தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 01, 2011

சூரியாஸ்தமனம்!(கவிதை)

”அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம்
…………..
………….
பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
என்னடீயிந்த வன்னத்தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
----------------------(பாஞ்சாலி சபதம்)

ஆம் அய்யா பாரதி அத்தனையும் சரி
மலை வாயில் சூரியன் விழும் நேரம் வந்தாச்சு!

மெல்ல மறைகின்றான் கதிரவன் அங்கே!!

படர் முகில் வடிவங்கள் என்ன என்ன அவற்றின்
சுடர் விடும் வண்ணங்கள் என்ன என்ன!
சிவந்த வானத்தில் கரு நிற முகில்கள்!

சிவப்பும் கருப்பும் என்னவொரு கலவை!

மஞ்சள் வண்ணத்தில் துண்டு துண்டாய்
பஞ்சுப் பொதி போன்ற மேகங்கள்

அதோ ஒரு மேகம்!மாம்பழம் போல் தோற்றம்!
சிறுத்தை பாய்வது போல் மற்றுமொரு மேகம்!

மறைகின்ற சூரியனை தடுக்கவா முடியும்
வெறும் கை கொண்டு நிலைமையை மாற்றவா முடியும்!

சுட்டெரிக்கும் சூரியன் மறைந்திடுவான்

கொட்டு முரசே! குளிர்ந்த நிலவொளியில்

பாலகர்கள் பம்பரம் விளையாட தீப்பந்த ஒளியினிலே

அம்மா பரிமாற

இரட்டை இலை போட்டு நிலாச் சோறு நடக்குதென்று!

25 கருத்துகள்:

  1. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    //அரபுக் கவிதையோ... அருமை..//
    அரபோ,மரபோ,நடப்போ,ஏதோவொண்ணு!
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  2. சமுத்ரா கூறியது...

    // nice!//
    நன்றி சமுத்ரா!

    பதிலளிநீக்கு
  3. Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...
    //கவிதை அருமை!//

    நன்றி ரவிகுமார்!

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சம் கவிதையை பிரித்து காட்டி இன்னும் அழகுப்படுத்துங்கள் கவிதை இன்னும் பிரபலமடையும்..

    பதிலளிநீக்கு
  5. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //இந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள்..//
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  6. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //கொஞ்சம் கவிதையை பிரித்து காட்டி இன்னும் அழகுப்படுத்துங்கள் கவிதை இன்னும் பிரபலமடையும்..//
    ஆலோசனைக்கு நன்றி!முயன்றிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  7. அஸ்தமன சூரியனை குறித்த கவிதை அசத்தல் ...அரசகட்டளை என்ற படத்தில் வந்த ஒரு பாட்டினையும் கருத்தினையும் நினைவு படுத்தியது ..
    ஆனால் எதிர்மறை கருத்தினை மிக சாதுர்யமாக வெளி படுத்தி உள்ள யுக்தி பாராட்டுக்குரியது .....வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  8. FOOD கூறியது...
    //நன்றாய் ரசித்து எழுதுகின்றீர்கள். பகிர்விற்கு நன்றி.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. Vasu கூறியது...

    //ஆனால் எதிர்மறை கருத்தினை மிக சாதுர்யமாக வெளி படுத்தி உள்ள யுக்தி பாராட்டுக்குரியது //
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  10. அரசியல் கட்சிகளின் வண்ணத்தை படம் பிடித்து கவிதையில் காட்டி இருக்கீங்களே..... அருமைங்க.

    பதிலளிநீக்கு
  11. கவிதை அருமை. ஆனால் நண்பர் வாசு கூறியது போல,'ஆயிரம் கைகொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற பாட்டையும் சிலர் நினைவு படுத்தக் கூடும்.

    பதிலளிநீக்கு
  12. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //கவிஞன் அறம் பாடிட்டாரே...//
    அறம் பாடும் வல்லமை எனக்கில்லை!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  13. Chitra கூறியது...

    //அரசியல் கட்சிகளின் வண்ணத்தை படம் பிடித்து கவிதையில் காட்டி இருக்கீங்களே... அருமைங்க//.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  14. வே.நடனசபாபதி கூறியது...

    //கவிதை அருமை. ஆனால் நண்பர் வாசு கூறியது போல,'ஆயிரம் கைகொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற பாட்டையும் சிலர் நினைவு படுத்தக் கூடும்.//
    ஆதவன் மறைந்தால் கையும் சேர்ந்தல்லவா மறைந்து போகும்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. சுட்டெரிக்கும் சூரியன் மறைந்திடுவான்

    அம்மா பரிமாற//

    :)

    அழகா சொன்னீங்க உங்க விருப்பத்தை கவிதையில்...

    நல்ல ரசனையும்

    பதிலளிநீக்கு
  16. பயணமும் எண்ணங்களும் கூறியது...

    சுட்டெரிக்கும் சூரியன் மறைந்திடுவான்

    அம்மா பரிமாற//

    //:)

    அழகா சொன்னீங்க உங்க விருப்பத்தை கவிதையில்...

    நல்ல ரசனையும்//
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. அய்யா...தாமதமாக வந்திருக்கிறேன்...வரிகளை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  18. டக்கால்டி கூறியது...
    //அய்யா...தாமதமாக வந்திருக்கிறேன்...வரிகளை ரசித்தேன்...//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  19. எலக்சன் வராமலே ரிசல்ட்டை சொல்லிவிட்டீர்களே.

    பதிலளிநீக்கு
  20. கே. ஆர்.விஜயன் கூறியது...

    // எலக்சன் வராமலே ரிசல்ட்டை சொல்லிவிட்டீர்களே.//
    ஒரு நம்பிக்கைதான்!
    நன்றி விஜயன்.

    பதிலளிநீக்கு