது,பத்தாம் வகுப்பில்  கணிதப் பாடத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பம்! நண்பர்கள் பயமுறுத்தியதால் நான் பொதுக்ணிதத்தைத் தேர்வு செய்தேன்.பின் என் தாத்தா அறிவுரைப்படி, கலவைக்கணிதம் எடுத்தேன் (composite maths) .அதுதான் பின்னர் கணிதத்தில் பட்ட மேற்படிப்பு வரை என்னைக் கொண்டு சென்றதோ?என்  கோவில்பட்டிப் பள்ளிக்கூட வாழ்வு பத்தாம் வகுப்புடன் முடிவடைய,எஸ்.எஸ்.எல்.சி படிப்பு சிவகாசியில் அமைந்தது.என் அண்ணாவின்  பணி இட மாற்றமே காரணம். 

கோவில்பட்டி வ.உ.சி.பள்ளியில்,பின்னாளில் படித்தவர்தான் பிரபல பதிவர் செங்கோவி!

சிவகாசி S.H.N.V உயர்நிலைப் பள்ளி என்னுள் மறைந்திருந்த பல திறமைகளை, வெளிக் கொண்டு வந்தது.ஒரு நடிகனாக அறியப்பட்டதோடு (குட்டி நடிகர் திலகம் பற்றி அறியப் பாருங்கள்
என் தமிழாசிரியர் திரு மீனாட்சிசுந்தரம் அவர்களின் முயற்சியால்,ஒரு பேச்சாளனாகவும் உருவானேன். பேச்சுப் போட்டி,பாட்டுப் போட்டி என்று எனது எல்லைகள் விரிவடைந்தன.மிகக் கண்டிப்பானவரான தலைமை ஆசிரியர் திரு பசுபதி அவர்கள் கூட என்னிடம் கனிவுடன் நடந்துகொள்வார்.நடிகன் என்ற முறையில் ஒரு செல்லப் பிள்ளையாகவே இருந்தேன்.படிப்பிலும் சிறப்பாக இருப்பினும், தலைமை ஆசிரியர் என் அண்ணாவிடம் ஒரு முறை சொன்னார் தன்னம்பிக்கை இருக்கலாம், ஆனால் இவன் அதீத தன்னம்பிக்கை உடையவன் ”(over-confident).என் கணித ஆசிரியருக்கும் கொஞ்சம் வருத்தம்தான்”நடிப்பு வந்து படிப்பைக் கெடுத்து விட்டது ’என்று.


இதே பள்ளியில் பல ஆண்டுகளுக்குப் பின் படித்தவர்தான்,பிரபல பதிவர்,நண்பர் தனசேகரன் அவர்கள் .

தொடர விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்!

பள்ளி வாழ்க்கை இதோடு முடிந்தது.இனி கல்லூரி வாழ்க்கை.யாராவது ஒருவர் அதைப்பற்றி எழுதி விட்டு ஐந்து பேரைத் தொடரச் சொல்வார்.அவர்கள் ஐவரும் ஆளுக்கு ஐந்து பேரைத் தொடரச் சொல்ல இப்படியே................ஆளை விடுங்கப்பா!இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை!!

50 கருத்துகள்:

 1. அண்ணனுக்கு பழைய நினப்பு தேனருவி போல கொட்டுது..இம்புட்டயும் ஞாபகம் வச்சிருக்கீங்க அதுக்கு ஹாட்ஸ் ஆப்!

  பதிலளிநீக்கு
 2. சுவாரஸ்யமான பள்ளி நினைவுகள்!
  எல்லோருக்கும் அவரவர் பள்ளி அனுபவம் நினைவுக்கு வரும்!

  பதிலளிநீக்கு
 3. எனது வேண்டுகோளை ஏற்று திரும்பவும் பள்ளிக்கு ‘சென்று’ வந்து தங்களது பள்ளிப்பருவ நிகழ்வுகளை சுவைபடத் தந்ததற்கு நன்றி!
  தங்களுக்கு ஹாக்கியில் திரு தயான்சந்த் அவர்களே ஒரு முறை பள்ளிக்கு வந்து சிறிது பயிற்சியளித்தார் என்பதை அறியும்போது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு
  கிடைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

  நீங்கள் சொல்வதுபோல் இந்த தொடர் ஆட்டத்தை தொடர்வதை தற்போதைக்கு நிறுத்தி வைக்கலாம்.

