தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 14, 2011

காதல் என்பது எது வரை?

இன்று காதலர் தினம்.

உலகக் காதலர்களுக்கெல்லாம் இக்காதல் கதை சமர்ப்பணம்.
----------------------------


"ஏய்,சொர்ணம்,சொர்ண நாயகி,இங்க வாடி.ஒரே ஒரு தடவை."

"உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். "

"யாருடி கிழவன்?கையை மடக்கிக் காட்டறேன் பாரு,எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு.இரும்பு உடம்புடி, தெரியுமா?"

"ஆமாம் உங்க உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருங்க.எனக்குத் தூக்கம் வருது."

"எனக்கு வரல்லையே.வாடி.ஒரே ஒரு தடவை மட்டும்."

"அய்யோ,சொன்னாக் கேக்க மாட்டிங்களே.எனக்கு லேசாத் தலையை வலிக்குதுங்க.அதை சொல்ல வேணாமுன்னு பாத்தேன்."

"தலைவலியா?இதோ நான் தைலம் தேச்சு விடறேன்.அப்படியே படுத்துக்க."

"வேண்டாங்க,தன்னாலே சரியாயிடும்"

"ஒண்ணும் பேசாதே. கண்ணை மூடிப் படுத்துக்கோ.இப்படி நல்லாத்தேச்சு, அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்"

"உங்க கை பட்டதுமே வலி போயிருச்சுங்க.வாங்க.இப்ப நான் தயார்"

"வேண்டாம் சொர்ணம்.நீ ஒய்வெடுத்துக்கோ.நானும் அப்படியே படுக்கிறேன்."

"ரொம்ப ஆசையாக் கூப்பிட்டீங்க.ஏமாத்தமாப் போயிடும்.வாங்க. "

"சரி,வா.உன்னை எப்படிக் கட்டறேன் பாரு"

"ஆமாம்,அதிலெ நீங்கதான் கெட்டிக்காரராச்சே "

இருவரும் "ஆடு புலி ஆட்டம்"ஆட ஆரம்பித்தனர்.

கணவன் மனைவி உறவில் உடல் முக்கியமல்ல.மனமே பிரதானம்.வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது.இது ஒருவரின் துணையை மற்றவர் உணர்ந்த நிலை.ஒருவர் இன்றி மற்றவர் வாழ்க்கையைப் பற்றி நினைப்பதற்கே பயப்படும் நிலை. ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழும்,இயங்கும் நிலை.

இதை விட வேறு காதல் வேண்டுமா?

இதுவே இல்லறம் என்னும் நல்லறம்!

(மீள் பதிவு)

19 கருத்துகள்:

  1. கதை மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான வயதான தம்பதியரிடம்( என் பெற்றோர் உட்பட) அப்படி ஒரு பரஸ்பர அன்பை நான் கண்டதில்லை. ஆனால் ஒரே ஒரு இடத்தில் கண்டிருக்கிறேன் அதனால் உங்கள் கதை கதையல்ல நிஜம்.

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை..

    இனிய இல்லறம்.. நல்லா வெளாடுங்க.. வயசு ஒரு தடையா என்ன?..

    தம்பதிக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. பலருக்கு உள்ளத்தின் அன்பை வெளிக்காட்டத் தெரிவதில்லை. தங்களைச்சுற்றி ஒரு வேலி போட்டுக் கொள்கிறார்கள்.ஆனால் அன்பு நீறு பூத்த நெருப்பாய் உள்ளே கனன்று கொண்டுதான் இருக்கௌம்!
    நன்றி இனிய விஜயன்!

