தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 09, 2011

என் கண்ணே!!

ஞாயிறன்று சென்னையிலிருந்து கரூர் சென்று இன்று காலைதான் திரும்பினேன்!உடல் நிலை சரியில்லாத என் மூத்த சகோதரியைப் பார்க்கச் சென்றிருந்தேன்.என் தாயார் என்னுடன்தான் இருப்பதால் என் இராமையில் அம்மாவைப் பார்த்துக் கொள்ள என் அண்ணாவும்,அண்ணியும் வந்து தங்கியிருக்கிறார்கள்.

கருரில் ரயிலினின்று இறங்கும்போதே இடது கண்ணில் ஒரு உறுத்தல்.அது நாள் முழுவதும் தொடர்ந்தது.யாருக்காகவும்,எதற்காகவும் அழாமலே கண்ணில் நீர் வடிய ஆரம்பித்தது! இன்று கொஞ்சம் முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் முழுவதும் சரியாகவில்லை.இன்று மாலை மருத்துவ ஆலோசனை வேண்டுமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இந்நிலயில் பதிவு எழுதுவதோ(யாருங்க அங்கே,’அப்பா,நிம்மதியாப் போச்சு’ என்று சொல்வது!)நண்பர்களின் பதிவுக்குச் சென்று படித்துப்(!) பின்னூட்டம் இடுவதோ(இது எனக்கு ஒரு இழப்பே) சிறிது கடினம்தான் ! எனவே எனக்கு இரு தினங்கள் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!(கொல்கிறேன் அல்ல,அது பின்னால்,விடுப்பு முடிந்து வந்ததும்!)

10 கருத்துகள்:

  1. சார் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் அதுதான் முக்கியம்... யாரும் எதுவும் நினைத்துப் கொள்ளமாட்டார்கள்...

    நீங்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  2. விரைவில் நலமுடன் திரும்பிவாருங்கள் சார்
    இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
    கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் சகோதரி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நீங்களும் உங்கள் உடம்பை கவனித்து கொள்ளுங்கள். சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும் ஸோ டேக் கேர்.....

    பதிலளிநீக்கு
  4. Health is wealth என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. உடல் நலம் பேணுங்கள். பின்பு எங்களை ஆட்கொள்ளலாம் அல்லது கொல்லலாம்!!!

    பதிலளிநீக்கு
  5. விரைவில் நலம்பெற்று பதிவு பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. Pranavam Ravikumar
    வேடந்தாங்கல் - கருன்
    FOOD
    ரஹீம் கஸாலி
    MANO நாஞ்சில் மனோ
    வே.நடனசபாபதி
    Chitra
    கே. ஆர்.விஜயன்
    அனைவருக்கும் மிக்க நன்றி! உங்கள் அனைவரின் வேண்டுதல் களாலும் விரைவில் நலமடைந்து திரும்பி விட்டேன்,பதிவுக்கு!

    பதிலளிநீக்கு
  7. இது கூட நல்ல பண்பான பழக்கம்தான்.
    நானும் கூட பின்னூட்டங்களுக்கு உடன் பதில் எழுத இயலாமல் போகும் பொது
    ஒரு வார்த்தை எழுதிவிடுவதுண்டு.
    சரி, உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள். நாங்கள் இங்கேதான் இருக்கிறோம் :))

    பதிலளிநீக்கு
  8. நன்றி கக்கு - மாணிக்கம் வந்துவிட்டேன்!

    பதிலளிநீக்கு