தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 09, 2012

விருதிலிருந்து விருது வரை!


இரு தினங்களுக்கு முன் இரண்டாவது முறையாக எனக்கு “versatile blogger” விருது வழங்கப்பட்டது.விருது வழங்கி என்னைப் பெருமைப் படுத்தியவர் நண்பர் எல்.கே. அவர்கள்.விருதுகள் எப்போதுமே மகிழ்ச்சியளிப்பவையாகவே இருக்கின்றன.சிலர் அதனைக் குறைத்து மதிப்பிடலாம்.தன் எழுத்தை விரும்பும், மதிக்கும் எவரும்,வழங்கப்படும் விருதை விரும்பவும் மதிக்கவுமே செய்வர்.இந்த மாதிரி விருதுகள் ஒரு டானிக் போல் அமைகின்றன. மேலும் எழுதுவதற்கு நமக்குச் சக்தி கொடுக்கின்றன.எழுத எழுதத்தான் நம் எழுத்து சிறக்கும்.நாம் வளர்வோம்.எனவே விருதுகள் நாம் வேகமாக வளர உதவுகின்றனகாம்ப்ளான் போல!

எனக்கு ஒரு சந்தேகம்.உண்மையாகவே காம்ப்ளான் சாப்பிட்டால் குழந்தைகள் அதிக உயரமாக வளர்வார்களா?இது போன்ற சக்தி பானங்கள் அருந்துவதால், சோர்வடையாமல் இருக்கலாம், பருமனாகலாம்.ஆனால் உயரம் அதிகமாகுமா? பொதுவாகவே உயரம் ,குள்ளம் என்பதெல்லாம் ஜீன்ஸ்(genes)சம்பந்தப்பட்ட விஷயம் எனத் தோன்றுகிறது..

ஜீன்ஸ் என்று சொன்னதும் ஒரு தமிழ்ப்படம் நினைவுக்கு வருகிறது.அதில் பரம்பரையாக இரட்டைக் குழந்தைகள் பிறப்பதால், genes என்று பெயர் வைக்க எண்ணிக் கடைசியில் jeans என்று வைத்து விட்டார்கள்!

இந்த ஜீன்ஸ் என்பது இளைஞர்களுக்கு மிக வசதியான உடை யாகி விட்ட.து—இளைஞிகளுக்கும்தான்! துவைக்காமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அணியலாம்! அதிலும்,கிழிந்த,பொத்தலான ஜீன்ஸு க்கு மதிப்பு அதிகமாம். bullet wash என்று துப்பாக்கியால் துளையிட்டுக்கூட ஜீன்ஸ் விற்கிறார்களாம்!

பத்தாண்டுகளுக்கு முன் நான் துபாய் சென்றிருந்தபோது என் மகளும், மருமகனும், கட்டாயப் படுத்தி ‘லூ லூ’ வுக்கு அழைத்துச் சென்று ஒரு ஜீன்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டனர்.திரும்பி வந்து கொஞ்ச நாள் அதைப் போட்டுக் கொண்டு திரிந்தேன்.(ஜீன்ஸ்,டீ சர்ட்,ரீபாக் ஷூ!).பின் மடித்துக்  கப்போர்டில் வைத்தேன் ! இப்போது அணிய நினைத்தாலும்,அணிய முடியாது. அப்போது இருந்ததை விட இடுப்புச் சுற்றளவு இப்போது நான்கு அங்குலம் குறைவு! அது அங்கேயே தூங்க வேண்டியதுதான்!

தூக்கம் என்றதும் நான் சொல்ல வேண்டியது ஒன்று.நான் ஓய்வு பெற்ற பலரைப் போல் பகலெல்லாம் தூங்குவதில்லை.அரை மணி நேரம் இளைப்பாறிக் கொள்வேன். அவ்வளவே.பொழுது போவதற்கு இருக்கவே இருக்கிறது  வலைப்பூ என்னும் போதை.நான் தூங்காமல் எதையாவது எழுதி உங்களைத் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.இதற்கு விருதும் கிடைக்கிறது!

42 கருத்துகள்:

 1. இந்த போதை என்றும் விலகாமல் இருக்கட்டும். (பகல்) தூக்கம் உங்களைத் தழுவாதிருக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் இரண்டாம் முறையாக “versatile blogger” விருது பெற்றமைக்கு. பதிவை அந்தாதிபோல் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 3. பொழுது போக்குப்பதிவு அருமை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. விருது பெற்றதற்கு வாழ்த்துகள் சார்.

  பதிலளிநீக்கு
 5. //நான் தூங்காமல் எதையாவது எழுதி உங்களைத் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.

  இதற்கு விருதும் கிடைக்கிறது!//

  ஆஹா! வாழ்த்துகள் ஐயா !!

  பதிலளிநீக்கு
 6. //நான் தூங்காமல் எதையாவது எழுதி உங்களைத் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.இதற்கு விருதும் கிடைக்கிறது!


  //

  அப்படியல்லாம் இல்லை , நல்ல தகவலுடன் பதிவு போடுறிங்க

  பதிலளிநீக்கு
 7. நீங்க தூங்காம எங்கள தூங்கவைக்கவில்லை! சிரிக்கவைக்கிறீர்கள்! சிந்திக்க வைக்கிறீர்கள்...! விருதுக்கு வாழ்த்துகள்......

  பதிலளிநீக்கு
 8. மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்! விருது மேல் விருது வந்து உம்மை சேரும்! அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் வலைப் பதிவைச் சேரும்!

  பதிலளிநீக்கு
 10. தினம் இரண்டு பச்சை வாழை பழம் சாப்பிட்டால் உயரமாகி விடுவார்கள் குழந்தைகள் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை வந்தது, என்ன ஆனது என்று தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 11. விருதுக்கு விருது வழங்கிவிட்டீர்
  நன்று நன்றி!

  செய்க

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. வலைப்பூவை போதை என்று உண்மையை சொன்னதற்கு நன்றி சார். அப்புறம் காம்ப்ளானை இன்னுமா நம்புகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 13. விருது,உயரம்,ஜீன்ஸ் என ரவுண்ட் அடித்தது போல சுவாரஸ்யமாக இருந்தது படிப்பதற்கு

  பதிலளிநீக்கு
 14. இரட்டை விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார். சக பதிவராய் மிக்க மகிழ்வடைகிறேன்.

  பதிலளிநீக்கு
 15. இரண்டாம் முறையாக விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.
  அந்தாதிப் பதிவும் வாசித்தேன். சுவையாக இருந்தது. நன்றி. பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு