தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 21, 2015

மாயா!வானம்....நிர்மலமாய் 

மனம்....மேகங்கள் சூழ்ந்து
நீல வானம்,தலைக்கு மேல்

தலைக்கு மேல் பிரச்சினைகள்,மனத்தில் மேகமூட்டம்!

மேகமூட்டம் இருந்தால் நல்லது,வானத்தில்.

 வானத்தில் பார்க்கையில்,நிமிர்ந்து,கழுத்து வலிக்க,தேடினாலும் கிடைப்பதில்லை மேகங்கள்

மேகங்கள் மன மேகங்களாய் உலவுகின்றன

உலவுகின்ற மனிதர்கள் இங்கும் அங்குமாய்!

மாயா!மாயா!மாயா!

அங்கும் மன மேகங்கள் உண்டோ?

”உண்டாயிருக்காளா மாயா?”

மாயா என்னும் மகாகாலன்!


காலன் ஏன் இன்னும் வரவில்லை?

”வரலையா நீங்க?நான் ரமாவோட போயிட்டு வரேன்!”

வரேன்,வரேன்,வரேன்........எப்போ?

எப்போ நடந்தது இந்த அநாசாரம்?

அநாசாரமாய், பர புருஷனுடன்.......

புருஷன் எல்லாம் புருஷனாகி விடுகிறானா?

விடுகிற மாதிரி இல்லை,பிடித்து ஆட்டுகிறது.

ஆட்டு,ஆட்டு,ஆட்டு....

”பேய் பிடிச்சிருக்குமோ?”

இருக்குமோ என்றபோது இருந்துதான் பிரச்சினை.

இதற்குப்  பெயர் மனைச் சிதைவு!”

சிதைவு!எல்லாம் சிதைந்து போயாச்சு!

போ,போ! மனுஷங்களை விட்டு ஓடி விடு!

விடு பட்டுப் போன ஒரு க்ளூ கெடச்சது

 கெடச்சதும் கணக்குத் தெளிவாச்சு!

தெளிவு!மனம் தெளிவு! இல்லை! குழப்பம்

குழப்பம் தீராது 

தீரவேண்டும் என்றால் ஒன்றுதீர வேண்டும்

வேண்டும் ஒரு ஆயுதம் அதோ கத்தி!

”கத்தி,!யாராவது வாங்கோ .பைத்தியம் கத்தியோட குத்த வரது”

வரது! அவன் பெயர் அதுதானே?

அதுதான் உனக்கு இந்த முடிவு.

முடிந்தது எங்கும் ரத்தம்!

 ரத்தம்!விநாசாய ச துஷ்க்ருதாம்!

எல்லாம் மாயா மாயா மாயா!

நான் கடவுள்!

............

ஏதாவது புரிந்ததா?

எழுதிய எனக்கே புரியலையே!

புரியக்கூடாது!

ஏனெனில்................

இது பின் நவீனத்துவ இலக்கியம்!32 கருத்துகள்:

 1. பின் நவீனத்துவ இலக்கியம் அறிந்தேன்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஐயா!! மாயா என்பது புரிகிறது! அடுத்து நவீனத்துவ இலக்கியம் என்பது புரிகிறது! புரியாமல் எழுதுவதுதான் நவீனத்துவமோ! நன்றி

  பதிலளிநீக்கு
 3. பின் நவீனத்துவம் என்று கூறிவிட்டீர்களே. அவ்வாறாயின் சரி.

  பதிலளிநீக்கு
 4. தங்களது பதிவு புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோ வின் படம் போல் இருந்தது! நான் என்ன சொல்கிறேன் என்பது புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. பதிவாளர் இலக்கியப் போட்டி யிலே
  மாயாவுக்கு
  முதற்பரிசு.

  அதைப் படித்தும்
  பைத்தியம் பிடிக்காமல் இருக்கும்
  அனைவருக்கும்
  ஆறுதல் பரிசு.

  அப்ஸ்ட்ராக்ட் என்றால் என்ன என்று கான்செப்ட் புரியாமல்
  ஏதோ எழுதும் எல்லோருக்கும் ஒரு நல்ல சாட்டை.
  i mean satire
  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பைத்தியம் பேசுவதைக் கேட்டால் பைத்தியம்தான் பிடிக்கும்!
   நன்ன்றிமையா

   நீக்கு
 6. ஹஹ மாயாவும் அதற்கு சுப்பு தாத்தாவின் பின்னூட்டம் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 7. மாயா மாயா மாயா எல்லாம் சாயா சாயா சாயா

  என்ன ஐயா சமீபத்தில் பாபா படம் ஏதாவது பாத்திங்களா.....

  அப்பா தலை கறங்குது.....கண்ணுக்குள் பூச்சி பறக்குது....பூச்சிகள் பஞ்சாய் மாறுது....அதுதான் மேகமோ...மேகத்தில் நான் பறக்கிறேன் லேசா லேசா....அங்கருந்து பார்த்தா இந்தச் சென்னைப் பித்தன் எழுதறத பாத்தா ...மீண்டும் தலை கறங்குது....மேகம் பாரசூட் கீழ இறங்குது.....வந்து சென்னைப் பித்தன் வீட்டின் முன் முகாமிட்டது....கண்ணைத் திறந்தா....கண்ணைக் கட்டுதேப்பா.......ஹஹஹ்..சரி பின்னூட்டம் புரிந்ததா...ஹஹஹ

  பதிலளிநீக்கு
 8. ஏன் சார் இந்த விபரீத முயற்சி! உங்க வாசகர்கள் நல்லா இருக்கிறது உங்களுக்கு பொறுக்கலையா? ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 9. மாயை ஒரு மாயா
  மாயா ஒரு சாயா ?
  காயமா ?பொய்யடா !
  வாழ்க்கை யா ?
  வழுக்குமா ?சறுக்குமா ?
  தொடராமல் முடியுமா ?
  சிகரம் பிடிப்போமா /
  சங்கூதும் முன்.
  நிலையற்ற உலகில்
  நிலை பெற்றுய்வோமோ !! how is it !

  பதிலளிநீக்கு
 10. ம்ம்ம்ம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்ம் :(((( இப்டி தா தழுதழுத்தது கண்ணீர்விட வைத்துவிட்டது உங்கள் கவிதை!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணீர்க்கதைதான் அது!
   அடுத்த இடுகை பாருங்களேன்!
   நன்றி

   நீக்கு
 11. இன்றைய இடுகையைப் படித்ததால் ,நேற்றைய இந்த இடுகை கொஞ்சமா புரியுது :)

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  ஐயா.

  அரமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. மாயா மயக்கும் ஒரு பின்நவீன தமிழ் மங்கை போல!

  பதிலளிநீக்கு