    பதிலளிநீக்கு
  4. @பயணமும் எண்ணங்களும் .
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஆள் அய்யா நீங்க ! எதையோ எண்ணி படித்தால் முடிவில் அசடு வழிய செய்து விட்டீர் ! நிற்க , இதே போல் ஒரு பக்க சிறுகதை பல வருடங்களுக்கு முன் குமுதம் வார இதழில் படித்தது நினைவிற்கு வருகிறது ... அருகில் அழைக்கும் கணவனை மனைவி " மூன்றிருக்குமே அந்த பெட்டியிலிருந்து ஒன்றை அணிந்து வந்தால் தான் அருகில் வருவேன் !" என்று சிணுங்குவாள் ! கற்பனை சிறகை பறக்க விட்டு அவசர அவசரமாக
    படித்து முடிக்கும் போது, மனைவி குறிப்பிட்டது பனியன் என்று முடியும்.. காரணம் கணவனுக்கு நம் சத்யராஜ் போலவும் ஹிந்தி நடிகர் அனில் கபூர் போலவும் முடி அதிகம் என்று விளக்கம் அளிக்க படும் !
    நிற்க , இதை நீங்கள் குமுதம் இதழுக்கு அனுப்பலாமே !
    வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  6. வாசு,
    பழைய குமுதம் கதை-நகைச்சுவை மட்டுமே!ஆனால் இந்தக் கதையில் நான் அழுத்தம் கொடுக்க நினைப்பது அவர்களிடம் உள்ள அன்பு.ஆரம்பம் உங்களை இழுக்கும் கொக்கி!
    ரசித்ததற்கும் ஆலோசனைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. கடைசியில் போதனை தரையிலறக்கி விட்டது.. :)

    பதிலளிநீக்கு
  8. பட்டென்று சிரிக்க வைத்தீர்கள். இதை எதிர்பார்த்தேன்.
    // "எனக்கு வரல்லையே.வாடி.ஒரே ஒரு தடவை மட்டும்."//
    இந்த வரிகளை படிக்கும் போதே தெரிந்துவிட்டது நீங்கள் சொல்லபோவது இந்த விஷயம் அல்ல என்று!
    சில நாட்களாக வர இயல வில்லை. சாரி!!

    பதிலளிநீக்கு
  9. //வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை//

    அகவை கூட கூட இச்சை குறைந்து, அன்பு கூடும் என்பதை இந்த பதிவு மூலம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  10. அப்பாதுரை கூறியது...

    //கடைசியில் போதனை தரையிலறக்கி விட்டது.. :)//
    போதனை செய்ய நான் யார்?அது வாழ்க்கையின் அழகான உண்மை.அவ்வளவே!
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  11. கக்கு - மாணிக்கம் கூறியது..
    //பட்டென்று சிரிக்க வைத்தீர்கள்.//
    வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு போகும்!-நல்லதுதானே!
    எதற்காக சாரியெல்லாம் மாணிக்கம்!எனக்கு வேலை வெட்டி இல்லை!நீங்களெல்லாம் அப்படியல்லவே!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  12. வே.நடனசபாபதி கூறியது...
    //அகவை கூட கூட இச்சை குறைந்து, அன்பு கூடும் என்பதை இந்த பதிவு மூலம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.
    நல்ல பதிவு.//
    தம்பதிக்குள் இருக்கும் அன்பும் நெருக்கமும் வயது ஏற ஏறக் கூடும்;கூட வேண்டும்!அதுவே நல்ல இல்லறம்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அருமை
    அந்த தம்பதியினர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..

    பதிலளிநீக்கு
  14. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //அருமை
    அந்த தம்பதியினர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..//
    உங்கள் வாழ்த்துகளை அவர்களுக்குத் தெரிவித்து விட்டேன்!
    வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  15. இதை விட வேறு காதல் வேண்டுமா?

    இதுவே இல்லறம் என்னும் நல்லறம்!


    .....அழகாக அன்னியோன்யத்தைக் குறித்தும் - நல்ல புரிதல் குறித்தும் - பாசத்தை குறித்தும் கதை மூலம் சொல்லி இருக்கீங்க... அருமைங்க...
    இந்த பதிவுக்கு உரிய லிங்க் தந்ததற்கு நன்றிங்க...

    பதிலளிநீக்கு
  16. @chitra
    சொன்ன உடன் படித்து விட்டுக் கருத்துச் சொல்லி விட்டீர்கள்!புயல் வேகம்!
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். "
    ////
    \\

    HA AH HA NEENGALA ATHU....

    பதிலளிநீக்கு
  18. பிரியமுடன் பிரபு கூறியது...

    //உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். "
    ////
    \\

    HA AH HA NEENGALA ATHU....//
    நானும் HA HA HA!
    //NICE POST...//
    thank you!

    பதிலளிநீக்கு