தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மார்ச் 11, 2012

காந்தி காலடியில் ஒரு இனிய மாலை!

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன,மெரினாவுக்குச் சென்று!(சினிமா அல்ல ,கடற்கரை) .அந்தக்கடல்,குளுமையான கடற்காற்று,மற்றொரு கடலெனக் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்,இவற்றையெல்லாம் கண்டும் உணர்ந்தும்  அனுபவிக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது.அதோடு கொஞ்சம் வம்பும்,தேநீரும் கூட!


இன்று மதியம் 1.30க்குக் கைபேசி அழைத்தது.எடுத்தேன்.பேசியவர் மெட்ராஸ் பவன் சிவகுமார்.”இன்று மாலை நான்கு மணியளவில்,நான், ரஹீம் கஸாலி,சிராஜ்,பிரபாகரன், கே.ஆர்.பி. செந்தில் ஆகியோர் மெரினாவில் சந்திக்கிறோம்.உங்களால் வர இயலுமா ”எனக் கேட்டார்.நான் சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் என்று சொன்னேன்.மாலை 4.15 அளவில் சிவகுமாரைக் கைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் மெரினா காந்தி சிலை அருகே கூடியிருப்பதை அறிந்து கொண்டேன்.பேருந்தில் சென்று ரா.மே.க. நீருத்தத்தில் இறஙி நடந்தேன்தேச பிதாவுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நண்பர்களைத்தேடினேன்.சாகர் உணவகத்தில் அமர்ந்திருந்தனர்.என்னைக் கண்டதும் சிவகுமார் எழுந்து வந்து வரவேற்றார்.


சென்று அமர்ந்தேன் .கதை பேசிக் கொண்டிருந்தோம்.சிறிது நேரம் சென்று செந்தில் வந்து சேர்ந்தார்.தொடர் பதிவு,அரசியல்,ஆப்கனிஸ்தான்,சிங்கப்பூர்.,டார்வினின் கொள்கை, நியூட்டனின் மூன்றாம் விதி ,சினிமா என்று எதைப் பற்றி எல்லாமோ பேசிக்கொண்டிருந்தோம். என்னால் அதிக நேரம் இருக்க முடியாத காரணத்தால் 6.15க்கு விடை பெற்றுக்கொண்டேன்.


என்னைத்தவிர  வந்திருந்த அனைவரும் இளைஞர்கள்.(பதிவுலகமே இளைஞர்களின் பாசறைதானே)அந்த வட்டத்தில் நான் எப்படிப் பொருந்தினேன்?வியப்பாகவே இருக்கிறது.


                     சிவகுமார்,சதீஷ்,சிராஜ்,கே.ஆர்.பி.செந்தில்,பிரபாகரன்,ரஹிம் கஸாலி,காலி இருக்கை செ.பி.
நன்றி நண்பர்களே!சில மணித்துளிகள் என்னை ஒரு இளஞனாக உணர வைத்தமைக்கு!
மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்,சந்திப்புக்குப் பின்! நன்றி.

47 கருத்துகள்:

 1. இன்று மாலை நான் ஏற்கனவே ஒரு இனிய நிகழ்வுக்குச் செல்ல ஒப்புக் கொண்டிருந்ததால் என்னால் இந்த சத்சங்கத்தில் பங்கெடு்க்க இயலாமல் போய் விட்டதில் மிக வருத்தம். ஒரு இனிய மாலை உங்களுக்கு அமைந்ததில் மிக்க மனமகிழ்வு.

  பதிலளிநீக்கு
 2. //சில மணித்துளிகள் என்னை ஒரு இளஞனாக உணர வைத்தமைக்கு!//

  நீங்கள் என்றுமே இளைஞன் தான் சார்! (உங்கள் எழுத்துக்களின் வாயிலாக).

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு மாலை.தாங்கள் எப்போதும் இளைஞர் தான்.அதிலென்ன் உங்களுக்கு சந்தேகம்..

  பதிலளிநீக்கு
 4. மகிழ்ச்சியான பகிர்வு.
  நீங்கள் என்றும் உள்ளத்தில் இளைஞ்ரே!

  பதிலளிநீக்கு
 5. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  பதிலளிநீக்கு
 6. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சமோசா அருமை. நீங்கள் எப்போதும் யுவ சென்னைவாசிதான் சார்.

  பதிலளிநீக்கு
 7. பொறாமையாக இருக்கிறது. சென்னைப் பயணத்தின் போது இதையும் அனுபவிச்சுடணும். உங்களுக்கு செய்தி அனுப்புறேன்.

  பதிலளிநீக்கு
 8. யூத் பதிவர் சந்திப்பா.....?நடத்துங்க...நடத்துங்க......

