தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 15, 2011

தொப்பி பற்றிய ஒரு புதுக்கதை!

தொப்பி பற்றிய ஒரு புதிய கதை இது!
நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்கள் தொப்பி பற்றிப் பல செய்திகளை வெளியிட்டிருந்தார்!
அதைப் படித்ததின் பாதிப்பே இக்கதை.
உங்களுக்கு முன்பே தெரிந்த கதையில் முடிவில் ஒரு சிறு மாற்றம்!
படியுங்கள்!
-----------
ஒரு தொப்பி வியாபாரி இருந்தான்.
அவன் ஒரு கூடை நிறையத்தொப்பிகளை எடுத்துக் கொண்டு வியாபாரத்துக்குப் புறப்பட்டான்!

வழியில் மிகவும் களைப்பாக இருந்ததனால்,கூடையைத்தலையினின்று இறக்கிக் கீழே வைத்துவிட்டு ஒரு மரத்தடியில் படுத்துக் கண்ணயர்ந்தான்.
கண்விழித்துப் பார்க்கும்போது கூடை காலியாக இருந்தது!

யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்களோ என்று நினைத்த வியாபாரி சுற்றும் முற்றும் பார்த்தான்.

மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் அவனது தொப்பிகளை அணிந்திருக்கக் கண்டான்.

ஒரு கல்லை எடுத்து வீசினான்.குரங்குகளும் கையில் அகப்பட்ட காய்களை வீசின.
தலையச் சொறிந்தான்.குரங்குகளும் தலையைச் சொறிந்தன.

உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

தான் அணிந்திருந்த தொப்பியை எடுத்துக் கீழே எறிந்தான்;குரங்குகளும் தாங்கள் அணிந்திருந்த தொப்பிகளைக் கீழே எறிந்தன!

அவற்றை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு வியாபாரி புறப்பட்டான்!

ஆண்டுகள் உருண்டோடின!

அவன் பேரனும் அதே தொப்பி வியாபாரம் செய்யத்தொடங்கினான்.
தொப்பிக்கூடையுடன் செல்லும் போது ஒரு நாள் களைப்படைந்து அதே மரத்தடியில் படுத்தான்!

விழித்துப்பார்க்கும்போது தொப்பிகள் இல்லை!மரத்தைப் பார்த்தான்;குரங்குகள் தொப்பி அணிந்திருக்கக் கண்டான்.

அவன் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது.

தன் தொப்பியைக் கழற்றிக் கீழே எறிந்தான்.

மரத்திலிருந்து ஒரு குரங்கு கீழே இறங்கி வந்தது.

அவன் எறிந்த தொப்பியைக்கையில் எடுத்துக் கொண்டு அவனருகே வந்தது
அவன் கன்னத்தில் ஓங்கி ஓரறை விட்டது!

பின் சொல்லிற்று”உனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா முட்டாளே!”

அவன் தொப்பியையும் எடுத்துக்கொண்டு மரம் ஏறிற்று!

41 கருத்துகள்:

  1. அவர் பதிவு போட்டு ஒர் மணி நேரம்கூட ஆகல .. அதுக்குள்ள அதப்பற்றி மறுபதிவா... ரொம்ப வேகம் நண்பரே நீங்கள்..

    பதிலளிநீக்கு
  2. தொப்பி கதையை படிச்சுட்டு அன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

    பதிலளிநீக்கு
  3. வாய் விட்டு சிரிக்க வைத்த கதை. அதற்குத்தான் சொல்வது உங்களைபோன்ற அனுபவம் உள்ளவர்கள் நிறைய எழுதவேண்டுமென்று.
    நன்றி சென்னை காதலர் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    // vadai..//
    very hot!

    பதிலளிநீக்கு
  5. வேடந்தாங்கல் - கருன் கூறியது...
    //அவர் பதிவு போட்டு ஒர் மணி நேரம்கூட ஆகல .. அதுக்குள்ள அதப்பற்றி மறுபதிவா... ரொம்ப வேகம் நண்பரே நீங்கள்..//
    எல்லாம் நீங்கள் தரும் ஊக்கம்தான்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    // தொப்பி கதையை படிச்சுட்டு அன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..//
    ”வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்”
    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //வாய் விட்டு சிரிக்க வைத்த கதை. அதற்குத்தான் சொல்வது உங்களைபோன்ற அனுபவம் உள்ளவர்கள் நிறைய எழுதவேண்டுமென்று.
    நன்றி சென்னை காதலர் அவர்களே!//
    இயன்ற வரை எழுதுவேன்,உங்கள் ஆதரவுடன்!
    நன்றி கக்கு-மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  8. பட்டாபட்டி.... கூறியது...

