தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 18, 2011

நான் என்னும் அகந்தை!

நான் என்னும் அகந்தை மனிதனின் எதிரி.

தன்னம்பிக்கை என்பது வேறு;அகம்பாவம் என்பது வேறு.
என்னால்தான் எல்லாமே முடியும்,நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு,இறுதியில் தோல்வியையே தரும்.

எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும்.

கி.வா.ஜ. அவர்கள் சொல்வார்கள்’குழம்பு குழம்பியிருக்கிறது,ரசம் தெளிவாக இருக்கிறது.காரணம் குழம்பில் ’தான்’ இருக்கிறது;ரசத்தில் அதுஇல்லை என்று.(பிராமணர்கள்,குழம்பில் போடும் காயைத் ’தான்’ என்று சொல்வார்கள்)

அகந்தையின் விளைவு குழப்பம்;அதன் விளவு அவசரம்;செயல்திறன்
குறைபாடு;தோல்வி!

பார்த்தனுக்குப் போருக்கு முன் அகந்தை ஏற்பட்டது!
போர் தொடங்கு முன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான் ----

”ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத!

படைகளப் பார்க்க விரும்பும் பார்த்தன் சொல்கிறான்”என்னுடைய ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து”.

நாம் நமது மகிழ்வுந்து ஓட்டியைப் பார்த்து’வண்டியை எடு’ என்றுதான் சொல்வோம்.’என் வண்டியை எடு’என்று சொல்வதில்லை

ஆனால் அர்ஜுனன் சொல்கிறான்,தேரோட்டியாக வீற்றிருக்கும் பகவானைப் பார்த்து.

இந்த அகம்பாவத்தின் விளைவு –குழப்பம்,பேடிமைத்தனம் எல்லாம்.
இதைத் தெளிய வைக்க மிகப் பெரிய அறிவுரையே தர வேண்டியதாகிறது பகவானுக்கு!

ஒருமன்னன் இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்த ஞானி தன் குடிலுக்குள் சென்று விட்டார்.
மன்னன் திகைத்தான்.

”ஞானியே, நான் வந்திருக்கிறேன்,வெளியே வந்து அருள் தாருங்கள்”
அவர் வரவில்லை.

”நான் சிம்மவர்மன் வந்திருக்கிறேன் ,வெளியே வாருங்கள்”
அவர் வரவில்லை.மன்னன் பொறுமை இழந்தான்.

“நான் இந்த நாட்டு மன்னன் வந்திருக்கிறேன்,உங்கள் அருளுக்காக”

உள்ளிருந்தே ஞானி சொன்னார்”நான் செத்த பின் வா!”

மன்னன் குழம்பினான் .அமைச்சரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருந்தனர்!

அவர் சொன்னார்” அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் நான் என்ற ஆணவத்தை;அதை துறந்து வரச்சொல்கிறார் ”என்று .

நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத்துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை!

அகங்காரம்,மமகாரத்தைத்-நான் எனது என்பதை- துறந்தால் நன்மையே நடக்கும்.

அரங்கன் அருள் புரியட்டும்!

(ஸ்வாமி பித்தானந்த சரஸ்வதியின் வெளி வராத அருளுரைகள்!)

26 கருத்துகள்:

  1. நலாலாயிருக்கு.. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

    // நலாலாயிருக்கு.. வாழ்த்துக்கள்!//
    நன்றி ரவிகுமார்!

    பதிலளிநீக்கு
  3. சமுத்ரா கூறியது...

    // விளக்கம் அருமை சார்..//
    நன்றி சமுத்ரா!

    பதிலளிநீக்கு
  4. குழம்பு குழம்பியிருக்கிறது,ரசம் தெளிவாக இருக்கிறது.காரணம் குழம்பில் ’தான்’ இருக்கிறது;ரசத்தில் அதுஇல்லை என்று.(பிராமணர்கள்,குழம்பில் போடும் காயைத் ’தான்’ என்று சொல்வார்கள்)//

    புது தகவலோடு நல்ல பல விஷயம் சொல்லிட்டு வருகிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  5. எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...

    //புது தகவலோடு நல்ல பல விஷயம் சொல்லிட்டு வருகிறீர்கள்..//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. Can I write ? It will be a counter view. May at times be harsh.

    பதிலளிநீக்கு
  7. Jo Amalan Rayen Fernando கூறியது...

    // Can I write ? It will be a counter view. May at times be harsh.//

    i do not think i have written anything controversial.still,if you feel that you have some thoughts against what i have written,you may express it.but pl.ensure that you do not hurt the feelings of others. even if i do not allow it here ,who can stop you from saying it in your blog?
    thank you for your visit.

    பதிலளிநீக்கு
  8. நான் எனும் அகந்தை நம்மை அழித்து விடும் என்பதை எளிமையாக, அறிவாக, புத்தி சொல்லி இருக்குறீர்கள். நன்றி.....

    பதிலளிநீக்கு
  9. FOOD கூறியது...
    //எவ்வளவு அருமையாக "நான்" எனும் அகந்தையை குறிப்பிட்டுள்ளார்!
    நல்ல பகிர்வு. நன்றிங்க.//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //நான் எனும் அகந்தை நம்மை அழித்து விடும் என்பதை எளிமையாக, அறிவாக, புத்தி சொல்லி இருக்குறீர்கள். நன்றி.....//

    நன்றி மனோ!
    (தொப்பிக்கதை படித்தீர்களா?!)

    பதிலளிநீக்கு
  11. நாயின் வால் என்றால் அது வளைந்துதானே இருக்கும்! அரங்கன் அருளாலும், ஆடலரசன் அருளாலும் அது மாறி நேராகி விடுமா என்ன?
    பொடி வைத்து தான் பொன் நகைகள் செய்வர்.
    ரசித்தேன் உங்களின் அறிவுரையை. :))

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு.

    இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்.

    "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிங்கிச்
    இடைக்கண் முரிந்தார் பலர்."

    புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!!!!

    பதிலளிநீக்கு
  13. நானை ஒழிப்பது மிக கடினம். அப்படி ஒழித்து விட்டால் வாழ்க்கையில் கவலையே இருக்காது.

    அரிய கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, என்று நாவளவில் சொன்னால் மட்டும் போதாது என்பதை சுவாமி பித்தானந்தா மிகவும் தெளிவாக கூறியுள்ளார் ! இக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளா இல்லையா என்பதை சுவாமி தான் கூறவேண்டும் ... வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  15. நான் என்ற எண்ணம் மற்றவர்களை துன்புறுத்தாத வகையில் இருப்பின் தவறு ஒன்றும் இல்லை என்பது என் கருத்து. நம் சுயம் மற்றவர்களின் சுயத்தை அழிக்கும் போதுதான் ஆணவமாக மாறுகிறது.

    பதிலளிநீக்கு
  16. நிறைய புதிய விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  17. //(ஸ்வாமி பித்தானந்த சரஸ்வதியின் வெளி வராத அருளுரைகள்!)//


    இது நீங்கள் தானே...

    பதிலளிநீக்கு
  18. Vasu கூறியது...

    // நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, என்று நாவளவில் சொன்னால் மட்டும் போதாது என்பதை சுவாமி பித்தானந்தா மிகவும் தெளிவாக கூறியுள்ளார் ! இக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளா இல்லையா என்பதை சுவாமி தான் கூறவேண்டும் //

    பிரமாதம் வாசு!பித்தானந்தா பூடகமாகச் சொன்னதை நீங்கள் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்! சுவாமி எதையும் விளக்க மாட்டார்!நீங்கள் புரிந்து கொள்ளும் சக்தியை உங்களுக்கு அருள்வார்!!

    நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  19. பாரத்... பாரதி... கூறியது...

    //நான் என்ற எண்ணம் மற்றவர்களை துன்புறுத்தாத வகையில் இருப்பின் தவறு ஒன்றும் இல்லை என்பது என் கருத்து. நம் சுயம் மற்றவர்களின் சுயத்தை அழிக்கும் போதுதான் ஆணவமாக மாறுகிறது.//
    அந்த ஆணவம் அந்த அளவில் நிற்பதில்லையே பாரதி!அது பெரிதாகி மற்றவர்க்குத் துன்பம் ஒரு நாளதரும்!

    பதிலளிநீக்கு
  20. பாரத்... பாரதி... கூறியது...

    //நிறைய புதிய விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றிகள்..//
    வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி பாரதி!

    பதிலளிநீக்கு
  21. பாரத்... பாரதி... கூறியது...

    //(ஸ்வாமி பித்தானந்த சரஸ்வதியின் வெளி வராத அருளுரைகள்!)//

    //இது நீங்கள் தானே...//

    உங்கள் மற்றும் வாசுவின் பின்னூட்டம் வரும் வரை ஸ்வாமி சோகமாக இருந்தார்,எவரும் எதுவும் கேட்கவில்லையே என்று!
    உங்கள் கேள்விக்கு ’நான்’தான் என்று பதில் சொன்னால் அது அகந்தை.
    எனவே பதில்-’இவன்’தான்

    பதிலளிநீக்கு
  22. "pl.ensure that you do not hurt the feelings of others"

    I enjoyed reading ur carefully written response although not going to express my counter point here.

    I quoted u above only to say, feeling of others will definitely be hurt if their lovingly cherished views are challenged with counter views. Do u agree ?

    No vithandavaatham by me. I find in so many blogs that counter views hurt the bloggers as they become accustomed to only support.

    Rarely a few who accept the basic truth of life that always there will be counter views. Thanks

    பதிலளிநீக்கு
  23. @Jo Amalan Rayen Fernando
    there can never be unanimity in viewpoints.differences of opinion are bound to be there.but any discussion in this regard should not degenerate to a personal level.otherwise counterviews are good for development of ideas!
    thanks for your visit and comments mr.fernando!

    பதிலளிநீக்கு
  24. U haven't replied to my basic point that counter point will hurt the person who has written the point.

    U say, personal attack only.

    I wrote that my counter points were taken as personal attacks.

    Could u say, if I express my counter point against your present blog post, completely impersonally, will it b a personal attack on u?

    This s what I want from u.

    May respond if u will pl.

    பதிலளிநீக்கு
  25. Jo Amalan Rayen Fernando கூறியது...





    //Could u say, if I express my counter point against your present blog post, completely impersonally, will it b a personal attack on u?

    This s what I want from u.

    May respond if u will pl.//
    you are welcome to express your views .

    பதிலளிநீக்கு