மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.
“நெய்யப்பம் தின்னால்,ரெண்டுண்டு காரியம்” என்று.
அதாவது வயிறும் நிறையும், கையில் இருக்கும் நெய்யைத் தலையிலும் தடவிக் கொள்ளலாம் என்ற பொருள்!
இது போலத் தமிழர்களின் பிரசித்தமான உணவான இட்லிக்கு ஒரு புதிய உபயோகம் தெரிய வந்துள்ளது.
இட்லியால் வயிறு நிறையும் என்பதுடன்,இது’ ரெண்டுண்டு காரியம்’ என்பது போல் மற்றொரு உபயோகம்.
இட்லி உங்கள் பணத்தைக் காக்கும்!
இது எப்படியிருக்கு!
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு!
தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி விரைகிறது அந்த ரயில்.
ஒருபெண்மணி,தன் மகளுடன் பிரயாணம் செய்கிறார்.
அவர் கையில் இண்டெர்னெட் மூலம் பதிவு செய்த ’இ டிக்கட்’ வைத்திருக்கிறார்.
பரிசோதகர் வருகிறார்.
பெண்மணி டிக்கெட்டையும்,தன் ஓட்டுனர் உரிமத்தையும்(அடையாளச் சான்று) எடுத்து
நீட்டுகிறார்.
பரிசோதகர் வாங்கிப் பார்க்கிறார்.
அந்தப் பெண்மணியின் துரதிர்ஷ்டம்—அது உரிமத்தின் வண்ண நகல்,அசல் அல்ல என்பது தெரிகிறது!
பரிசோதகர்,1600 ரூபாய் அபராதம் என்று கூறி ,மீதிப் பரிசோதனை முடித்த பின் வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் செல்கிறார்!
என்ன செய்வார் இவர்?
கைப்பையில் இருக்கும் வங்கிப் பாஸ் புத்தகம் நினைவுக்கு வருகிறது!
எடுக்கிறார்!
ஆனால் அதில் புகைப்படம் இல்லை!
பையைத்துழாவுகிறார்!
புகைப்படம் ஒன்று கிடைக்கிறது!பரிசோதகர் வரும் முன் இதைப் பாஸ் புத்தகத்தில் ஒட்ட வேண்டுமே!
தான் உண்பதற்காகக்கொண்டு வந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரிக்கிறார்;ஒரு விள்ளல் எடுக்கிறார்.புகைப்படத்தில் தடவுகிறார்.புத்தகத்தில் ஒட்டுகிறார் ”இறைவா,நன்றாக ஒட்ட வேண்டுமே “ என்று வேண்டிக் கொண்டே!
அடையாளச் சான்று தயார்!
பரிசோதகர் வருகிறார்!பார்க்கிறார்! எமாற்றத்துடன் அகல்கிறார்.
சாதாரண இட்லி 1600 ரூபாயைக் காப்பாற்றி விட்டது!
நீதி:-ரயில் பயணத்தின் போது அவசியம் இட்லி எடுத்துச் செல்ல வேண்டும்!
(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி!)
நானும் இந்த செய்தியை படித்தேன்.‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’என்ற பழமொழி சரிதான் அல்லவா?
பதிலளிநீக்குஇட்லி....
பதிலளிநீக்குஇன்றைக்கு இட்லி எனக்குத்தான்
பதிலளிநீக்குரயில் பயணத்தின் பொது மறக்காமல் எடுத்துப்போக வேண்டியது டிக்கெட்டா? இட்லியா? புதிய பட்டிமன்றம். நடுவர் அய்யா சென்னை பித்தன் அவர்கள்.
பதிலளிநீக்குஆஹா....... சமயோசிதம். அருமையான ஐடியா.
பதிலளிநீக்குஅதுசரி............ நீங்கள் என்ன சக பயணியா அப்போது?
அனுபவம் நல்லாத்தான் இருக்கு.
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ஹா ஹா ஹா ஹ ஹா அடகாசமான ஐடியா தல.....
பதிலளிநீக்குஆகா... எவ்வளவு தேவையான பதிவுங்க.. எப்படி இதேல்லாம்..
பதிலளிநீக்குவே.நடனசபாபதி சொன்னது…
பதிலளிநீக்கு//நானும் இந்த செய்தியை படித்தேன்.‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’என்ற பழமொழி சரிதான் அல்லவா?//
மிகச்சரி!எனக்கும் இந்தச் சிறு துரும்பு பல் குத்த உதவி விட்டது!
நன்றி
ஆகா... அருமையான பதிவு..
பதிலளிநீக்குரஹீம் கஸாலி கூறியது...
பதிலளிநீக்கு//இட்லி....//
சூடா!1/2 ப்ளேட்தான்!
ரஹீம் கஸாலி கூறியது...
