தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 23, 2015

ஒட்டகத்தைக் கட்டிக்கோ!ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்று ஒரு பாடல்.


இப்போது அதை மாற்றிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள் 


ஆம்!


இப்படித்தான்......


ஒட்டகத்தை வெட்டிக்கோ!


பக்ரீதன்று பலியிடுவதற்காக ராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்கள் கொண்டு வரப்படுகின்றன.


தவறு....நடத்தி வரப்படுகின்றன!


மனோகரனை புருஷோத்தமன் ஏன் அழைத்து வரச்சொன்னேன் தெரியுமா என்று கேட்கும் போது,அழைத்து வர இல்லை,இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள் என மனோகரன் சொல்வது போல்!


நேற்றைய இந்து நாளிதழ் சொன்னது,சென்னைக்கு 30 ஒட்டகங்களும் தமிழ்நாட்டின் இதர பகுதி களுக்கு 150 ஒட்டகங்களும் நடத்தி வரப்பட்டதாக!


இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்கிறது ராஜஸ்தானிலிருந்து கடப்பா வழியாக ஒட்டகங்களை நடத்தி வந்த நான்கு பேர் பிடிபட்டதாக;அவர்கள் நடத்தி அழைத்து வந்த ஐந்து ஒட்டகங் களும்  பிடிபட்டன!ஞாயிறு புறப்பட்டு,திங்கள் கடப்பாவை அடைந்து நேற்று சென்னை வந்து சேர்ந்தார்களாம்.வரும் வழியில் ஒட்டகங்களுக்கு உணவோ தண்ணீரோ கொடுக்கவில்லை. இவர்கள் நன்றகச் சாப்பிட்டிருப்பார்கள்!இரண்டு ஒட்டகங்களின் காலில் குருதி வடிந்து கொண்டிருந்ததாம்.எப்படியும் வெட்டப்படும்போது குருதி பெருகத்தானே போகிறது,இப்போதே கொஞ்சம் பெருகட்டுமே என்பதுதான் எண்ணமோ?


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 428,429 இன் கீழும்,மிருக வதை தடுப்புச்சட்டம்பிரிவு 11 இன் கீழும் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்


ஆனால் இந்துவில் சொல்லப்பட்ட 150+30 ஒட்டகங்களைக் கொண்டு வந்தவர்கள் என்ன ஆனார்கள்?


எதுவாகப் பிறந்தாலும் ஊழ் என்று ஒன்று இருக்கிறதல்லவா?


நீங்களே பாருங்கள்
                      பலியிடுவதற்காக நடத்தி அழைத்து வரப்பட்ட ஒட்டகங்கள்


                                     மிஸ்.சவுதி அரேபியா

  ஒட்டகத்தைக்  கட்டிக்  கொள்ள வேண்டாம்
 ஆனால்        வெட்டிக்  கொல்லாமல் இருக்கலாமே!

28 கருத்துகள்:

 1. எந்த மிருகமாய் இருந்தாலும் உயிர் ஒன்றுதானே! கொல்லாமல் இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் ஐயா! கேரளாவிற்கு லாரிகளில் பரிதாபமாக போகும் மாடுகளை பார்ப்பதற்கும் பாவமாக உள்ளது?? ஒரு உயிரை அழித்துதான் உடம்பை வளர்க்க வேண்டுமா?????

  பதிலளிநீக்கு
 3. // ஒட்டகத்தைக் கட்டிக் கொள்ள வேண்டாம்
  ஆனால் வெட்டிக் கொல்லாமல் இருக்கலாமே!//

  சரியாய் சொன்னீர்கள். இதை தடுக்க அரசாலோ அல்லது நீதிமன்றத்தாலோ முடியாது. சம்பந்தப்பட்டவர்களே நிறுத்தினால் தான்

  “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
  எல்லா உயிருந் தொழும்.”