    // ஹா..ஹா nice//
    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. //உனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா முட்டாளே!”

    அவன் தொப்பியையும் எடுத்துக்கொண்டு மரம் ஏறிற்று! //

    வாய்விட்டுச் சிரிக்க வச்சுட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  10. ரஹீம் கஸாலி கூறியது...

    //அதானே....//
    அதேதான்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  11. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //தொப்பிக்கு செம மார்க்கட் போல//
    ’தொப்பி’க்கு என்றைக்குமே மார்க்கெட்தான்!
    நன்றி செந்தில்குமார்!

    பதிலளிநீக்கு
  12. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    //See.,
    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_15.html//
    பார்த்தாச்சு!குத்தியாச்சு!சொல்லியாச்சு!

    பதிலளிநீக்கு
  13. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // ஐயா நீங்களுமா..//
    நீங்கள்தான் காரணம்!
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  14. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // ம் நடத்துங்க...//
    நடப்பதெல்லாம் அவன் செயல்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  15. சுந்தரா கூறியது...

    // வாய்விட்டுச் சிரிக்க வச்சுட்டீங்க :)//
    சிரிப்பு ஒரு நல்ல டானிக்!
    நன்றி சுந்தரா!

    பதிலளிநீக்கு
  16. THOPPITHOPPI கூறியது...

    //நல்ல கதைதான் சார்//
    உங்களை இங்கு வரவழைத்து விட்டதல்லவா!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  17. ஆஹா அய்யா நீங்களும் தொப்பியை தூக்கி போட்டு விளையாடுறீங்களா நடத்துங்க

    பதிலளிநீக்கு
  18. சார் நீங்க கலக்கறீங்க! சிவந்த கண், விழுந்த தொப்பி...அடுத்தது... காய்கறியைப் பத்தி ஏதாவது?

    பதிலளிநீக்கு
  19. கதை புதுசாத்தான் இருக்கு..

    பதிலளிநீக்கு
  20. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //ஆஹா அய்யா நீங்களும் தொப்பியை தூக்கி போட்டு விளையாடுறீங்களா நடத்துங்க//
    தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றதல்லவா தொப்பி!
    வருகைக்கு நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  21. மனம் திறந்து... (மதி) கூறியது...

    //சார் நீங்க கலக்கறீங்க! சிவந்த கண், விழுந்த தொப்பி...அடுத்தது... காய்கறியைப் பத்தி ஏதாவது?//
    ”காய்கறியைப் பத்தி?”புரியலை! யோசிக்கறேன்!
    வருகைக்கு நன்றி மதி!

    பதிலளிநீக்கு
  22. பாலா கூறியது...

    //கதை புதுசாத்தான் இருக்கு..//
    சிரிச்சீங்களா?
    வருகைக்கு நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சார்.நலம்தானே?காலத்திற்கேற்ற கதை.குரங்குகள் மட்டுமா அப்படி பண்ணுகின்றன,,,,,?

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சார்.நலம்தானே?காலத்திற்கேற்ற கதை.குரங்குகள் மட்டுமா அப்படி பண்ணுகின்றன,,,,,?

    பதிலளிநீக்கு
  25. FARHAN கூறியது...
    //அட செம்ம காமெடி//
    நன்றி FARHAN!

    பதிலளிநீக்கு
  26. விமலன் கூறியது...
    //வணக்கம் சார்.நலம்தானே?காலத்திற்கேற்ற கதை.குரங்குகள் மட்டுமா அப்படி பண்ணுகின்றன,,,,,?//
    நலமே விமலன்!நமது மூதாதையர்கள்தானே அவை!
    வருகைக்கு நன்றி விமலன்.தொடர்ந்து வாருங்கள்!

    பதிலளிநீக்கு
  27. FOOD கூறியது...

    //இன்று தொப்பிக்கு வந்த மவுசு!
    நல்ல கதை.//
    தொப்பிக்கு என்றுமே மவுசுதான்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  28. டக்கால்டி கூறியது...

    //கதை அருமை...//
    நன்றி டக்கால்டி!

    பதிலளிநீக்கு
  29. சிலரை சில காலம் ஏமாற்றலாம். பலரை பல காலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்றமுடியாது என்பதை இக்கதையை பதிவேற்றியதன் மூலம் தெரிவித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வே.நடனசபாபதி கூறியது...

    //சிலரை சில காலம் ஏமாற்றலாம். பலரை பல காலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்றமுடியாது என்பதை இக்கதையை பதிவேற்றியதன் மூலம் தெரிவித்ததற்கு நன்றி.//
    உண்மையே!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு