தொடரும் தோழர்கள்

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

’கிரேசி’ கரடி--முடிவு!

சென்னை பித்தனை தொலைபேசியில் அணுகி, "நீங்கள் அடையாறில்தானே இருக்கிறீர்  கள்?என்னைச் சந்திப்பதற்காக, ஐஐடி பக்கத்தில் கீரிடம்போல தோற்றம் உள்ள மண்டபம், யாரும் வராத இடம் என்றுசொல்கிறார்களே? அங்கே வர முடியுமா? ”என்று பணிவாகக் கேட்டது.

உன்னால அந்த ’மூதறிஞரி ‘ன் நினைவு மண்டபத்திற்கு போகும் இன்னொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கிறதே என்று மனமகிழ்ந்து அங்கே வருவதாக அவர் ஒப்புக் கொண்டார். 

“ஆமா? என்னை எப்படிக் கண்டுபிடிக்கப் போற.?”
 
”உங்க போட்டோவை உங்க வலைப்பூல என்னைப் பற்றி என்றபகுதில நிறைய வாட்டி
பார்த்திருக்கேனே என்று சொல்லி லேட்டஸ்டா வராட்டாலும் லேட்டா மட்டும் வராதீங்க”  
என்று குறும்புத் தனமாக கேட்டுக் கொண்டது. 

”என்னை அடையார் அஜீத் என்றுதான் அழைக்கிறார்கள்;சூப்பர்ஸ்டார் என்றழைப் பதில்லை” என்றார் செபி

வெறிச்சோடிக்கிடக்கும் ராஜாஜி நினைவு மண்டபத்தில் சென்னை பித்தன் நுழைந்தவுடன், புதரில் மறைந்து நின்ற கரடி அவரை வரவேற்றது. ஐயா,எனக்கு  மகிழ்ச்சியானமுடிவைக் கொடுங்கஎன்று வேண்டிக் கொண்டது.

சரி நீ ஆணா, பெண்ணா?

நான் கல்யாணத்திற்காக காத்திருக்கும் யுவதி.

அப்படியானா உன் மனசுல இருக்கிற கரடியோட உன்ன ஒண்ணு சேர்த்துர்றேன் என்று முடிவை ஆரம்பித்தார்.

அன்று பெளர்ணமி. முழு நிலவு பொழிந்து கொண்டிருந்தது. மனதை வருடம் மலைய மாருதம். கிணற்றில் விழுந்த கரடி, “இப்படி யாரும்இல்லாம தனியொருவளா போயிட் டோமே”. என்று மனம் நெகிழ்ந்தது.

போன முழு நிலவன்று அருவியில் தன் காதலனுடன் நடத்திய சரசங்கள் இப்பொதைய சோகத்தை அதிகமாக்கியது. அப்போது ”திக்கு தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி அலைந்தேனே”. என்ற பாட்டு அவன்குரலில் ஒலித்தது போன்ற பிரமை. பிறகு பாட்டு மிக அருகில் கேட்டது.

பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்கலையோஎன்று எசப்பாட்டுதொண்டை கிழிய பாடியது பெண் கரடி. சரசரவென்று பெரிய சத்தம் கேட்டது. நிலவை மறைத்து காதலனின் முகம் கிணற்றுக்கு வெளியே தெரிந்தது. ஆண் கரடி கிணற்றுக்குள் பாய்ந்து தன் காதலியை முதுகு மேல் ஏற்றிக் கொண்டு வெளியில் வந்து ராக் அன் ரோல் ஆடிவிட்டு பின் 
அவர்களுக்கு பிடித்த அருவிக்கு போய் சந்தோஷமடைந்து கானகம் திரும்பின.


முடிவை கேட்ட ஆண் கரடி புதரில் இருந்து வெளியேறி ராக் அன் ரோல் அடிகளை எடுத்து வைத்து நடனமாடி சென்னைப் பித்தனை மகிழ்வித்தது. 


பிறகு ஒரு அழகிய சந்தன பேழையில் ஒரு பென்டிரைவ் ஒன்றை வைத்து  அவரிடம் அளித்து இதற்குள் எங்கள் தாரக மந்திரம் பதிவாகி இருக்கிறது. எங்கள் லிபியில் மறைக்குறி யீடாக்கம் (Encrypt) செய்யப் பட்டுள்ள அந்த வாசகங்களை முடிந்தால்  மறையீடு நீக்கி  (Decrypt) செய்து பார்த்து மகிழுங்கள் என்று மனமகிழ்ச்சியுடன் விடை பெற்றன கரடி தம்பதி..

