தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 03, 2011

’கர’ ஆண்டுக்கு ஒரு கவிதை!

வருக,வருக,கர ஆண்டே;தருக நன்மைகள் பல

இதுவல்ல புத்தாண்டு இனிமேலென்றுரைத்தார்

கரும்பான தைப் பொங்கல் புதிய புத்தாண்டென்றார்

சிரித்தது ஏப்ரல் 14 எதிர்காலம் தெரியக் கண்டு

வருகின்ற கர ஆண்டு பிறப்பதற்கு முதல் நாளில்

மாற்றியவர் தலையெழுத்தே மாறலாம் என்பதனால்

அருமையான பெயர் ஆண்டுக்குக் ’கர’ என்று

அதனால்தான் இப்போது ’கரத்தால் ’பிரச்சினையோ?

எருமை வாகனமேறும் இவ்வாண்டு தேவதையால்

எவர்க்கெல்லாம் என்னென்ன பிரச்சனையோ யாரறிவார்?

இருக்கிறது எத்தனை எத்தனையோ மனக்கவலை

எனக்கேன் வேண்டாத அரசியல் விசாரமெல்லாம்?

28 கருத்துகள்:

  1. இந்த ’கர’ ஆண்டு .. அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும்..

    என்னடா காலையிலிருந்து ஆளைக் கானோம்னு பார்த்தேன்...

    கவிதை யதார்த்தமாய்...

    பதிலளிநீக்கு
  2. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    I...
    சுடச் சுட!

    பதிலளிநீக்கு
  3. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    //இந்த ’கர’ ஆண்டு .. அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும்..

    என்னடா காலையிலிருந்து ஆளைக் கானோம்னு பார்த்தேன்...

    கவிதை யதார்த்தமாய்...//
    எதையாவது யோசிக்கணுமே!
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  4. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    // Tamil10 - ல் இணையுங்கள்..//

    இணைத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. //// எருமை வாகனமேறும் இவ்வாண்டு தேவதையால்....///

    ஆஹா..........உங்கள் எண்ணம் எல்லாம் பலித்து நாடும் மக்களும் நலமடைய வேண்டும் .:))))))

    பதிலளிநீக்கு
  6. Riyas கூறியது...

    // நல்லாயிருக்கு..//
    நன்றி ரியாஸ்!

    பதிலளிநீக்கு
  7. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //// எருமை வாகனமேறும் இவ்வாண்டு தேவதையால்....///

    // ஆஹா..........உங்கள் எண்ணம் எல்லாம் பலித்து நாடும் மக்களும் நலமடைய வேண்டும் .:))))))//
    நன்றி கக்கு - மாணிக்கம்;முந்தின பதிவையும் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  8. இந்த கரஆண்டு வரதுக்கு இன்னும் 41 நாள் 15 மணிநேரம் 24 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள இப்படி போட்டுட்டா எப்படி பாஸ் ...

    பதிலளிநீக்கு
  9. எப்படியோ வர கர ஆண்டு எல்லோர் க்கும் நல்லதா அமையட்டும்..

    பதிலளிநீக்கு
  10. கன்டிப்பா கை கொடுத்த செக்கிலிருந்து இன்னும் தலைவர் மீளவில்லை..
    அப்படி சூரியன் சோடைபோக வில்லையென்றால்..

    இனி தமிழ் புத்தாண்டை தவைலர் என்ன செய்வார் (சித்திரை 1 அல்லது தை 1)

    பதிலளிநீக்கு
  11. மாற்றியவர் தலையெழுத்து என்ன வாகும் உங்களுக்கு தெரியுமா.?

    பதிலளிநீக்கு
  12. இந்த கர வருஷம்... தமிழர்களுக்கானதில்லை...

    வேண்டுமானால் இதனை நீங்கள் பார்ப்பன புத்தாண்டென கொண்டாட வாழ்த்துக்கிறேன்...

    தை முதல் நாள் தமிழ் புத்தாண்டென சொன்னவர்கள் தமிழ் மாமலை மறைமலை அடிகளாரும், தமிழ் தென்றல் திருவிகவும்...

    பார்ப்பனர்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் இடைவெளி தை 1 க்கும் சித்திரை 1க்கு நிறைய இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  13. //மாற்றியவர் தலையெழுத்தே மாறலாம்

    அதென்ன சொல்றதெல்லாம் சொல்லீட்டு, அரசியல் வேண்டாம்னு சொல்றது?

