தொடரும் தோழர்கள்

செவ்வாய், செப்டம்பர் 01, 2015

ஏதோ வில்லங்கம் இருக்கு!ஏதோ வில்லங்கம் இருக்கு!”

நமக்கு வில்லங்கம் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன?

சொத்து தொடர்பாக நாம் பதிவாளர் அலுவலகத்தில் வாங்கும் வில்லங்கச் சான்றிதழ்தான்!

அதாவது குறிப்பிட்ட சொத்தில் ஏற்கனவே ஏதாவது அடமானம் முதலிய சிக்கல்கள் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகப் பெறப்படும் சான்றிதழ்

பொதுவாக வில்லங்கம் என்றால் என்ன?

தடை,துன்பம்,சொத்துக்களில் அடைமானம் முதலிய பந்தகம்,விவகாரம்.

இந்தச் சொல் எப்படியெல்லாம் பயன்படுத்தப் படுகிறது?

யாராவது ஒருவர் இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டால் அதை வில்லங்கமான கேள்வி என்று சொல்லலாம்.

உதாரணமாக ஒரு அரசியல்வாதி ,பத்திரிகையாளரை சந்திக்கும்போது, சிலர் கொஞ்சம் ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்பார்கள்.அவற்றை வில்லங்கமான கேள்விகள் என்று சொல்லலாம்.

அப்போது அரசியல்வாதி என்ன செய்யலாம்”தூக்கி அடிச்சிட வேண்டியதுதான்!”

நமது இணையத்தில் அதிகம் புழங்கும் ஒரு சொற்றொடர்”சொந்தச்செலவில் சூனியம் வச்சுக்கறது”

இதைத்தான் சிலர் வேறு மாதிரி சொல்வார்கள்”வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவது” என்று

காதலில் இது “சாதாரணமப்பா!”

காதலினால் நமக்குப் பிரச்சினைகள் வருமென்று தெரிந்தாலும்,காதலில் விழுவதைத் தடுத்துக் கொள்ள  முடியாது

தொடர்ந்து காதலிப்பதை நிறுத்தமுடியாது.

அதில் வில்லங்கத்தைப் பற்றிய அச்சத்தை மீறியது காதலின் ஆழம்!

ஒரு விளம்பரம்...

ஒரு பிணையக் கட்டமைப்புப் பற்றியது

ஒரு பெண் முழு திரைப் படத்தை விரைவில் தன் கைபேசியில் தரவிறக்கம் செய்து விட, போட்டியிட்டும் பெண் “இதில ஏதோ வில்லங்கம் இருக்கு” என்கிறாள்.

இங்கு வில்லங்கம் என்பது என்ன பொருளில் இருக்க முடியும்?

அந்தப் பெண் முன்பே தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு இப்போது செய்கிறாள் என்பதாகக் கொண்டால்,ஏமாற்று,மோசடி என்ற பொருளில் பயன்படுவதாகக் கொள்ளலாம்.

வாழ்க்கையில் வில்லங்கமாகிப் போன ஒருவன் விசயன்!

ஆம்!அவன் பெரிய வில்லாளி,எனவே அவனது வில் அவனது அங்கமாகிப் போனது 

சரிதானே?!


ஒரு லிமெரிக்கோடு முடிக்கலாமா?


சீனு காதலித்தவள் பெயர் ஜுடி

நம்பினான் அவ சரியான ஜோடி 
வில்லங்கமாய் வந்தான் முறை மாமன்
பார்க்க அவன் ஒரு மதனகாமன்
இப்ப வளக்கிறான் சீனுதாடி!
 

17 கருத்துகள்:

 1. தங்களது பதிவின் தலைப்பைப் படித்ததும் ஏதொ வில்லங்கமாக சொல்லப் போகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் படித்ததும், வில்லங்கமே வாழ்வின் அங்கமாகிவிட்டது என சொல்வதை புரிந்துகொண்டேன்.

  லிமெரிக் கவிதை வழக்கம்போல் அமர்க்களம்!

  பதிலளிநீக்கு
 2. ஆஹா! விஜயன், வில்லாளி = வில் + அங்கம்
  வித்தியாசமான சிந்தனை அய்யா!
  த ம 2

  பதிலளிநீக்கு
 3. புதுமையான விளக்கவுரை அருமை ஐயா தொடரட்டும் தங்களது வில்லங்க கதைகள்

  பதிலளிநீக்கு
 4. இதென்ன வில்லங்கமான குறியா இருக்கே :)

  பதிலளிநீக்கு
 5. வில்லங்கமான பதிவு என்று வந்தேன். வில்லங்கம் இருக்கு, ஆனா இல்ல! வில் அங்கமாகியவன் விஜயன் என்று சொல்ல வந்தால், அதையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்.அப்புறம் நான் என்னதான் கமெண்ட் போட!!!!!!

  :))))))

  பதிலளிநீக்கு
 6. தாடியும் இப்ப பல. விமான நிலையங்களில் வில்லங்கம் தான் ஐயா))

  பதிலளிநீக்கு
 7. ஏதோ வில்லங்கம் இருக்கு என்று நினைத்து கதையாக இருக்குமோ என்று வந்தால் தலைப்பே பதிவு! அர்க்சுனன் பற்றிச் சொல்ல நினைத்தோம்...வில்+ அங்கம் அதனால் அவன் கௌரவர்களுக்கு வில்லங்கம் ஆனான் என்று.....

  லிமெரிக் சூப்பர்....இப்படி நீங்களே எல்லா தளங்களிலும் கலக்கினால் நீங்களே எங்கள் எல்லோருக்கும் வில்லங்கமோ!!!ஹஹஹ் ஐயா இங்கே இது சும்மா போட்டி என்ற அர்த்தத்தில் ரசித்துச் சொல்லுகின்றோம் தப்பா எடுத்துக்காதீங்க....

  கில்லர்ஜி கூட எங்களை வில்லங்கத்தார் என்பார் என்ன விளக்கம் என்று கேட்க வேண்டும்...ஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எதிர்பார்த்துக் காத்திருந்து படித்து ரசிக்கும் பின்னூட்டங்கள் உங்களுடையவை.
   நன்றி

   நீக்கு
 8. லிமெரிக், ஹைக்கூ, சென்ரியூ எல்லாம் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் வர மாட்டெங்குது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரமாட்டேங்குது என்று சொன்னல் ஏற்றுக்கொள்ளா முடியவில்லை.உங்களால் முடியாததா?

   நீக்கு
 9. என்னது சீனு தாடி வளர்க்கிறாரா? வில்லங்கமா இருக்கே...!

  பதிலளிநீக்கு