  பதிலளிநீக்கு
 9. பதிவர் சந்திப்பு.... மகிழ்ச்சியான தருணங்களை எங்களுடன் பகிர்ந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 10. வந்திருந்ததில் எல்லோரையும்விட நாம் ரெண்டு பேரும் மட்டுமே யூத்:)))

  பதிலளிநீக்கு
 11. பதிவுலகமே இளைஞர்கள் பாசறைதானே... இதை நான் வழிமொழிகிறேன். ஹி ஹி

  பதிலளிநீக்கு
 12. உங்கள் இடுகை வாசிக்க மகிழ்வாக இருந்தது. இப்படிப் பல சந்திப்புகள் நடக்கட்டும். மனம் 16 ஆகினால் உடலும் பதினாறு தானே! வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 13. ஒன்று இல்லையென்றால் மற்றொன்று!
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 14. @கே.ஆர்.பி.செந்தில்
  நம் இருவரில் யூத் யார்?நான்தான்!
  நன்றி செந்தில்

  பதிலளிநீக்கு
 15. பீச்சுல ஒரு பேச்சா? ம் ம் ம் நடத்துங்க.

  பதிலளிநீக்கு
 16. /சில மணித்துளிகள் என்னை ஒரு இளஞனாக உணர வைத்தமைக்கு!//
  >>>
  அந்த இளைஞர்கள்லாம் பொறமைப்படும் அழகு ஐயா நீங்கள்.

  பதிலளிநீக்கு
 17. அருமையான சந்திப்பு பாராட்டுக்கள் பாஸ்

  நீங்களும் மனதளவில் இளைஞர்தான் அதில் என்ன சந்தேகம் பாஸ்

  பதிலளிநீக்கு
 18. நல்லதொரு சந்திப்பு அமைந்தது குறித்து மகிழ்ச்சி சார்.

  பதிலளிநீக்கு
 19. தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன்!
  ஏனென்றால் பதிவுலகில் மிக மிக
  இளைஞன் நான் தானே!
  நன்றி பித்தரே!

  ௶புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 20. ம். கொடுத்து வைத்தவர்கள்.
  மதுரையிலும் யாராச்சும் இப்படி ஏற்பாடு பண்ணுங்கப்பா.

  பதிலளிநீக்கு
 21. ‘மெரினா’ போகாமலேயே போனது போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு.நண்பர் சையத் இப்ராம்ஷா அவர்களின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.
  நேற்று இல்லே,நாளை இல்லே,
  எப்பவும் நீங்கள் இளைஞர்தான்!

  பதிலளிநீக்கு
 22. பிளாகர் ராஜி கூறியது...

  //பீச்சுல ஒரு பேச்சா? ம் ம் ம் நடத்துங்க.//
  எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

  பதிலளிநீக்கு
 23. ராஜி கூறியது...

  /சில மணித்துளிகள் என்னை ஒரு இளஞனாக உணர வைத்தமைக்கு!//
  >>>
  //அந்த இளைஞர்கள்லாம் பொறமைப்படும் அழகு ஐயா நீங்கள்.//
  :)) நன்றி ராஜி!

  பதிலளிநீக்கு
 24. K.s.s.Rajh கூறியது...

  // அருமையான சந்திப்பு பாராட்டுக்கள் பாஸ்

  நீங்களும் மனதளவில் இளைஞர்தான் அதில் என்ன சந்தேகம் பாஸ்//

  நன்றி ராஜ்

  பதிலளிநீக்கு
 25. @புலவர் சா இராமாநுசம்
  மிகக்குறுகிய நேர அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.நீங்கள் இருந்திருந்தால் மழையில் நனைந்திருக்கலாம்--கவி மழையில்1
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 26. சிவகுமாரன் கூறியது...

  // ம். கொடுத்து வைத்தவர்கள்.
  மதுரையிலும் யாராச்சும் இப்படி ஏற்பாடு பண்ணுங்கப்பா.//
  சீனா சார்கிட்டச் சொல்லுங்க!
  நன்றி சிவகுமாரன்

  பதிலளிநீக்கு
 27. வே.நடனசபாபதி கூறியது...

  //‘மெரினா’ போகாமலேயே போனது போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு.நண்பர் சையத் இப்ராம்ஷா அவர்களின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.
  நேற்று இல்லே,நாளை இல்லே,
  எப்பவும் நீங்கள் இளைஞர்தான்!//
  நன்றி சபாபதி சார்.

  பதிலளிநீக்கு
 28. கலக்கலான சந்திப்பு! ஐயா நீங்களும் யூத்து தான்! அதிலென்ன சந்தேகம்?

  பதிலளிநீக்கு
 29. மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்,
  உற்சாகம் எங்களையும் ஒட்டிக்கொண்டது .

  பதிலளிநீக்கு
 30. தாங்கள் எப்போதும் இளைஞர் தான்...அதிலென்ன் உங்களுக்கு சந்தேகம்...

  பதிலளிநீக்கு
 31. நல்ல பகிர்விற்கு நன்றி அய்யா சென்னை பித்தன் அவர்களே. உங்களைச் சந்தித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. சீக்கிரமே அடுத்த சந்திப்ப போட்ருவோம்.

  பதிலளிநீக்கு