சென்னையின் மீதான என் காதல் எப்போது ஆரம்பமானது?
நான் பிறந்தது இந்த தரும மிகு சென்னையில்தான்.-மதராஸ்- திருவல்லிக்கேணியில்..ஆனால் குடும்பத்தலைவரான என் தந்தையின் மறைவுக்குப் பின் ஐந்து வயதே நிறைந்த நான் புலம் பெயர வேண்டியதாயிற்று!தென் தமிழ்நாடு எங்களை வரவேற்றது.எனவே அந்த வயதுக்குள் என் சென்னைக் காதல் சாத்தியமில்லை!
பின் என் பள்ளி வாழ்க்கை தொடங்கியது .சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி என்று பல இடங்களில் தொடர்ந்தது.பள்ளி கோடை விடுமுறையில் ஒரு முறை என்னை சென்னையில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பவதாக என் அண்ணா சொல்லியிருந்தார்;நானும் சென்னையில் போய் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற கனவுகளிலும், கற்பனைகளிலும் மூழ்கியிருந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவில்லை.சில நாட்கள் மிக வருத்தத்தில் இருந்தேன்.எனவே காதல் தள்ளிப் போய் விட்டது(நான் என்ன காதல் கோட்டை அஜித்தா,பார்க்காமலே காதலிக்க!)
பின் கல்லூரி வாழ்க்கை.வங்கி ஊழியரான என் அண்ணா செல்லும் ஊர்களில்லாம் என் கல்வி தொடர்ந்தது போல்,புகுமுக வகுப்பும் பட்டப் படிப்பும் உத்தமபாளையத்தில் தொடர்ந்தன.சென்னை வெறும் கனவாகவே இருந்தது.கணிதத்தில் பட்டம் பெற்ற பின்,பட்ட மேற் படிப்புக்காக விண்ணப்பம் அனுப்பும் நேரம் வந்தது .அப்போதெல்லாம், விண்ணப்பம் பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதில் முன்னுரிமை அளித்து மூன்று கல்லூரிகளின் பெயர் குறிப்பிட வேண்டும்.இங்கேதான் விழுந்தது காதலின் வித்து!முதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்!சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து,கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்!) சென்னை சென்று அடைந்தேன்!
முதல் நாள் என் அக்காவுடனும்,என் அத்திம்பேருடனும்,சினிமா பார்க்கப் புறப்பட்டேன்-கேஸினோவில்.அதன்பின்,மவுண்ட் ரோடு மதுபன் ஹோட்டலில் போண்டா சாம்பார்,காபி,கடைசியில் மெரினா கடற்கரை.
சென்னையின் திரையரங்கும்,ஸ்பூனால் வெட்டியெடுத்துச் சாப்பிட்ட சாம்பாரில் மிதக்கும் மைசூர் போண்டாக்களும் , பிரம்மாண்டமான மெரினா கடற்கரையும்,ஆர்ப்பரித்து அலைக்கரங்கள் நீட்டும் வங்காள் விரிகுடாவும்,என்னை சென்னையின் பால் ஈர்த்தன.
காதல் தொடங்கியது!
மதராஸில்,முதலில் அன்று பார்த்த திரைப்படத்தின் பெயரில் ஒரு வேடிக்கையான பொருத்தம்,அல்லது முரண்நகை இருக்கிறது!
அந்தப் படம்---”காதலிக்க நேரமில்லை”!
(இன்னும் வரும்)
சந்திரசேகரன் சார் சென்னைப்பித்தன் ஆன கதை அருமை.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியவன்.
பதிலளிநீக்குநாங்களும் உங்களை தொடர்ந்து வந்துட்டுதான் இருக்கோம்...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி மனோ!
பதிலளிநீக்குநீங்கள் அன்று பார்த்து, இரசித்து,காதலித்த சென்னை வேறு. இன்று உள்ள சென்னை வேறு. இன்னும் உங்கள் காதல் தொடர்கிறதா?
பதிலளிநீக்குவே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//நீங்கள் அன்று பார்த்து, இரசித்து,காதலித்த சென்னை வேறு. இன்று உள்ள சென்னை வேறு. இன்னும் உங்கள் காதல் தொடர்கிறதா?//
காதலிக்கு அழகும் இளமையும் போனாலும்,காதலி,காதலிதான்!
வருகைக்கு நன்றி சபாபதி அவர்களே!
அந்த கால சென்னை பற்றி நீங்கள் இன்னும் கூறப்போவதை எதிர்பார்க்கின்றேன்.