பதிலளிநீக்கு// ரயில் பயணத்தின் பொது மறக்காமல் எடுத்துப்போக வேண்டியது டிக்கெட்டா? இட்லியா? புதிய பட்டிமன்றம். நடுவர் அய்யா சென்னை பித்தன் அவர்கள்.//
இட்லி சாம்பார் போல் சுவையான தலைப்பு!நான் தயார்!
நன்றி கஸாலி!
கக்கு - மாணிக்கம் கூறியது...
பதிலளிநீக்கு//ஆஹா....... சமயோசிதம். அருமையான ஐடியா.
அதுசரி............ நீங்கள் என்ன சக பயணியா அப்போது?
அனுபவம் நல்லாத்தான் இருக்கு.//
இது பேப்பர் செய்தி!
நன்றி மாணிக்கம்!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ஹா ஹா ஹா ஹ ஹா அடகாசமான ஐடியா தல.....//
பாராட்டப் பட வேண்டிய பெண்மணி!
நன்றி மனோ!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு//ஆகா... எவ்வளவு தேவையான பதிவுங்க.. எப்படி இதேல்லாம்..//
இந்த மாதிரி முக்கியமான செய்திகளையெல்லாம் தேடித்தேடி எடுக்க வேண்டியிருக்கிறது!
நன்றி சௌந்தர்!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//ஆகா... அருமையான பதிவு..//
என் கடன் பணி செய்து கிடப்பதே!
நன்றி கருன்!
அருமையான பதிவு.
பதிலளிநீக்குரயில் பயணத்தில் அடையாளம் காட்ட வேண்டும் என்பதே புதிதாக இருக்கிறதே? சாதாரண டிகெட் வைத்திருந்தால் அடையாளம் கேட்பதில்லையே? இதென்ன புது வம்பு?
பதிலளிநீக்குஅந்தம்மா இட்லியை ஆயுதமாகப் பயன்படுத்தினார் என்று நினைத்துப் படித்தேன் - எல்லாரும் என்னைப் போல் இட்லி செய்வார்களா?
malathi in sinthanaikal சொன்னது…
பதிலளிநீக்கு//அருமையான பதிவு.//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
அப்பாதுரை கூறியது...
பதிலளிநீக்கு// ரயில் பயணத்தில் அடையாளம் காட்ட வேண்டும் என்பதே புதிதாக இருக்கிறதே? சாதாரண டிகெட் வைத்திருந்தால் அடையாளம் கேட்பதில்லையே? இதென்ன புது வம்பு?//
இ டிக்கட்டுக்குக் காட்டவேண்டும் போலிருக்கிறது.எனக்கு எப்போதும் காட்டித்தான் ஆக வேண்டும்-மூத்தகுடிமகன்!
//அந்தம்மா இட்லியை ஆயுதமாகப் பயன்படுத்தினார் என்று நினைத்துப் படித்தேன் - எல்லாரும் என்னைப் போல் இட்லி செய்வார்களா?//
எப்படி?மல்லிகைப்பூவா?மண்டை உடைக்கும் கல்லா?
நன்றி அப்பாதுரை!
(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி!)
பதிலளிநீக்கு..Times of India.... ha,ha,ha,ha,ha.... Idli times!!!!
கேவலம் ... நம் நாட்டில் ஒரு சிறந்த அடையாள அட்டையோ, தேசிய அட்டையோ இல்லாமல் போனதன் விளைவு ...
பதிலளிநீக்குChitra கூறியது...
பதிலளிநீக்கு(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி!)
//..Times of India.... ha,ha,ha,ha,ha.... Idli times!!!!//
’’ இட்லியின் நேரங்கள்!’’--இதுவும் நல்லாத்தான் இருக்கு!
நன்றி சித்ரா!
இக்பால் செல்வன் கூறியது...
பதிலளிநீக்கு//கேவலம் ... நம் நாட்டில் ஒரு சிறந்த அடையாள அட்டையோ, தேசிய அட்டையோ இல்லாமல் போனதன் விளைவு ...//
உண்மைதான் இக்பால் செல்வன்!இப்போதுதான் தொடங் கியிருக்கிறார்களாம்.பார்ப்போம், எப்போது முடிக்கிறார்கள் என்று!
வருகைக்கு நன்றி!
அதான் பெரியங்க சொல்வாங்க, ”இடுக்கண் வருங்கால் இட்லி எடுக்க ” என்று
பதிலளிநீக்குgoma கூறியது...
பதிலளிநீக்கு//அதான் பெரியங்க சொல்வாங்க, ”இடுக்கண் வருங்கால் இட்லி எடுக்க ” என்று//
ஆஹா! அப்படி வேறு சொல்லியிருக்கிறார்களா?!:-D
நன்றி!