  என்று அந்த தெய்வப்புலவர் சொன்னது நடக்கும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா
  ஒன்றை அழித்துத்தான் ஒன்று வாழமுடியும் மனிதன் அனைத் துண்ணியாச்சே.... ஐயா.. நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உணவு வல்லுனர்கள் வேறுவிதமாக சொல்கிறார்கள். தாவர உணவுகளால் இத்தனை மக்களுக்கும் உணவு உற்பத்தி செய்ய முடியாது என்றும் அவ்வளவு நிலங்கள் நம்மிடையே இல்லை என்றும் அந்த உணவு இழப்பை ஈடுகட்டுவது அசைவ உணவுகள்தான் என்கிறார்கள். ஆனாலும் விலங்குகள் கொல்லப்படும் போது பாவமாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதிகாலந்தொட்டு இருக்கும் பழக்கங்கள் கூடலாம் அல்லது குறையலாம்;ஆனால் மறையாது!
   நன்றி செந்தில்

   நீக்கு
 6. நானும் என் முஸ்லீம் நண்பர்களிடன் ஏன் இந்த
  ஒட்டக மோகம் என்றேன்
  கூட்டிக் கழித்துப் பார்க்கையில்
  ஆடை விட விலை குறைவு என்கிறார்கள்
  எங்கள் பகுதியில் நான்கு வந்து நிற்கிறது பாவம் ?

  பதிலளிநீக்கு
 7. இதை விடக் கொடுமை அதைக் கழுத்தில் குத்தி குருதி பீறிட்டு அடிக்கும் வீடியோ சென்ற வருடங்களில் வலம் வந்தது. அந்தக் கொடுமையைப் பார்க்கச் சகிக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 8. இங்கும் நான் பார்த்து இருக்கிறேன் மனதுக்கு கஷ்டமாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 9. மனதிற்கு வேதனையாகத்தான் உள்ளது ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 10. இது எப்போது பாவ காரியம் என்று ஒட்டு மொத்த மனித குலமும் சிந்திக்குதோ அப்போது தான் இதற்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் மிகவும் வேதனை அளிக்கும் செய்தி தாத்தா இது :(
  இது போன்ற கொடுமைகள் முதலில் ஒழிய வேண்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி தாத்தா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி அம்மா!
   அடுத்த கமெண்ட்டும் பதிலும் பார்க்கவும்!

   நீக்கு
 11. என்ன இருந்தாலும் ஒரு உயிர் எனும்போது பாவம் தான்.

  ஆமாம் இதென்ன நாங்கள் சென்னை அஜித் என்கிறோம் தோழி தாத்தா என்கிறார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்னாக் கேக்கறாங்களா? எங்கயோ பிரன்சுல இருந்துக்கிட்டு இப்படித்தான் கூப்பிடுவேன்னு அடம் பிடிக்கறாங்க!இறைவனை அவரவர் விருப்பப்படி கூப்பிடுவதில்லையா?!அது போல் நினைத்துக் கொள்கிறேன்!
   நன்றி சசிகலா

   நீக்கு
 12. என்ன தெய்வ நம்பிக்கையோ ,உயிரைக் கொன்று உண்பதென்பது ?

  பதிலளிநீக்கு
 13. இந்த உணவு செரிக்கிறதே...? நன்றி பதிவிற்கு

  பதிலளிநீக்கு
 14. நானும் படித்தேன். தொல்லைக் காட்சியிலும் இது பற்றிய செய்தி படித்தேன். வருத்தம் தந்த செய்தி......

  அது வாழ தகுந்த பாலைவனச் சூழ்நிலையிலிருந்து இப்படி வேறு ஒரு இடத்திற்கு நடத்தி அழைத்து வந்து வதை செய்வது கொடுமை. அதை விடக் கொடுமை இறைச்சிக்காக கொண்டு வந்தது....

  பதிலளிநீக்கு
 15. "ஒட்டகத்தைக் கட்டிக் கொள்ள வேண்டாம்
  ஆனால், வெட்டிக் கொல்லாமல் இருக்கலாமே!" என்பதே
  எனது வேண்டுதலுமாகும்!

  பதிலளிநீக்கு