தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 04, 2011

ஒரு வரலாறு--6-விலைவாசி!

92 வயது நிறைந்த ஒரு பெண்மணியின் வரலாற்றில் ,அவர்களது நினைவுகள் பின்னோக்கிச் சஞ்சரிக்கும்போது, இந்றைய வாழ்க்கையின் பல அம்சங்களை
அந்தக் காலத்துடன் ஒப்பிடுவது என்பது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது
அதில் முக்கியமான ஒன்று விலைவாசி!

இன்று---

” வா,தங்கம்,வா,எப்போ வந்தேள் அமெரிக்காலேர்ந்து?’
அவர்கள் குடியிருப்பில் வசிக்கும் விஜயனும் அவர் மனைவி தங்கமும் யு.எஸ் ஸில் இருக்கும் பையனிடம் சென்று திரும்பியிருந்தனர்.ராஜியைப் பார்க்க வந்த தங்கத்திடம்தான் ராஜி கேட்டாள்.

”நேத்து ராத்திரிதான் வந்தோம் மாமி.காலையிலே ஓட்டலில் போய் டிஃபன் சாப்பிட்டு விட்டு வந்தோம்.என்ன மாமி,ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு தோசையும்,காஃபியும் சாப்பிட்டோம்; பில் 100 ரூபாய் ஆயிடுச்சு !”

ராஜி அதிர்ந்தாள்;ஆச்சரியப் பட்டாள்.அவள் மனம் பின்னோக்கிப் போயிற்று.

அன்று

அவளுக்குப் பத்து,பதினோரு வயதாக இருந்த கால கட்டம். அவள் அப்பா பள்ளித் தலைமை ஆசிரியராகஇருந்தார்.வீட்டில் காலையில் அவருக்கு மட்டும் இட்லி,தோசை இப்படி டிஃபன்.ராஜிக்குப் பழையதுதான்!மதியம் சூடான சாப்பாடு. அவள் அப்பாவுக்கு இரவும் சூடான சாப்பாடு வேண்டும்;எனவே தினமும் இரவு சூடான சாதத்துடன், துவையல், வத்தல்குழம்பு இப்படி ஏதாவது செய்வாள் அவள் அம்மா.இந்த நடைமுறை மாதம் ஒரு முறை மாறும். அந்த நாட்களில் ராஜி அவள் அப்பாவுடன் அருகில் இருந்த சுப்பையர் கிளப்பில் சாப்பிட்டு விடுவாள்.அவள் அம்மாவுக்குக் காலையில் இட்லி வாங்கப் போவாள்.ஓட்டலில் ஓர் அணாவுக்கு நான்கு இட்லிகள்.ஆனால் அவள் அம்மா அங்கு வாங்க வேண்டாம் என்று சொல்லி விடுவாள்.ஒரு பாட்டி காலையில் இட்லி விற்று வந்தாள்.அவளிடம் ஓரணாவுக்கு ஆறு இட்லிகள்(பதினாறு அணாக்கள் = ஒரு ரூபாய்;அதாவது ஒரு ரூபாய்க்கு 96 இட்லிகள்! )அவள்டம்தான் ராஜி காத்திருந்து இட்லி வாங்கி வருவாள்.

மறக்க முடியாத இன்னொரு உணவு சம்பந்தமான விஷயம்,--ராஜிக்கு எப்போதாவது காலணா கிடைத்ததென்றால், மசால் வடை வாங்கிச் சாப்பிட ஆசைப் படுவாள்; காலணாவுக்கு இரண்டு மசால் வடைகள்.ஆனால் அவள் அம்மா அதை மறுத்துக் காலணாவுக்குக் காராபூந்தி வாங்கிவா இரண்டு பேரும் சாப்பிடலாம்.’ என்று சொல்லி விடுவாள்.அதை மறுத்துச் சொல்லும் துணிச்சல் ராஜிக்குக் கிடையாது.எனவே மசால் வடையை நினைத்துக் கொண்டு காராபூந்தியைச் சாப்பிடுவாள்.

அந்தக் காலத்தில் நயம் நெல்லூர் அரிசி ரூபாய்க்கு நாலு படி.!

திருமணத்துக்குப் பின் கூட அவள் முதல் கர்ப்பத்தின் போது காலையில் குமட்டலாக இருக்கும்.சாப்பாடு பிடிக்காது.அப்போது அவள் மாமியார் அவளுக்கு மட்டும் ஓட்டலிலிருந்து இரண்டு இட்லி ஒரு தோசை வாங்கித் தருவாள்.இரண்டும் சேர்ந்து ஒன்றரை அணாதான்!ராஜி அடிக்கடி சொல்வாள் 1939 வரை,இரண்டாம் உலக யுத்தம் வரை விலை வாசி ஏறவில்லை என்று.

அவள் சாத்தூரில் இருந்தபோது பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக இருந்தவருக்குச் சம்பளம் மாதம் ரூபாய் 25 தான்.அவர் ,அவர் மனைவி,ஒரு பெண் அடங்கிய குடும்பம்.வீட்டு வாடகை ஐந்து ரூபாயும்(ஏஞ்சல்ஸ் விதியின் படி பத்து விழுக்காடுகள்தான் வாடகை தர வேண்டும் ;ஆனால் அது என்றுமே சாத்தியமில்லை)கொடுத்து அவர்கள் ஓரளவு வசதியாகவே வாழ்ந்ததாகவே ராஜி சொல்வாள்.

ஆனால் இன்றோ!

ராஜி பெருமூச்சு விட்டாள்!

(அடுத்த வாரம்---ராஜியைப் பெண் பார்க்கும் படலம்!)

31 கருத்துகள்:

  1. அந்த காலத்தை இன்றோடு ஒப்பிட்டு பார்க்கவே முடியாது..
    அருமை தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  2. மாறாதது மாற்றம் மட்டுமல்ல... விலைவாசி ஏற்றமும் கூட...

    பதிலளிநீக்கு
  3. .ஓட்டலில் ஓர் அணாவுக்கு நான்கு இட்லிகள்.ஆனால் அவள் அம்மா அங்கு வாங்க வேண்டாம் என்று சொல்லி விடுவாள்.ஒரு பாட்டி காலையில் இட்லி விற்று வந்தாள்.அவளிடம் ஓரணாவுக்கு ஆறு இட்லிகள்(பதினாறு அணாக்கள் = ஒரு ரூபாய்;அதாவது ஒரு ரூபாய்க்கு 96 இட்லிகள்!


    ......ஆஆஆஆஆ ...அப்படியே ஷாக் ஆயிட்டேன்!

    பதிலளிநீக்கு
  4. பழைய பாட்டிகளிடம் இன்றய விலைவாசியைப்பற்றி சொல்லாதீர்கள். சொன்னால் ஒரு உயிர் அன்னியாயமாய் போன பாவத்திற்க்கு ஆளாகிவிடுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. படிக்க வியக்க வைக்கும் அனுபவங்கள். தொடருங்கள் சென்னை காதலரே ,சென்னை கவியே!

    பதிலளிநீக்கு
  6. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //படிச்சிட்டு வற்றேன் தவைலா..//
    //அந்த காலத்தை இன்றோடு ஒப்பிட்டு பார்க்கவே முடியாது..
    அருமை தொடரட்டும்...//
    ஒப்பிடுதல் என்பது வயதானவர்களுக்கு-மிக மூத்த குடிமக்களுக்கு-தவிர்க்க முடியாதது!
    வரலாறு தொடரும்!
    நன்றி சௌந்தர்

    பதிலளிநீக்கு
  7. "குறட்டை " புலி கூறியது...

    //மாறாதது மாற்றம் மட்டுமல்ல... விலைவாசி ஏற்றமும் கூட...//
    சரியே.இது எப்போதும் மேல் நோக்கியே போகும் வரைபடம்தான்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  8. Chitra கூறியது...
    // .....ஆஆஆஆஆ ...அப்படியே ஷாக் ஆயிட்டேன்!//
    ஒரு கோக் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள்!(எத்தனை டாலர்?)
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  9. கே. ஆர்.விஜயன் கூறியது...

    // பழைய பாட்டிகளிடம் இன்றய விலைவாசியைப்பற்றி சொல்லாதீர்கள். சொன்னால் ஒரு உயிர் அன்னியாயமாய் போன பாவத்திற்க்கு ஆளாகிவிடுவீர்கள்.//
    உண்மைதான்!ஆனால் ராஜியைப் பொறுத்தவரை இன்றைய விலை வாசியும் ஓரளவுக்குத் தெரியும்!
    நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  10. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //படிக்க வியக்க வைக்கும் அனுபவங்கள். தொடருங்கள் சென்னை காதலரே ,சென்னை கவியே!//
    புதுசா ஒரு பட்டமா?
    வரலாறு தொடரும்; கவிதை களும்தான்!காதல்?!!
    (ஒரு கவிதையை மிஸ் பண்ணிட்டீங்க போல!)

    பதிலளிநீக்கு
  11. எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு பாட்டி இட்லி சுடுவாங்க அவ்வளவு சுவையா இருக்கும் எனக்கு தெரிந்து ஒரு ரூபாவுக்கு 15 இட்லி கொடுப்பாங்க இப்ப எங்க சார் கிடைக்கும்....

    பதிலளிநீக்கு
  12. அனுபவங்கள் அருமை நண்பரே.. தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  13. //காலணாவுக்கு இரண்டு மசால் வடைகள்.ஆனால் அவள் அம்மா அதை மறுத்துக் காலணாவுக்குக் காராபூந்தி வாங்கிவா இரண்டு பேரும் சாப்பிடலாம்.’//

    வரலாறு அருமை. எப்படியெல்லாம் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  14. தினேஷ்குமார் கூறியது...

    //எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு பாட்டி இட்லி சுடுவாங்க அவ்வளவு சுவையா இருக்கும் எனக்கு தெரிந்து ஒரு ரூபாவுக்கு 15 இட்லி கொடுப்பாங்க இப்ப எங்க சார் கிடைக்கும்....//
    நானே,8/9 வகுப்புப் படிக்கும் போது கோவில்பட்டி பாலமுருகன் கஃபேயில் இரண்டணாவுக்கு அருமையான ஸ்பெசல் தோசை சாப்பிட்டிருக்கிறேன்! எல்லாம் நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட வேண்டியதுதான்!
    நன்றி தினேஷ்குமார்!

    பதிலளிநீக்கு
  15. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    //அனுபவங்கள் அருமை நண்பரே.. தொடருங்கள்..//
    நிச்சயம் தொடரும்.
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  16. FOOD கூறியது...

    // அனுபவங்கள் அசை போட அருமை.//
    அனுபவித்தவர்களே அது பற்றிச் சொல்லும்போது கேட்பதற்கு இன்னும் அருமை!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  17. கோமதி அரசு கூறியது...

    //வரலாறு அருமை. எப்படியெல்லாம் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்!//
    உண்மைதான்.அந்த வாழ்க்கையின் சில அத்தியாயங்களைப் புரட்டிப் பார்த்தாலே பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
    நன்றி கோமதி அரசு!

    பதிலளிநீக்கு
  18. இன்றைக்கு விலைவாசி அதிகம் தான். ஆனால் அதே நேரத்தில் இளைஞர்கள் வாங்கும் சம்பளத்தையும் பார்க்கவேண்டும். 1966 ல் நான் வேலைக்கு சேர்ந்தபோது சம்பளம் ரூபாய் 303 தான். ஆனால் இன்று ஆரம்பத்திலேயே ரூபாய் 20,000 வாங்குகிறார்கள். எனவே அப்போதைய விலையை இன்றைய விலையுடன் ஒப்பீடு செய்வது சரியில்லை என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. ஆ ஆ ஆ ஆ ஆச்சர்யமா இருக்கேயய்யா....ஆ ஆ ஆ ஆ ஆ...

    பதிலளிநீக்கு
  20. //கே. ஆர்.விஜயன் கூறியது...
    பழைய பாட்டிகளிடம் இன்றய விலைவாசியைப்பற்றி சொல்லாதீர்கள். சொன்னால் ஒரு உயிர் அன்னியாயமாய் போன பாவத்திற்க்கு ஆளாகிவிடுவீர்கள்.//

    அட ஆமா மக்கா....

    பதிலளிநீக்கு
  21. ஒப்பிட்டு பார்த்தால் சோர்வும் பெருமூச்சுமே மிஞ்சுகிறது. எனக்குத்தெரிந்து தங்கம் சவரன் 3000 ரூபாய். பெட்ரோல் லிட்டர் 25ரூபாய். என்ன சொல்வது?

    அருமை தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  22. வே.நடனசபாபதி கூறியது...

    // எனவே அப்போதைய விலையை இன்றைய விலையுடன் ஒப்பீடு செய்வது சரியில்லை என நினைக்கிறேன்.//
    ஒவ்வொரு காலகட்டத்திலும், வருமானத்துடன் விலைவாசியையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயமாக அந்தக் காலம் சிறந்தது என்ற முடிவுக்குத்தான் வர முடியும் என நினைக்கிறேன்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  23. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // ஆ ஆ ஆ ஆ ஆச்சர்யமா இருக்கேயய்யா....ஆ ஆ ஆ ஆ ஆ...//
    இப்படி வாயைப் பிளந்தால் எப்படி!

    MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அட ஆமா மக்கா....//
    நீங்களே மேலே கண்டபடி என்றால் அவர்கள் பாவம்!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  24. பாலா கூறியது...

    //ஒப்பிட்டு பார்த்தால் சோர்வும் பெருமூச்சுமே மிஞ்சுகிறது. எனக்குத்தெரிந்து தங்கம் சவரன் 3000 ரூபாய். பெட்ரோல் லிட்டர் 25ரூபாய். என்ன சொல்வது?

    அருமை தொடருங்கள்.//
    பெருமூச்சே மிஞ்சும்!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  25. ஒரு ரூபாயில் ஒரு குடும்பமே சாப்பிட்டு மிச்சமும் வரும்போலிருக்குதே...

    ஹூம்...பெருமூச்சுதான் மிஞ்சுது!

    பதிலளிநீக்கு
  26. சுந்தரா கூறியது...

    //ஒரு ரூபாயில் ஒரு குடும்பமே சாப்பிட்டு மிச்சமும் வரும்போலிருக்குதே...
    ஹூம்...பெருமூச்சுதான் மிஞ்சுது!//
    இப்போது வருமானமும் கூடி
    யிருக்கிறதே என்று சிலர் சொல்வர்.ஆனால் விலைவாசி ஏறிய அதே விகிதத்திலா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை!
    முதல் வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  27. @வேல் தர்மா
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு