தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 23, 2011

சொல்லின் செல்வர்!

ஒரு புலவர் தன் நண்பரான மற்றொரு புலவரைக் காண அவர் வீட்டுக்குச் சென்றார்.அப்புலவர் வீட்டில் அடுப்பின் முன் அமர்ந்து சட்டியில் மாவு வறுத்துக் கொண்டிருந்தார்.

முதல் புலவர் கேட்டார்”என்ன நண்பரே,மாவு வறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று.

இரண்டாமவர் பதில் சொன்னார்—

“சங்கரன் பிள்ளை சட்டியில் மாவறுத்தல் நடப்பதுதானே” சங்கரன் பிள்ளை என்ற பெயருடைய அவர் சட்டியில் மாவு வறுப்பது எப்போதும் நடப்பதுதானே என்பது வெளிப்படையான பொருள்.

ஆனால் அவர் வேறொன்றையும் சொல்லியிருக்கிறார்!

“சங்கரனின் பிள்ளையாகிய முருகன்,சஷ்டியன்று மாமரமாக நின்ற சூரபத்மனை அறுப்பது,நடப்பதுதானே!”

என்ன சொல் நயம்!

இது இன்னொரு புலவரைப் பற்றியது.அவர் ஒரு ஜமீந்தாரைக் காணச்சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஜமீந்தாரின் மனைவி அங்கு வந்தாள்.அவள் மிக நல்லவள்.அவளைப் புலவர் தன் சகோதரியாகவே நினைத்தார்.

எனவே கேட்டார்”தங்கச்சி வந்தியா?”

கேட்டவுடன் தன் தவறை உணர்ந்தார். இது ஜமீந்தாருக்குப் பிடிக்கவில்லை என்பதை முகக்குறிப்பால் உணர்ந்த அவர் சொன்னார்—

“அம்மா தலையில் மஞ்சள் மலர் சூடியிருக்கிறார்கள் .அது தங்கச் சிவந்திப்பூவா-
தங்கச் சிவந்தியா என்று கேட்டேன்”தன் சொல் நயத்தால் நிலைமையைச் சரியாக்கி விட்டார்!


இது நம் காலத்து நிகழ்வு.
திரு.கி.வா.ஜ.அவர்கள் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தார்.பேச்சாளர் யாரையோ கடுமையாகத் தூற்ற ஆரம்பிக்கவே அவரும் அவர் நண்பரும் வெளியே செல்ல விழைந்தனர்.வாசலில் வந்து பார்த்தால் மழைத்தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது.

கி.வா.ஜ.சொன்னார்-”உள்ளேயும் தூற்றல்,வெளியிலும் தூற்றலா!”

எப்படி!

சில நாட்களுக்கு முன் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன்.
ஒரு தட்டில் வெற்றிலை,தூள் பாக்குடன் ஒரு பக்கமாகக் கொஞ்சம் பன்னீர்ப் புகையிலையும் வைத்திருந்தனர்.மண்டபத்தில் புகை வெளியேற வழிஇன்றி சூழ்ந்திருந்தது.
ஒருவர் பாக்கு என்று நினைத்துப் புகையிலையை வாயில் போட்டுக் கொண்டு அவதிப் படுவதைப் பார்த்த ஒரு நபர் கேட்டார்—

“புகையில தெரியலியா?”

புகையில்,புகையிலை என்பது தெரியவில்லையா என்பதை நயம்படக் கேட்டார்!

சிறிது நேரத்துக்குப் பின் யாரோ அவரிடம் அடையாறுக்கு வழிகேட்க அவர் முதலில் வலது புறமும் பின் இடது புறமும் கை காட்டிச் சொன்னார்—

“இப்படிப் போனால்,அடையார்;அப்படிப் போனால் அடையார்!”

வழி கேட்டவர் ’ஙே’ என்று விழிக்க,இவர் சொன்னார்--

-”முதலில் சொன்னது அடையார் என்ற இடத்தை,பின்னர் சொன்னது எதிரே போனால் அடையாரை அடைய மாட்டார் என்ற பொருளில்”

ஆஹா!யார் கொல் இச்சொல்லின் செல்வர்!


டிஸ்கி 1.-கடைசியாகச் சொன்ன சொல்லின் செல்வர்--பேர் சொல்ல அடக்கம் தடுக்கிறதே!

டிஸ்கி 2.நிறையப் பேர் சொல்லின் செல்வர்கள்தான்!---அவர்கள் சொல்லின் மற்றவர்கள் விரைந்து செல்வர்!

டிஸ்கி 3. இந்த ‘டிஸ்கி’ என்றால் என்ன!எல்லோரும் போடுகிறார்களே என்று நானும்போட்டு விட்டேன்!disclaimer என்பதுதான் பொருளா?