  பதிலளிநீக்கு
 4. மலரும் நினைவுகள் மனதை சுண்டி இழுத்து அருமையான பகிர்வு ஐயா.

  பதிலளிநீக்கு
 5. நினைவு அலைகள் அருமை.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  அண்ணனின் ஆட்டோகிராஃப் //

  அது இனிமே தான் வரும் சித்தப்பு

  பதிலளிநீக்கு
 7. என் தமிழாசிரியர் திரு மீனாட்சிசுந்தரம் அவர்களின் முயற்சியால்,ஒரு பேச்சாளனாகவும் உருவானேன். பேச்சுப் போட்டி,பாட்டுப் போட்டி என்று எனது எல்லைகள் விரிவடைந்தன.மிகக் கண்டிப்பானவரான தலைமை ஆசிரியர் திரு பசுபதி அவர்கள் கூட என்னிடம் கனிவுடன் நடந்துகொள்வார்.நடிகன் என்ற முறையில் ஒரு செல்லப் பிள்ளையாகவே இருந்தேன்.படிப்பிலும் சிறப்பாக இருப்பினும், தலைமை ஆசிரியர் என் அண்ணாவிடம் ஒரு முறை சொன்னார் ”தன்னம்பிக்கை இருக்கலாம், ஆனால் இவன் அதீத தன்னம்பிக்கை உடையவன் ”(over-confident).என் கணித ஆசிரியருக்கும் கொஞ்சம் வருத்தம்தான்”நடிப்பு வந்து படிப்பைக் கெடுத்து விட்டது ’என்று.://///////

  உங்கள் பள்ளி அனுபவங்கள் அழகானவை ஐயா!
  மேலே உள்ல பந்தியில் உங்களைப் பற்றி சொல்லியிருப்பவை ஆச்சரியம்! நீங்கள் ஒரு நடிகரா? பேச்சாளரா? இவை பற்றி பழைய பதிவுகளில் குறிப்பிட்டிருப்பீர்கள் என்றூ நினைக்கிறேன்! நேரம் கிடைக்கும் போது தட்டிப் பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 8. நம்ம பள்ளியின் முன்னால் மாணவர் தாங்கள் என்னை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

  அருமையான பள்ளி அனுபவம் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. மலரும் நினைவுகள் அருமையா இருந்தது ஐயா....

  பதிலளிநீக்கு
 10. சுவராசியமான நினைவுகள், இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தி இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 11. அனுபவச் சிதறல்கள் அருமை. மிக ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 12. நல்ல நினைவலைகள். எங்களுக்கெல்லாம் தமிழ்மணம் பட்டை ஒன்றே வர மாட்டேங்குது...உங்கள் பதிவில் இரண்டு கருவிப் பட்டை தென்படுகிறது!

  பதிலளிநீக்கு
 13. விக்கி!பழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு சுகம்தானே.நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 15. பிளாகர் மனசாட்சி கூறியது...

  //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  அண்ணனின் ஆட்டோகிராஃப் //

  //அது இனிமே தான் வரும் சித்தப்பு//
  ஏற்கனவே வந்தாச்சு!

  பதிலளிநீக்கு
 16. கட்டாயம் படியுங்கள் ஐடியா மணி.உங்கள் கருத்துக்காகக் காத்திருப்பேன்.நன்றி

  பதிலளிநீக்கு
 17. @பன்னிக்குட்டி ராம்சாமி
  எழுத வேண்டும் என ஆசைதான்;ஆனால் நீளம் அதிகமாகி விடுமோ என் எண்ணிக் குறைத்து விட்டேன்.பின்னர் பார்க்கலாம்.நன்றி.

  பதிலளிநீக்கு
 18. பாசித் மற்றும் சசிகுமார் அறிவுரைப்படி நடந்தேன்,ரெண்டு பட்டையாகி விட்டது!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்! சொல்லிச் சொல்லி மகிழும் பள்ளிப் பருவத்து நினைவுகளை
  அள்ளித் தந்த உங்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 20. //இனி கல்லூரி வாழ்க்கை.யாராவது ஒருவர் அதைப்பற்றி எழுதி விட்டு ஐந்து பேரைத் தொடரச் சொல்வார்.அவர்கள் ஐவரும் ஆளுக்கு ஐந்து பேரைத் தொடரச் சொல்ல இப்படியே..........ஆளை விடுங்கப்பா!இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை!!//

  அப்படி எல்லாம் நீங்க எஸ்கேப் ஆக முடியாது சார். ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவங்கள், பிடித்த மெகா சீரியல், சின்ன வயதில் ராட்டினத்தில் சுற்றிய ஞாபகங்கள்..இன்னும் நிறைய (மெகா) தொடர்பதிவுகளை எழுத வைப்போம்.

  பதிலளிநீக்கு
 21. அருமையான கருத்தோட்டம். காலச்சக்கரத்தின் சுழற்சி வேகம். அது ஒரு கனாக்காலம்.நன்றி.

  பதிலளிநீக்கு
 22. ! சிவகுமார் ! கூறியது...

  //இனி கல்லூரி வாழ்க்கை.யாராவது ஒருவர் அதைப்பற்றி எழுதி விட்டு ஐந்து பேரைத் தொடரச் சொல்வார்.அவர்கள் ஐவரும் ஆளுக்கு ஐந்து பேரைத் தொடரச் சொல்ல இப்படியே..........ஆளை விடுங்கப்பா!இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை!!//

  //அப்படி எல்லாம் நீங்க எஸ்கேப் ஆக முடியாது சார். ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவங்கள், பிடித்த மெகா சீரியல், சின்ன வயதில் ராட்டினத்தில் சுற்றிய ஞாபகங்கள்..இன்னும் நிறைய (மெகா) தொடர்பதிவுகளை எழுத வைப்போம்.//
  சிவா!தொடர்பதிவுகளை நல்லாவே கிண்டல் செய்கிறீர்கள்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 23. மலரும் நினைவுகள் என்றுமே மனதை மயக்கும்...தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 24. மலரும் நினைவுகள் இன்னும் மலர்ந்திருந்தால் மிகவும் சிறப்பாக
  இருந்திருக்கும்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 25. அருமையாக உங்கள் பள்ளிவாழ்க்கையைச் சொல்லி. உள்ளே இருக்கும் ஞாபகச் சின்னங்களையும் பின்னே செங்கோவி,தனசேகரன் என்போறையும் பள்ளியின் மைந்தர்கள் என்று சொல்லி நெஞ்சில் நினைவலைகளாக ஆக்கிய பதிவு வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 26. விருது கொடுத்திருக்கிறேன்

  http://lksthoughts.blogspot.in/2012/03/blog-post.html

  பதிலளிநீக்கு
 27. The fact that you were a multifaceted personality even during your school days has not come as a surprise to me .

  vasudevan

  பதிலளிநீக்கு
 28. ஐயா,

  பதிவைப் படித்ததும் VOCபள்ளி கிரவுண்ட்டில் விளையாடிய ஞாபகமும் செம்மண் வாசமும் ஒருசேரத் தாக்குகின்றதே..

  ஐயாவின் ஜூனியர் என்பதில் தனிப் பெருமை தான்!

  பதிலளிநீக்கு
 29. @எல் கே
  விருது வழங்கி என்னைப் பெருமைப் படுத்தி விட்டீர்கள்.நன்றி கார்த்திக்

  பதிலளிநீக்கு
 30. @செங்கோவி
  உங்கள் வேலைப் பளுவின் நடுவிலும் வந்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி செங்கோவி.மறக்க முடியுமா அந்த நாட்களை!

  பதிலளிநீக்கு