உன் பாத தூளி பட்டவுடன்
பாதையின் முட்களெல்லாம்
மலர்களாய் மாறினவே!
உன் தொடுகையின் மந்திரத்தால்
வாடிப்போன செடிகளெல்லாம்
உயிர்பெற்றுத் துளிர்த்தனவே!
உன் கூந்தலை வருடியதால்
மல்லிகைப் பூச்சரமும்
வாடவே மறந்ததுவோ!
பஞ்சுப் பாதங்களைத்
தழுவியதால் கடல் நீரும்
கரிப்பை இழந்தன்றோ!
ஆனால்
உன் பார்வை பட்ட
நான் மட்டும் வாடியே
போனதேனடி?
உன் எல்லைகள் எதுவென்று
முன்னரே சொல்லியிருந்தால்
தொல்லைகள் ஏதுமின்றித்
தூரவே நின்றிருப்பேன்.
உன் தந்தையின் கண்டிப்பு
உனக்குத் தெரியாதா?
பின் ஏனடி என்னைக் காதலித்துப்
பித்தனாய் ஆக்கி விட்டாய்?
சந்தித்த நாட்களில்
என்றேனும் ஒரு நாள்
சொன்னதுண்டா நீ
ஜெயிக்காது நம் காதலென்று,
எத்தனை நாட்கள்
எத்தனை இடங்கள்
எத்தனை சந்திப்புக்கள்
அத்தனையும் நிகழ்கையில்
அப்பா நினைவு வரவில்லையா?
கடற்கரை மணலில்
கண்கலங்க வைத்து விட்டுக்
காணாமல் போனவளே!
ஒற்றை வாக்கியத்தில் என்
உள்ளத்தை நொறுக்கி விட்டு
ஓடியே போனவளே!
ஆயினும்
என் உள்ளத்தை விட்டு
ஓட முடியாமல்
சிறைப் பட்டுப் போனவளே!
நீ எங்கிருந்தாலும் வாழ்க!
சென்னைப் பித்தனுக்குள் ஒரு காதல் பித்தன்! அருமை ஐயா கவிதை!
பதிலளிநீக்குஆட்டோகிராப் கவிதை அருமை சார்
பதிலளிநீக்குகவிதைக்கு மட்டுமல்ல, காதலுக்கும் பொய் அழகுதான்...!
பதிலளிநீக்குபுலம்பல் கவிதையாயினும் நிறைய உண்மையான உணர்வுகளை உணர முடிகிறது.
பதிலளிநீக்குயாரையுமே மிகச்சுலபமாகப் பித்தனாக்குவதே இந்த ஒருசிலப் பெண்களின் தனிச்சிறப்பு.
கவிதையும் அருமையா எழுதறீங்களே! எப்படி சார்? இப்படியெல்லாம் எல்லா டிபார்ட்மெண்ட்டிலும் கலக்குறீங்க? அருமையான கவிதை!
பதிலளிநீக்குதமஓ 5.
பதிலளிநீக்கு''..ஒற்றை வாக்கியத்தில் என்
பதிலளிநீக்குஉள்ளத்தை நொறுக்கி விட்டு
ஓடியே போனவளே!
ஆயினும்
என் உள்ளத்தை விட்டு
ஓட முடியாமல்
சிறைப் பட்டுப் போனவளே!...''
உண்மைக் காதல் பித்தனாக்கிவிட்டது... எளிமையான சொற்களில் ஒரு காதல்....நன்று வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
உன் எல்லைகள் எதுவென்று
பதிலளிநீக்குமுன்னரே சொல்லியிருந்தால்
தொல்லைகள் ஏதுமின்றித்
தூரவே நின்றிருப்பேன்//
மொத்த கவிதையும் மிக மிக அழகு
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 6
பதிலளிநீக்குTha.ma 6
பதிலளிநீக்குவணக்கம்! நீங்காத நினைவுகளுக்கு தங்கள் நினைவுக் கவிதை.
பதிலளிநீக்குகாதலியை நினைத்து உருகும் கவிதையைப் படித்தவுடன், சென்னை பித்தன் வர வர,
பதிலளிநீக்குகவிதை பித்தன் ஆகிறாரோ என்ற ஐயம் எனக்கு!
இளமையின் காதல்...
பதிலளிநீக்குஇப்பொழுதும் நினைவுகளில்
தாலாட்டாய் பித்தனின் ஐய்யாவின்
கனவுகளில்......
அருமை அய்யா...
பதிலளிநீக்கு//பஞ்சுப் பாதங்களைத்
பதிலளிநீக்குதழுவியதால் கடல் நீரும்
கரிப்பை இழந்தன்றோ//
அருமை! அருமை!
கற்பனைப் பித்தன்! கவிதைப்
பித்தன்!சிந்தனைப் பித்தன்!ஆகா..!
இன்று காதல் பித்தன்! இனி
எத்தனைப் பித்தனோ..?
புலவர் சா இராமாநுசம்
நன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி பாலா
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி வைகோ சார்
பதிலளிநீக்குநன்றி துரை டேனியல்
பதிலளிநீக்குநன்றி கோவைக்கவி
பதிலளிநீக்குநன்றி ரமணி
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குநன்றி சபாபதி அவர்களே
பதிலளிநீக்குநன்றி சுரேஸ்குமார்
பதிலளிநீக்குநன்றி சங்கரலிங்கம்
பதிலளிநீக்குநன்றி ஹாஜா மைதீன்
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
பதிலளிநீக்குகாதல் கவிதை பிரமாதமா இருக்கே சார்....
பதிலளிநீக்குநன்றி ஆதி வெங்கட்
பதிலளிநீக்கு