36 கருத்துகள்:

  1. டும்டும்...டும்டும்...
    சொல் இனி சொல்வர் நன்று என்று

    பதிலளிநீக்கு
  2. ஆஹா....................தமிழின் மீதும் காதல் உண்டா........நல்ல பகிர்வு.
    ரா. பி. சேது பிள்ளை என்ற ஒரு பழந்தமிழ் அறிஞர் .
    அவரின் நூல்களை படித்து இன்புறுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. சொல் சிலம்பம் அருமையாக இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  4. தமிழ் விளையாடுகிறது இந்தப் பதிவில்..

    பதிலளிநீக்கு
  5. நையாண்டி மேளம் கூறியது...

    // டும்டும்...டும்டும்...
    சொல் இனி சொல்வர் நன்று என்று//
    நன்றி நவில்கிறார் சென்னைபித்தன்!

    பதிலளிநீக்கு
  6. கக்கு - மாணிக்கம் கூறியது... //ஆஹா....................தமிழின் மீதும் காதல் உண்டா........நல்ல பகிர்வு.
    ரா. பி. சேது பிள்ளை என்ற ஒரு பழந்தமிழ் அறிஞர் .
    அவரின் நூல்களை படித்து இன்புறுங்கள்.//
    நல்லவை மீது என்றுமே காதல்தான்!
    பட்டப் படிப்புக் காலத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை படித்ததுண்டு!
    கம்பன் மீது கொண்ட காதலால், அண்ணாவுக்கும்,ரா.பி.சேதுப் பிள்ளைக்கும் நடைபெற்ற வாதங்களும் படித்ததுண்டு!
    நினைவூட்டிய உங்களுக்கு நன்றி,மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  7. சிலேடைகள் அருமை.

    மறைந்த திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களும் இவ்வாறு பேசுவதில் வல்லவர்.

    ஒருமுறை அவர் சிவனைப்பற்றி
    கதா காலட்சேபம் செய்துகொண்டிருந்தபோது மின் தடையால் மின் விசிறி ஓடுவது நின்றுவிட்டதாம்.

    அப்போது அவருக்கு பனை ஓலையால் செய்யப்பட விசிறி கொடுக்கப்பட்டதாம். உடனே சொன்னாராம். "அப்பனை நினைத்தேன். இப்பனை வந்தது" என்று.

    பதிலளிநீக்கு
  8. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //சொல் சிலம்பம் அருமையாக இருக்கிறது....//
    நன்றி மனோ!சிலம்பம் எனக்கு மிகவும் பிடிக்கும்.பள்ளிப் படிவத்தில் என் நண்பன் சாண்ட்டோ விடம் கொஞ்..சம் (!) பயின்றேன்!

    பதிலளிநீக்கு
  9. Maheswaran.M கூறியது...

    //Nice one... thanks//

    thank you for your visit and comment,maheswaran!

    பதிலளிநீக்கு
  10. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //தமிழ் விளையாடுகிறது இந்தப் பதிவில்..//
    நன்றி ,கருன்!

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு... புதிய தகவல்கள். அடையார் அருமை! தமிழின் பெருமை!

    பதிலளிநீக்கு
  12. யோவ் சொன்னது…

    //நல்ல பதிவு... புதிய தகவல்கள். அடையார் அருமை! தமிழின் பெருமை!//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அடையார் அருமை! ”தங்கச்சி வந்தியா!” எத்தனை நயமாகச் சமாளித்து இருக்கிறார் புலவர். உங்களிடமிருந்து நல்ல தமிழ் சொல்நயம் கிடைத்தது! மகிழ்ச்சி…

    பதிலளிநீக்கு
  14. தமிழ் மிக நுணுக்கமான மொழி என்று புரியவைத்தமைக்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  15. வே.நடனசபாபதி கூறியது...

    // சிலேடைகள் அருமை.

    மறைந்த திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களும் இவ்வாறு பேசுவதில் வல்லவர்.

    ஒருமுறை அவர் சிவனைப்பற்றி
    கதா காலட்சேபம் செய்துகொண்டிருந்தபோது மின் தடையால் மின் விசிறி ஓடுவது நின்றுவிட்டதாம்.

    அப்போது அவருக்கு பனை ஓலையால் செய்யப்பட விசிறி கொடுக்கப்பட்டதாம். உடனே சொன்னாராம். "அப்பனை நினைத்தேன். இப்பனை வந்தது" என்று.//
    வாரியார் ஸ்வாமிகளின் பேச்சைப் பலமுறை நேரில் கேட்டு ரசித்திருக்கிறேன்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  16. யோவ் கூறியது...

    //நல்ல பதிவு... புதிய தகவல்கள். அடையார் அருமை! தமிழின் பெருமை!//
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // அடையார் அருமை! ”தங்கச்சி வந்தியா!” எத்தனை நயமாகச் சமாளித்து இருக்கிறார் புலவர். உங்களிடமிருந்து நல்ல தமிழ் சொல்நயம் கிடைத்தது! மகிழ்ச்சி…//
    நன்றி நாகராஜ்!

    பதிலளிநீக்கு
  18. திரு வாரியார் அவர்கள் ஒரு முறை ஒரு கூடத்தில் நகைச்சுவையுடன் கூறியது : இந்த காலத்தில் " transistor" பற்றி கவலை படும் அளவிற்கு யாரும் சொந்த " sister" பற்றி கூட கவலை படுவதில்லை ! ... ( இந்த சாதனம் மிகவும் பிரபலமாக இருந்த தருணம் ) வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  19. Vasu கூறியது...

    //திரு வாரியார் அவர்கள் ஒரு முறை ஒரு கூடத்தில் நகைச்சுவையுடன் கூறியது : இந்த காலத்தில் " transistor" பற்றி கவலை படும் அளவிற்கு யாரும் சொந்த " sister" பற்றி கூட கவலை படுவதில்லை ! ... ( இந்த சாதனம் மிகவும் பிரபலமாக இருந்த தருணம் )//
    வாரியார் ஸ்வாமிகளின் சொல்நயம் ,நயந்து சொல்ல வேண்டுமா என்ன!
    நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  20. Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

    // Brilliant write.//
    thank you ravikkumar!

    பதிலளிநீக்கு
  21. விக்கி உலகம் கூறியது...

    //தமிழ் மிக நுணுக்கமான மொழி என்று புரியவைத்தமைக்கு நன்றி அய்யா//
    மிக்க நன்றி விக்கி!பதிலளிக்க எப்படியோ விட்டுப் போய் விட்டது.மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  22. கவியரசர் கண்ணதாசன் மலேசியா சென்றபோது; கூட்டத்துக்குத் தாமதமானதால்; ரசிகர்கள் ரகளை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
    அப்போ கவிஞர் மேடையேறி ஒலிவாங்கியை பிடித்து " சிலருக்கு இஸ்லாம் மதம் பிடிக்கும்; சிலருக்கு இந்து மதம் பிடிக்கும், ஏன்? சிலருக்கு கத்தோலிக்க மதம் பிடிக்கும்; ஆனால் உங்கள் கண்ணதாசனுக்கு
    எப்போதும் தா...மதத்தைத்தான் பிடிக்குமென்றாராம்.
    அப்படியே சபை பெட்டிப் பாம்பானதாம்.
    நல்ல பேச்சாளர்களுக்கு சொற்சிலம்பம் ஒரு கொடை.
    தற்போது கவிஞர் வாலியில் எழுத்தில், பேச்சில் அதை மிகக் காணலாம்.
    மேலும்
    ; மழைத் தூறல் என்பதா? தூற்றல் என்பதா?

    பதிலளிநீக்கு
  23. தமிழ் நல்லா வருது அருமையான தமிழ் ஆர்வம்..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
    ;// மழைத் தூறல் என்பதா? தூற்றல் என்பதா?//
    இரண்டுமே வழக்கில் உள்ளன!பல எழுத்தாளர்கள் இரு சொற்களையும் எடுத்தாள்வதைக் கண்டிருக்கிறேன்!

    கண்ணதாசன் பற்றி நீங்கள் சொன்னது போல் புலவர் கீரனும் சொல்லக்கேட்டிருக்கிறேன்!
    நன்றி யோகன்!

    பதிலளிநீக்கு
  25. மதுரை சரவணன் கூறியது...

    // தமிழ் நல்லா வருது அருமையான தமிழ் ஆர்வம்..வாழ்த்துக்கள்//
    நன்றி சரவணன்!

    பதிலளிநீக்கு
  26. ராசாத்தி அம்மாள் யார்?. என் மகள் கனிமொழியின் தாயார்.//

    இது கூட நல்ல சொல் நயமாமே ??? அப்படியா

    பதிலளிநீக்கு
  27. கே. ஆர்.விஜயன் கூறியது...

    // ராசாத்தி அம்மாள் யார்?. என் மகள் கனிமொழியின் தாயார்.//

    இது கூட நல்ல சொல் நயமாமே ??? அப்படியா//
    உங்களுக்கு என்ன சந்தேகம்? நாப்பறை கொட்டி நாடள வந்தவர் களாயிற்றே!
    நா நயம்(!) உள்ளவர்கள்தான்!
    நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  28. சிவகுமாரன் சொன்னது…

    //அருமை//
    நன்றி சிவகுமாரன்.தாமதத்துக்கு மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  29. அப்பாதுரை கூறியது...

    //சொல்லின் செல்வர் தான்.//
    சொல்லின்,செல்வர்?!
    நன்றி அப்பாதுரை அவர்களே!

    பதிலளிநீக்கு
  30. when comrade baladhandaaudham was studied in annamalai university he was suspended from the university for his anti british activities by vice chansellor right honourable srinivasa shastry.bala angrily told his vice chansellor,you are neighther right nor honourable.how is it

    பதிலளிநீக்கு
  31. // இப்படிப் போனால்,அடையார்;அப்படிப் போனால் அடையார் //


    அருமை நண்பரே.....

    பதிலளிநீக்கு
  32. சிலேடைகள் அனைத்துமே அற்புதம். மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு