தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 16, 2015

பணமா?பாசமா? ....வீடு-காட்சி-3நேற்று மாலனின் ஒரு கவிதையைப் பகிர்ந்திருந்தேன்.

அதில் குறிப்பிடப்படும் வீடு ஓர் எட்டுக்கு எட்டு சதுரம்.

ஆனால் நம் நாடகத்தின் முக்கிய பாத்திரமான வீடு அவ்வாறல்ல.

 மிகப் பெரிய வீடு.

”வேலைப்பாடுகள் நிறைந்த கதவைக் கொண்ட பெரிய வாசல்.
பொங்கிடத் தனி சமையலறை
புணர்ந்திட பல படுக்கையறைகள்
நண்பர்கள் வந்தால் குந்திக்கொள்ள வரவேற்பறை சோபாக்கள்
பாண்டங்கள் வைக்க ஷெல்புகள்
ஆவணங்கள் வைக்க,மடித்த துணிகள் வைக்க ரோஸ்வுட் பீரோக்கள்”

ஆனால் வசிப்பது வயதான ஒரே ஒரு பெண்மணி!

அந்த வீட்டோடு ஒன்றிிப்போனவள்.

அந்த வீட்டின் ஒவ்வொரு கல்லும் அவளுக்கு ஒரு கதை சொல்லும்!

பிள்ளைகளுக்கு வீடு வேண்டாம்;அவளுமா?

 இனி நாடகம் தொடர்கிறது

**********
பட்டாபியும், கிச்சாமியும் பக்கத்து பக்கத்து இலையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்மா பறிமாறிக் கொண்டிருக்கிறாள்.

கிச்சாமி: அம்மா கை சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆறது.

அம்மா:- நீங்கள்ளாம் அவரோட வருஷாப்திகத்திற்கு வந்தது. அப்புறம் வருஷத்துக்கொரு தடவை அவர் இருந்த இந்த வீட்டுக்கு வந்து இங்கேயே அவருக்கு பிண்டம் போட்டுட்டு போறதுக்குக் கூட உங்களுக்கெல்லாம் நேரம் இல்லே. அங்கே அவாவா ஆத்திலேயாவது அவருக்குப் பிண்டம் வைச்சேளா

கிச்சாமி: ஏம்மா எங்க மேலே உனக்கு இவ்வளவு சந்தேகம்.

அம்மா: அப்பா தெவசம்னா கூட இங்கே வர நேரம் இல்லே. சீசன் தவறாம ஊட்டி, கொடைக்கானல் போக பேஷா நேரமிருக்கு.

கிச்சாமி:- நா இப்ப வசமா மாட்டிண்டேனா

பட்டாபி:- எனக்குகொடுக்கவேண்டியதை காலம்பற காபியோடவே கொடுத்தாச்சு.

கிச்சாமி:- இப்ப நா ஆரம்பிக்கிறேன். ஏம்மா உனக்கேன் அவ்வளவு பிடிவாதம். நம்ப பாட்டி, அதான் உன் மாமியார் உன்னோட இருக்கல்லேயா? நீ மாத்தரம் என்ன அவ்வளவு ஒஸத்தியான மாமியாரா?

அம்மா:- உன் பாட்டிக்கு நான் பண்ணினா மாதிரி வேறே எந்த மாட்டுப் பொண்ணுடா பண்ண முடியும். உனக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போவது. ஆனா ஒண்ணு உம் பொண்டாட்டி கல்யாணி சமத்துதான். நீயே அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்துடுவே. நான் உன்னோட வந்திருந்தா எனக்கு வர்ற குடும்ப பென்ஷன் பணத்தைக் கூட நீயே பிடுங்கிண்டுடுவே. அவ்வளவு பொல்லாதவன் நீ காசுல கெட்டி.

கிச்சாமி:- பொம்மானாட்டிங்க கண்லே காசை காட்டக் கூடாது. அவாளுக்கு என்னென்ன வேணுமோ அத்த ஒழுங்கா செஞ்சா போதும்னு அப்பா தானே சொல்லுவா.

அம்மா:- நீ காசையும் பிடிங்கிண்டு எதையும் கவனிக்காம அழவிடற பேர்வழி.

பட்டாபி:ஓஹோ நம்ப கிச்சாமி பெரிய கஞ்சன்னு பெரிய சொல்றையா

கிச்சாமி: மன்னி உன்ன அம்மாகிட்ட இருந்து காப்பாத்திடுவா. இந்த கல்யாணி அசடாயிருந்துதான் நல்ல பேரை எடுத்துண்டு என்ன மாட்டி விட்டுற்றது. அம்மா கொஞ்சம் பாயசம் போடு. உன் கை சமையலுக்கு, தனி ருசி தான்.

அம்மா:- போறும், போறும், ஐஸ் வைக்காதே. விஷயத்துக்கு வருவோம். நீ என்ன வீட்ட வித்துதான் ஆகணும்னு பிடிவாதம் பிடிக்கிறயாமே. எனக்கு துளி கூட இஷ்டமில்லே.

கிச்சாமி:  இந்த தடவை நல்ல ஆஃபர் வந்துருக்கம்மா. இத தட்டிக் கழிச்சுட்டா அப்புறம் இந்த வீட்ட அவ்வளவு விலைக்கு விக்கறது ரொம்ப கஷ்டம்.

அம்மா:-பாபுவை இன்னும் காணோமே

கிச்சாமி:- அவன் வரப்ப வரட்டும். சாப்பிட்டு ஆனவுடனே, நான் ரெடியா கொண்டு வந்துருக்கற பேப்பர்லே நீங்கல்லாம் கையெழுத்துப் போடுங்க.
நான் ஏற்கனவே கோரியர் மூலம்யு.எஸ்க்கு அனுப்பி நச்சுகிட்டேயிருந்து கையெழுத்து வாங்கிட்டேன். ஏம்மா உனக்குத் தான் மாடியேறாம கீழேயே ஒரு ஃப்ளாட்தரதா ஒத்துகிட்டு இருக்காங்களே. அதுவரே நீ நம்ப அவுட் ஹவுஸ்லே தங்கிகறதுக்குக் கூட அவங்க ஒரு பேச்சு பேசாமரின்னு சொல்றாங்களே வேறென்ன வேணும் உனக்கு?

அம்மா:- உன்னோட தர்க்கம் பண்ணி ஜெயிக்க என்கிட்டே பலம் இல்லே.

பட்டாபி: ஊருக்குப் போறச்சே இந்த ஊறுகாயை ஒரு பாட்டில்லே போட்டு கொடும்மா. ரொம்ப பிரமாதமான டேஸ்ட்.

அம்மா:- வாய் கிழியறதே. ராஜிக்கு ஊறுகாய் போட வராதோ?
..........
கூடத்தில் உட்கார்ந்து பட்டாபி, கிச்சாமி, கோபால் மூவரும் காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிச்சாமி வீடு விற்பனை சம்பந்தப்பட்ட பேப்பர்களை பட்டாபிக்கு காண்பிக்கின்றான். அதை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது காலிங் பெல் ஓசை கேட்கிறது.


(நாளை தொடரும்)

டிஸ்கி:பாலு  மகேந்திராவின் “வீடு” 1988 இல் வெளி வந்தது.நாங்கள் விரும்பிய படி இந்நாடகம் வெளியாகியிருந்தால் இந்த வீடுதான் முதல் வீடாக இருந்திருக்கும்! அவர் படத்தின் பெயர் கூட மாறியிருக்குமோ?


23 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா!! படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது!!! தொடர்கின்றேன்!!! நன்றி

  பதிலளிநீக்கு
 2. பள்ளி வயதில் மன்னையில் கணபதி விலாஸில் படித்தபோது இந்த மாதிரியான மொழிப் ப்ரயோகம் கேட்டதுண்டு. இன்னிக்கு அகஸ்மாத்தா ஒரு அக்ரஹார வீட்டுக்குள்ள நுழைஞ்சமாதிரி இருக்கு. :) வயசான பின்னாடி பிள்ளைகள் வீட்டை வித்துடுவாங்களோன்னு ஏன் திடீர்னு பயத்தைக் கிளப்புறீங்க சார் :) ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளி பேரு கண்பதி விலாஸா!
   இன்றைய வாழ்வின் யதார்த்தம் அதுதான் அம்மா!
   நன்றி

   நீக்கு
 3. உங்கள் நாடகத்தில் உள்ள உரையாடல்களைப் படிக்கும்போது ஒரு குடும்பத்தில் நடப்பதை நேரில் பார்ப்பதுபோல் உள்ளது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. அன்றைக்கு,கிச்சாமி இல்லாமல் நாடகமே இல்லையோ:)

  பதிலளிநீக்கு
 5. காட்சிகளை கண்முன் காட்டும் எழுத்து நடை
  தொடர்கின்றேன் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 6. வீடு என்ன ஆகப் போகிறதோ என்ற கலக்கத்துடனே தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  தொடர்ந்து படிக்கிறேன்.. ஐயா.
  எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்... த.ம9

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. "வீட்டை விற்க ஒத்துக்காதீங்கம்மா... உங்கள் காலத்துக்கு அப்புறம் அவா என்னமோ பண்ணிண்டு .போகட்டும். கிச்சாமி காரியக்கார மகனா இருக்கான்மா... பாத்து இருந்துக்குங்க..."

  பதிலளிநீக்கு