    பதிலளிநீக்கு
  14. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
    //இந்த கரஆண்டு வரதுக்கு இன்னும் 41 நாள் 15 மணிநேரம் 24 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள இப்படி போட்டுட்டா எப்படி பாஸ் ...//

    தேர்தல் தேதியைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிய முதல் எண்ணம்.பதிவாக்கி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  15. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //எப்படியோ வர கர ஆண்டு எல்லோர் க்கும் நல்லதா அமையட்டும்..//
    அவ்வாறே நானும் வேண்டுகிறேன்/1

    பதிலளிநீக்கு
  16. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // அப்படி சூரியன் சோடைபோக வில்லையென்றால்..

    இனி தமிழ் புத்தாண்டை தவைலர் என்ன செய்வார் (சித்திரை 1 அல்லது தை 1)//
    கண்டிப்பாகத் தை 1 தான்! ஏனென்றால் தமிழ் குரல் கூறுவது போல் இது பார்ப்பனப் புத்தாண்டாயிற்றே!

    பதிலளிநீக்கு
  17. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // மாற்றியவர் தலையெழுத்து என்ன வாகும் உங்களுக்கு தெரியுமா.?//

    ”நல்ல நேரம்”தான் சொல்ல வேண்டும்!

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  18. தமிழ் குரல் கூறியது...

    //இந்த கர வருஷம்... தமிழர்களுக்கானதில்லை...

    வேண்டுமானால் இதனை நீங்கள் பார்ப்பன புத்தாண்டென கொண்டாட வாழ்த்துக்கிறேன்...

    தை முதல் நாள் தமிழ் புத்தாண்டென சொன்னவர்கள் தமிழ் மாமலை மறைமலை அடிகளாரும், தமிழ் தென்றல் திருவிகவும்...

    பார்ப்பனர்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் இடைவெளி தை 1 க்கும் சித்திரை 1க்கு நிறைய இருக்கிறது...//

    பல ஆண்டுகளாக இந்துக்கள் அனைவரும்(பார்ப்பனர்கள் மட்டும் அல்ல) இதைத் தமிழ்ப் புத்தாண் டாக ஏற்றுக் கொண்டி ருக்கின்றனர்.எப்போதும்,எதற்கெடுத்தாலும் ’பார்ப்பனர்’ என்ற வாதத்தை நீங்கள் மாற்றப் போவதில்லை. பார்ப்பனர்கள் தமிழர் இல்லையெனில் ’தமிழ்த்தாத்தா’ என்றழைக்கப் பட்ட உ.வே.சா. யார்?
    இது ஒரு சின்ன உதாரணம் தான். இடைவெளி தேதிகளில் இல்லை; உங்களைப் போன்றோர் மனங்களில்தான்.என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி வேற்றுமைகள் என்றுமே பார்த்ததில்லை.
    வருகைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  19. பாலா கூறியது...
    //அதென்ன சொல்றதெல்லாம் சொல்லீட்டு, அரசியல் வேண்டாம்னு சொல்றது?//
    ’மாறலாம்” என்று சொல்லி யிருக்கிறேன்.’மாறும்’ என்றா சொன்னேன்?

    இதுவும் அரசியல்தான்!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  20. ஹா,ஹா,ஹா,ஹா.... நக்கல், நையாண்டி, உள்குத்து எல்லாம் வச்சு - ஒரு கலகலப்பான அரசியல் கவிதை.

    பதிலளிநீக்கு
  21. Chitra கூறியது...

    //ஹா,ஹா,ஹா,ஹா.... நக்கல், நையாண்டி, உள்குத்து எல்லாம் வச்சு - ஒரு கலகலப்பான அரசியல் கவிதை.//
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  22. உங்கள் எதிர்பார்ப்பு நடக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்தால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  23. கே. ஆர்.விஜயன் கூறியது...

    //உங்கள் எதிர்பார்ப்பு நடக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்தால் நல்லதுதான்.//
    பார்க்கலாம்!என் முந்தைய பதிவைப் படித்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் கூறுவது சரி. இந்த விஷயத்தில் சாதியை வீணே இழுக்கத்தேவையில்லை.'தை'யோ 'சித்திரை'யோ தமிழ் புத்தாண்டு திங்களாக, இருந்துவிட்டு போகட்டும். அதனால் தமிழனுக்கு நல்லது நடந்தால் சரி!!!!!

    பதிலளிநீக்கு
  25. @வே.நடனசபாபதி
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி1

    பதிலளிநீக்கு