தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 10, 2015

வலைப்பூ அடிமைகள்!பதிவு எழுதுறோம் நாங்க-தமிழ்ப்
பதிவு எழுதுறோம் நாங்க!

துட்டுக்காக எழுதறது இல்லீங்க
ஹிட்டுக்காக எழுதறோம் நாங்க!

நோட்டு எதுவும் கிடைக்கா திங்க
ஓட்டு மட்டும்தானே போதுமா திங்க!

பின்னூட்டம் வந்துதான்னு பாக்குறோம்
ஒண்ணுமே இல்லைன்னா நோகுறோம்!

ரேங்க்ல முன்னேறணும்னு நோக்கம்
சனி ராவுல  போச்சு எங்க தூக்கம்!

கிழடு கட்டையெல்லாம் கூட எழுதுது
இளைஞர் பட்டாளத்தோடு ரேஸ் ஓடுது!

எந்நேரமும் கீபோர்ட்ல அடிக்குறோம்
பொன்னான நேரத்தை வீண் அடிக்கிறோம்!

எப்போதும் கணினியைக் கட்டி அழுவுறோம்
வேறெந்த வேலையும் செய்யாம நழுவுறோம்!


பயனில்லா வேலையிது உண்மை
ஆனாலும் ஆயிட்டோமே அடிமை!

(போய்ப் புள்ள குட்டிகளப் படிக்க வையுங்கப்பா!!)

43 கருத்துகள்:

 1. உண்மை தான் ஐயா ! நன்றி நன்றி !

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஐயா!! அருமை!! வலையில் எழுதுவதற்கும் படிக்கவைப்பதற்கும் என்ன சம்பந்தம்!! எனக்கு புரியலைய்யா????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூபகீதன்!அதெலாம் ஒரு நகைச்சுவைக்காகத்தான்!எல்லா நேரத்தையும் இதிலேயே செலவழிக்காமல் மற்றதையும் கொஞ்சம் கவனியுங்க என்பது போல்!
   நன்றி

   நீக்கு
 3. இதுவும் ஒரு போதை தான். அதற்கு அடிமைகள் நாம். உண்மை தான் ஐயா.

  பதிலளிநீக்கு
 4. சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க சார்..

  பதிலளிநீக்கு
 5. சிரிக்க . . . . . சிந்திக்க வைக்கும் பதிவு

  பதிலளிநீக்கு
 6. அடிமைகள் ஓய்வதில்லை......தொடரும் லைக்கும் கமெண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க விஜயன்!எங்க திடீரென்று இந்தப்பக்கம்?!
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. பொதுவாக எழுதவோ, வாசிக்கவோ ஆரம்பித்துவிட்டால் அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

  பதிலளிநீக்கு

 8. // கிழடு கட்டையெல்லாம் கூட எழுதுது//

  அவர்களெல்லாம்(!) மனதால் இளைஞர்கள் ஐயா !

  //போய்ப் புள்ள குட்டிகளப் படிக்க வையுங்கப்பா!!//

  அவர்களையெல்லாம் படிக்கவைத்துவிட்டுத்தான் பதிவுலகத்திற்கே வந்திருக்கிறோம். இதை விட்டு போங்கள் என்று சொன்னால் எப்படி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர்களெல்லாம்(!) மனதால் இளைஞர்கள் ஐயா !//
   அப்படிச் சொல்லுங்க!
   நன்றி ஐயா

   நீக்கு
 9. ஹா ஹா ஹா ஐயோ ஐயோ அனைவருக்கும் பொருத்தமா இருக்கே

  இந்தநிலை வெந்துவிட சந்ததிகள் சிந்தனைகள்
  மந்தநிலை போக்கிவிட வேண்டும்
  அந்தநிலை முந்திவர தந்திரங்கள் கொண்டசெயல்
  வந்தியர்கள் நீக்கிவிடத் தாண்டும் !

  தொடர வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 10. ஹாஹாஹா இப்படிச் சொல்லியதுகூட பதிவாகிடுச்சே...

  பதிலளிநீக்கு
 11. ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கறதைத் தவிர வேறு வழியில்ல

  பதிலளிநீக்கு
 12. இப்படித் தானோ,,,,
  அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அய்யா, ஆனால் தூங்கி கிடந்த எழுத்துக்கள் தூசி தட்டப்பட்டதும் உண்டு,,,,,,,
  நன்றி ஐயா,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டல்லவா?!
   நன்றி மகேஸ்வரி

   நீக்கு
 13. கிழடு கட்டை எல்லாம் எழுத நேரம் இருக்குது ,
  வாய் திறந்தால் தப்பாகுது
  இந்த மௌன தட்டச்சு கை கொடுக்குது
  எதோ கிறுக்கினாலும் ஒருநாள் அதில் பலனும்
  யாருக்காவது கிடைக்குது.
  காசுவேண்டாம் லைக்கும் வேண்டாம் ,
  பொன்னும் வேண்டாம் பொருளும் வேண்டாம்
  பெருசுகளைப்பார்த்தால் மரியாதை கலந்த பொன்னகை போதும்
  கிழடுகட்டை பெருசு வாயைமூடு சாவு கிராக்கி
  சொல்லாம இருந்தா போதும்
  அதுக்கு கணினி இடுகை கை கொடுக்குது

  பதிலளிநீக்கு
 14. வலையில் விழுந்த பதிவர்கள்..:)

  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 15. ஆரோக்கியத்தைக் கெடுக்காத விசயத்தில் அடிமையாய் இருப்பதில் தவறில்லையே :)

  பதிலளிநீக்கு
 16. உண்மை தான் ஐயா. ஆனாலும் ஒதுக்கிய விடயங்களை உலகம் அறியச்செய்வதில் ஊடகம் வலைப்பூத்தான்)))!

  பதிலளிநீக்கு
 17. எத்தனையோ தீய பழக்கங்களுக்கு, தமிழ் நாட்டு இளைஞர்கள் அடிமையாகிக் கிடைக்கும் இந்நாளில்,
  வலையில் வீழ்ந்து கிடப்பது பாதிப்பல்ல என்றே எண்ணுகின்றேன் ஐயா
  எழுதும் சுதந்திரத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டல்லவா இருக்கிறது வலை
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 18. இப்படியெல்லாம் உண்மையைப் போட்டு உடைக்கறீங்களே ஹஹஹ
  ஆனால் இது ஒரு நல்ல விஷயமாகத்தான் தெரிகின்றது ஐயா. நல்லதை வாசிப்பது அறிவிற்கு நல்லது. நாம் எழுதுவது நமது கற்பனைத் திறனையும் வளர்ப்பாதாகத்தான் தெரிகின்றது...இல்லை என்றால் உங்கள் எ ழுத்துகளை ரசிக்க முடியுமா சொல்லுங்கள்!

  பதிலளிநீக்கு