பதிலளிநீக்குஅஜய்
நீங்கள் சென்னை வந்தது 62 ல் என எண்ணுகிறேன் ... படத்தை வைத்து யூகித்தேன் ... சென்னையின் வளர்ச்சி பிரம்மாண்டமாக இருந்தாலும் முன்பிருந்த ஜீவன் இல்லை இல்லை என்றே எண்ணுகிறேன் . உங்கள் பழைய பதிவு இதை உறுதி செய்யும் . அழகிய ஸ்பென்சர்/ நியூ எல்பின்ஸ்டன் திரை அரங்கு /பழைய புஹாரி உணவு விடுதி / மவுண்ட் சாலை இவை எல்லாம் மறக்க முடியுமா ....வாசுதேவன்
பதிலளிநீக்குWordsBeyondBorders கூறியது...
பதிலளிநீக்கு//அந்த கால சென்னை பற்றி நீங்கள் இன்னும் கூறப்போவதை எதிர்பார்க்கின்றேன்.
அஜய்//
இயன்றவரை,என்னைக் கவர்ந்த அக்கால மதராஸ் பற்றி எழுதுவேன்.
முதல் வருகைக்கு நன்றி,அஜய்!
Vasu கூறியது...
பதிலளிநீக்கு//நீங்கள் சென்னை வந்தது 62 ல் என எண்ணுகிறேன் ... படத்தை வைத்து யூகித்தேன் ... //
தங்கள் யூகம் தவறு வாசு!படம் வெளியான தேதி 22-02-1964.நான் சென்னை வந்தது ஜூன்(ஜுலை?)1964. M.Sc படித்தது 1964-66.
மறக்க முடியாதவை பற்றித்தானே சொல்லப் போகிறேன்!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வாசு!
//முதல் நாள் என் அக்காவுடனும்,என் அத்திம்பேருடனும்,சினிமா பார்க்கப் புறப்பட்டேன்-கேஸினோவில்.//
பதிலளிநீக்குஇந்த வரிகளை படிக்கும் போது //என்ன படம் பார்த்தோம் என்று ஏன் சொல்லவில்லை // என்று என்னை நானே கேட்டுகொண்டேன் காதலிக்க நேரமில்லை காசினோ தியேட்டரில் வெளிவந்து வெள்ளி விழாகண்ட கண்ட படமென்று கேட்டதுண்டு. அந்த ஞாபகமும் வந்து சேர, முடிவில் நீங்களே விடையை சொல்லிவிட்டீர்கள்.
ரசனைமிக்க காதலர்தான் நீங்கள். உங்களின் சென்னைக்காதல் நினைவுகள் தொடரட்டும்.
நல்ல பதிவு
பதிலளிநீக்குவணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கக்கு-மாணிக்கம்!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சமுத்ரா அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ் குமார்!
பதிலளிநீக்குபாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்கு//வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//
மிக்க நன்றி பாரதி!
மீதி காதல் கதையும் படிக்கும் ஆர்வத்துடன்...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தஞ்சை.வாசன்!
பதிலளிநீக்குஅருமையா அலுப்பு தட்டாம சொல்றீங்க.
பதிலளிநீக்குஅது சரி. காதல் பித்தானது எப்படி ?
ஆஹா இப்படித்தான் சென்னை மீது பித்தம் வந்ததா?..
பதிலளிநீக்குஅன்றே இப்படின்னா இன்று சிங்காரி சென்னை ஆச்சே.. :)
நல்ல கதை தொடருங்கள்..
எளிமையான நடையும்
பதிலளிநீக்குசிவகுமாரன் கூறியது...
பதிலளிநீக்கு//அருமையா அலுப்பு தட்டாம சொல்றீங்க.
அது சரி. காதல் பித்தானது எப்படி ?//
காதல் அளவுக்கு அதிகமானால் அது பித்துதானே!
ஆனால் இங்கு பித்தனைக் காதலனாக்கி விட்டார் பதிவர் கக்கு-மாணிக்கம்.
வருகைக்கும்,நன்றி சிவகுமாரன்.
பயணமும் எண்ணங்களும் கூறியது...
பதிலளிநீக்கு//ஆஹா இப்படித்தான் சென்னை மீது பித்தம் வந்ததா?..
அன்றே இப்படின்னா இன்று சிங்காரி சென்னை ஆச்சே.. :)//
மஞ்சள் பூசிக் குளித்து வாரிப் பின்னலிட்டுப் பூ முடித்துப் பொட்டுவைத்து நிற்கும் பெண் அழகா?குட்டைத்தலைமுடியுடன்,அழகு நிலையத்தின் ஃபேஷியலும் செய்து நிற்கும் பெண் அழகா?நீங்களே சொல்லுங்கள் சாந்திஜி!
பயணமும் எண்ணங்களும் கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல கதை தொடருங்கள்.. எளிமையான நடையும்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியாது.
பதிலளிநீக்குஅப்பாதுரை கூறியது...
பதிலளிநீக்கு//சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியாது.//
நிச்சயமாக!அதுவும் அந்த வயது நினைவுகளோடு கலந்து விட்ட சென்னையை!
நன்றி அப்பாதுரை!