தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 26, 2012

பின் நவீனத்துவத்தைத் தவற விட்ட கவிதை!

பாதையில் செல்லும்போது பார்வையில் கம்பம் பட்டால்
உபாதை ஒன்று  தீர்க்க உடனே விரையும் மனிதன்!
கால்தூக்கிச் சிறு நீர் கழிக்கும் தெரு நாயினும் கீழாய்!
தெருவெல்லாம் மூத்திர நாற்றம்.


நாலைந்து பேராய் நடுத் தெருவில் நின்று
கூசிடும் வார்த்தை பேசிக் கூச்சலிடும் மனிதன்!
கூடி நின்றுக் குலைத்துச் சண்டையிடும் வெறிநாய்!
தெருவெல்லாம் பேரிரைச்சல்!


குப்பைத் தொட்டி வரை செல்வதற்குச் சோம்பி
நடுத்தெருவில் குப்பை போடும் மனிதன்!
குப்பையைக் கிளறித் தெருவெல்லாம் இறைக்கும் நாய்.
தெருவே ஒரு குப்பைத்தொட்டி!


நல்லதாய் ஒன்று சொல்ல வேண்டின்
நடுத்தெருவில்  நாய்கள் செய்யும்
அந்த ஒன்றை மனிதன் செய்வதில்லை!
நாகரிகம்!நாகரிகம்!!

டிஸ்கி:கடைசியில் விளக்கமாக ஒரு வார்த்தை சேர்த்திருந்தால் இது ஒரு பின் நவீனத்துவ இலக்கியமாக அமரத்துவம் பெற்றிருக்குமோ?!
 

28 கருத்துகள்:

  1. சார் நீங்க கடைசியா சொன்ன விஷயம் நடக்கலன்னு யார் சொன்னா? கொஞ்சம் பீச் பார்க் பக்கம் சென்று பாருங்கள். இன்னும் கொஞ்ச நாள்ல நாய்களுக்கே கிளாஸ் எடுப்போம்.

    பதிலளிநீக்கு
  2. ஆதங்கத்தில் எழுந்த வரிகள்! வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒப்பீடுகள் அருமை, ஐயா!

    [ஆனாலும் நாற்றத்திற்காக மூக்கையும் பேரிரைச்சலுக்காகக் காதையும் பொத்திக்கொண்டே படிக்க முடிந்தது;

    நல்லவேளை கடைசியில் கண்ணையாவது திறக்க விட்டீர்களே!
    அதுவரை சந்தோஷம்.]

    ========================
    பின்குறிப்பு:

    {சென்ற பதிவின் படங்கள் என் கண்களையும் மனதையும் மிகவும் கஷ்டப் படுத்தி விட்டது, ஐயா. அந்தக்குறள் மட்டுமே எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் நான் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை}

    பதிலளிநீக்கு
  4. கடைசியில் விளக்கமாக ஒரு வார்த்தை சேர்த்திருந்தால் இது ஒரு பின் நவீனத்துவ இலக்கியமாக அமரத்துவம் பெற்றிருக்குமோ?!//

    True...

    பதிலளிநீக்கு
  5. உறைக்கிற வரிகள்.

    பாலா சொல்லுறது ஷாக்! (எந்த பீச்ல எந்த டைம்னு சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை
    அண்ட ஒரு வார்த்தை சொல்லாவிட்டாலும்
    அதிகம் உறைத்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இன்றைக்கு நாய்கள் கூட மனிதர்களைவிட நாகரீகமாக நடந்துகொள்கின்றன.மனிதன் தான் விலங்குகளைவிட கேவலமாக நடந்துகொள்கிறான் என்பதை கவிதையால் சாடியிருக்கிறீர்கள்.நன்று.

    பதிலளிநீக்கு
  8. அங்காடி நாய்போல
    அலைந்துத் திரிவார்க்கும்
    அடிப்பட் நாய்போல
    அலறி வருவார்க்கும்
    இக்கவிதை உரியது!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. இதைத்தான் "நாய் பொழப்பு" என்று கூறுகிறார்களோ?
    அனைத்தையும் நாயிடம் கற்ற மனிதன், அந்த நன்றி உணர்ச்சியை மட்டும் மறந்தது ஏனோ?

    பதிலளிநீக்கு
  10. @பாலா
    அப்பவும் ஏதோ ஒரு தனியிடம்தான் தேடுகிறார்கள்!கால மாற்றம் எது வரை போகும்,பார்ப்போம்!
    நன்றி பாலா

    பதிலளிநீக்கு
  11. நன்றி வைகோ சார்.

    உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது

    பதிலளிநீக்கு
  12. @அப்பாதுரை
    நன்றி!
    கண்ணா! ரெண்டு லட்டு திங்க ஆசையா!

    பதிலளிநீக்கு
  13. கே.ஆர்.பி.செந்திலுக்கு அடுத்து நீங்கதான் சார் :))

    பதிலளிநீக்கு
  14. நாயிடம் நன்றியாவது இருக்கிறது இவர்களிடம் அதுவும் இல்லையே ?

    பதிலளிநீக்கு
  15. நல்ல வேளை கடைசியில் அதை சேர்க்காமல் விட்டீர்களே! நன்றி. இதனால்தான் இந்த பின்நவீனத்துவ கவிதைகள் என்னை அதிகம் கவர வில்லை. படிப்பதோடு சரி. படைக்க முற்படுவதில்லை. நமக்கு எளிமைதான் பலம். அருமையான படைப்பு. ஆழமான சிந்தனை. தொடருங்கள் சார்.

    பதிலளிநீக்கு