சென்னை பித்தனுடைய லேப்டாப்பால் அந்த டிரைவை  படிக்க  முடியவில்லை. ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் தன் நண்பரிடம் அந்த பென்டிரைவைக் கொடுத்தார். அவர் யுஎஸ்ஸில் உள்ள தங்கள் தலைமையகத்துக்கு அனுப்பி அந்த லிபியை மறையீடு நீக்கம் (Decrypt)  செய்து சென்னை பித்தனுக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். சென்னை பித்தன் அதை பார்த்து நம்மையே கிரேசியாக்கிவிட்டதே இந்த கரடிகள்என்றுஅகமகிழ்ந்தார். கரடிகளின் தாரக மந்திரம் இதோ.

    டி

ர யி ல்

டி ல் லி

!!!!!!!!!!!!!!!!

டிஸ்கி:கரடி பூடகமாக ஏதோ சொல்கிறதோ!ரயிலில் ஏறி டில்லி போகப் போகிறதோ?!  எதற்கு?ஏதாவது கட்சி ,கரடிச் சின்னம் கேட்டிருக்குமோ?!அல்லது ஏதாவது உரிமை கேட்டுப் போராடப் போகிறதோ?

20 கருத்துகள்:

 1. முடிவு கனகச்சிதம்! அய்யா முடிவச்சொன்னா அத மாத்த இங்கு யாருமில்லே!!! கரடி கதை முடிந்தது அடுத்த கதை???? ஆவலுடன் ..,,,,,!!!!

  பதிலளிநீக்கு
 2. உண்மையில் அந்த ஆண் கரடியும் பெண் கரடியும் சொல்லி வைத்துக்கொண்டு அங்கு வந்தனவோ? நீங்கள் எப்படி முடிவை சொல்லப்போகிறீர்கள் என அறிய அந்த ஆண் கரடி ஒளிந்துகொண்டிருந்தது போலும் . நல்ல வேளை நீங்கள் அவைகள் விரும்பிய முடிவை சொல்லிவிட்டீர்கள். இல்லையென்றால் !!!

  ஆமாம். விரலி (Pendrive)யில் சிவாஜி
  வாயிலே
  ஜிலேபி என்றிருந்திருக்குமே. அதை பார்க்கவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லையென்றால்,கரடி கையைப்பிடித்துக்கொண்டே மரம் சுற்றி வரவேண்டியதுதான்(பார்க்க தூக்குத்தூக்கி படம்)
   நன்றி ஐயா

   நீக்கு
 3. அருமை ஐயா,
  காணொளியும் அருமை,,,,,,
  டில்லி க்கு எதற்கு?????

  பதிலளிநீக்கு
 4. அடுத்த கதையில் யானையை எதிர்ப்பார்க்கிறோம் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க....!
   நன்றி கில்லர்ஜி

   நீக்கு
 5. இதற்கு முந்தைய பகுதியைப் படிக்கவில்லை. படிக்கிறேன்.

  காணொளி ரசனை.

  தொடர்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 6. இந்த முடிவு கரடிக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும்! எப்படி டான்ஸ் ஆடுது பாருங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிடிச்சதுனால என்னைப் பிடிச்சுக்கலை!
   நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 7. இந்த கரடிக்கு வயசாகி விட்டது,இன்னும் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் பட டான்சை ஆடிக்கிட்டிருக்கே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயசானாலும் ஸ்டைல் போகலை!படையப்பா வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்!

   நீக்கு
 8. கரடி நடனமும், நடையும் ரசித்தேன் - காணொளியில்.....’

  பதிலளிநீக்கு
 9. செம ரொம்பவே ரசித்தோம் தங்கள் கதையையும் அதைச் சொல்லும் விதத்தையும்!!! அருமை...காணொளியும் ரொம்ப ரசித்தோம்..

  கீதா: வரட்டும் அந்தக் கரடி...நடனத்தைப் பாருங்க!!! ரொம்பத்தான்....ஹும் பாருங்க தன்னோட ஆளைத் தேடித்தான் அங்கு வந்துருச்சு போல ...அது சரி இந்த ரெண்டு பேரும் எப்ப காந்திமண்டபம் போனாங்க......கரடி, ரயில், டில்லி....செபி சார் டில்லி மிருகக்காட்சிச் சாலைக்குப் போறாங்களோ...ஐயையோ அதை விட வினை வேண்டாம்..நாறுது அங்க......டிக்கெட்டை கான்சல் பண்ணிடுங்க சார்...

  பதிலளிநீக்கு