தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

வீட்டுக்கும் உயிர் உண்டா?.. வீடு-4வீடு என்பது வெறும் செங்கல்,சிமிண்டு இவற்றால் கட்டப்பட்ட சுவர்கள் மாத்திரமா?

அந்த வீட்டில் வசிக்கும்,அந்தவீட்டுக்குச் சொந்தக்காரர்கள் உணர்வுகளும் அந்தச் சுவர்களோடு கலந்து விடுவதில்லையா?

வீட்டின் ஒவ்வொரு அறையும்,மூலையும் அவர்களது வாழ்க்கையின் ஏதோ நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டு அந்த நினைவுகளுக்குச் சாட்சியாக இருப்பவை அல்லவா?

நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட வீட்டை விற்பது மட்டுமில்லாமல் நம்கண் முன்னே அது இடித்துத்  தரை மட்டம் ஆக்கப்படும்போது சகிக்க முடியமா?

அதுவும் அம்மாதிரி விற்பதற்குத் தேவையே இல்லாத ஒரு நிலையில்?

வெறும் கட்டிடமாகப் பார்த்தால் அது “வீடு” (house)

அங்கு வாழும் மனிதர்களோடு அவர்கஇன்ப துன்பன்ஙளோடு சேர்த்துப் பார்த்தால் அது இல்லம்(home)இப்போது இந்த இல்லம் என்ன ஆகப் போகிறது?
இனி நாடகம்.......


கோபால் போய் கதவைத் திறந்து பாபுவின் வருகையை அறிவிக்கிறார்.

பட்டாபி ஒடிப்போய் பாபுவை கட்டித் தழுவி வரவேற்கிறார்.

பட்டாபி:- பாபுவைப் பார்த்ததும் என்னடா தாடி, மீசையெல்லாம் சாமியார் மாதிரி.

பாபு :நீ வர்றது தெரிஞ்சா மழமழன்னு தரிசனம் தந்திருப்பேன்.

பட்டாபி:- அம்மா உன் சிநேகிதம் மூலம் சொல்லி அனுப்பிச்சாளே.

பாபு:- உடனடியாக அம்மாவைப் பார்க்கவும்னு தந்தி மாதிரி ஒரு சின்ன கடிதாசியை நான் தங்கியிருக்கிற ரூம்லே சொருகிட்டு போயிட்டான். அந்த பாவி. நான் என்னவோ ஏதோன்னு அலறி அடிச்சுண்டு இங்கே ஒடி வந்தேன்.

கிச்சாமி:- என்ன பாபு. மதராஸிலே தடபுடலா உன் ஒவியக் கண்காட்சி எல்லாம் நடந்ததாமே. நான் ஊர்லே இல்லே. கல்யாணி சொன்னா. எவ்வளவு பணம் தேறித்து.
பாபு: ஆமா பணத்திலேயே இரு.

பட்டாபி: நான் விமர்சனத்தை பேப்பர்லே பார்த்தேன். ஒரு லெட்டர் எழுதணும்னு இருந்தேன்.

பாபு: உண்மை அரசு ஊழியருக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போறது.

பட்டாபி: சாரி பாபு.

பாபு. ம்ஹூம. நீ விமர்சனத்தை பார்த்தே, எனக்கு பரம திருப்தி. இந்தாண்ணா என்னோட லேடஸ்ட் கவிதைத் தொகுப்பு ஊருக்குப் போய் ஹாய்யா படிச்சு. எப்படியிருக்குன்னு எனக்கு எழுது. அதிசயமா இருக்கே.அண்ணாக்கள் எல்லாம் திடீர்னு இங்கு எழுந்தருளி இருக்கிறார்களே?

அம்மா: பாபு சாப்பாடாச்சா?

பாபுவிடம் எந்த பதிலும் வரவில்லை.

அம்மா கொண்டு வந்த பாயசத்தை ஆவலோடு குடித்தான்.

கிச்சாமி:- பாபுக் கண்ணா! அம்மா தான் இந்த வீட்ட ஒண்டியா எவ்வளவு நாள் தான் கட்டிக் காத்துண்டிருக்க முடியும். எங்களோட வந்து இருக்கறதுக்கும் அவளுக்கு இஷ்டம் இல்லே. உன்னோட உலகமே கவிதை, ஒவியம் வேறே தினுசாயிருக்கு அதனாலே வீட்ட வித்துடலாம்னு ஒரு ஐடியா நல்ல ஆஃபர் வந்திருக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரு காண்ட்ராக்டர் 25 இலட்சம் தந்து கூடவே இந்த இடத்திலே அவன் கட்டப் போற கட்டிடத்திலே ஒரு கீழ்த்தள ஃப்ளாட்ட தரதாஆஃபர் பண்ணினான். அம்மா அதுலே இருந்துக்கலாம். கட்டிட வேலை முடியறது வரை அவுட்ஹவுஸிலேயே அம்மா இருக்கறதுக்கும் அவனுக்கு ஆட்சேபணையில்லே. நீ என்ன சொல்றே. நச்சு ஏற்கனவே பத்திரங்கள்லே கையெழுத்துப் போட்டாச்சு. இந்த வாரத்திலேயே ரிஜிஸ்ரேஷனை முடிக்க எல்லா ஏற்பாடுகளையும் கோபால பண்ணிண்டிருக்கார்.

பாபு : ஸ்டாப் இட்..கிச்சாமி அண்ணாக்கு திடீர்னு இந்த வீட்டு மேலே ஏன் இவ்வளவு கரிசனம் வந்துடுத்துன்னு பார்த்தேன்.இப்ப என்ன இங்க தனியா இருக்கறதுக்கு அம்மாக்கு என்ன பயமா? இல்லே அம்மா ஏமாந்திருக்கும்போது இந்த வீட்ட யாராவது அலாக்கா தூக்கிண்டு போய்டுவான்னு பயமா.இல்லே. நான் தான் கேக்கறேன். நம்ப குடும்பத்திலே யாருக்காவது பணமுடையா?பட்டாபி அண்ணா! நீங்களுமா இதுக்கு ஒத்துகறேங்க.
எனக்கென்னமோ இந்த வீட்ட செங்கலையும் சிமெண்டையும் சேர்த்து பண்ணின கட்டடமா மட்டும் பார்க்க முடியல்லே.ஒவ்வொரு இடத்திலேயும் ஏதோ ஒரு உயிரோட்டத்த என்னாலே உணரமுடியறது.

இதோ! இந்த ஈஸிசேர்- பார்க்கும் போது அதுலே! அப்பாவையும் சேர்த்துதான் என்னாலே பார்க்க முடியறது. *1

அதோ அந்த கூடத்திலே நம்ப அப்பாவோட சஷ்டியப்த பூர்த்தி நடந்ததே. உங்களுக்கெல்லாம் ஞாபகமிருக்கா.*2

கிச்சாமி அண்ணா! நீ அடிச்ச சிக்சர்பட்டு உடைஞ்ச கண்ணாடி அதுதானே மறந்து போச்சா? அப்பா உன் திறமைக்கு அத்தாட்சியா அதை எவ்வளவு அழகா கண்ணாடி போட்டு வைச்சிருக்கார்!*3

நம்ப கோதை பரத நாட்டியம் கத்துண்டது அந்த உள்லே தானே.*4
அந்த நாள்லே அவளோட அரங்கேற்றத்தை தான் அப்பா எவ்வளவு அழகா நடத்தினார்.

கோதை தான் 18 வயசிலே புரியாத காய்ச்சல்லே போயிட்டா.*5

அவளோட நினைவுகள் அவ்வளவு சுலபமாக மறக்கக் கூடியவைகளா?

எந்தையும் தாயும் மகிழ்ந்து
குலாவி இருந்ததும் இவ்வீடே
என் இதயம் முழுவதும்
நிரம்பிக் கிடக்கும்
வண்ண ஜாலங்களின்
ஆதார ஸ்ருதியும் இவ்வீடே

இந்த வீட்டோட ஒவ்வொரு சதுர அங்குலமும், ஒரு கவிதை இருக்கு நாமல்லாம் இருக்கற வரெ இந்த வீட்ட விக்கற நினைப்புகூட நமக்கு வரக்கூடாதுன்னு எனக்கு படறது.

(பாபு  பேசிக்கொண்டிருக்கும்போது அவன் பேச்சில் குறிப்பிடப்படும் செய்திகள் காட்சியாக விரிகின்றன.....

*1 ஈசிசேரில் அவர்கள் அப்பா படுத்திருக்க பின்னணியில்  அரியக்குடி ராமானுஜ ஐயங்கரின் பாட்டு ஒலிக்கிறது

*2 அப்பாவின் சஷ்டியப்தபூர்த்திக் காட்சி
  
*3கிரிக்கெட் பந்து வேகமாகப் பட்டு உடையும் கண்ணாடி

*4 கோதையின் பரத நாட்டியப் பயிற்சி

*5 மரணப்படுக்கையில் கோதை;சுற்றி குடும்பத்தினர்)


கிச்சாமி: - நீ சொல்தெல்லாம் எனக்கு கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கு. ஆனா ஒண்ணு பாபு, நாம மாற்றத்த ஒத்துக்கணும்.

இந்த ஒரு வீடு இருக்கற இடத்திலே முப்பது Flats வரப்போறது. அதாவது முப்பது குடும்பங்களோட வீடு வாங்கணும்கற ஆசை நிறைவேறப்போறது.

பாபு: (சற்று கோபத்துடன்) நம்மோட நினைவுகளின் கருவூலத்தை அழிச்சா?அப்படி ஒண்ணு நடக்கணும்னாநம்ப சந்ததிக்குப் பிறகு நடக்கட்டும்.

கிச்சாமி (சற்று வேதனையுடன்) : பட்டாபி நீ என்ன சொல்றே

பட்டாபி (திடமான மனதுடன்) பாபு சொன்னதெல்லாம் என்ன ரொம்ப பாதிச்சுடத்து. இந்த வீட்ட இப்ப விக்க வேண்டாம். அப்புறம் பாத்துக்கலாம்

அம்மா மனம் கலங்கி அழுது கொண்டே பாபுவை கட்டிக் கொண்டு தலையை கோதி விடுகிறாள். இப்போது கிச்சாமி கொண்டு வந்த பத்திரங்கள், திடீரென்று வீசிய பலத்த காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டு சிதறிப் போய் விழுந்துகிடப்பதை கேமரா போக்கஸ் செய்வதுடன் காட்சி முடிகிறது.-

--நாடகமும்!

ஆனால் இத்ன் பின் என்ன நடந்திருக்கும்?

என்ன ஆயிற்று அந்த வீடு?,அந்த மனிதர்கள்?

நாளை பார்க்கலாம் 


11 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா! வீடு, இல்லம் "நல்ல தகவல்!! அந்த வீட்டுக்கு என்னாகியிருக்கும்! தொடர்கிறேன்! நன்றி

  பதிலளிநீக்கு

 2. நிச்சயம் அந்த வீடு விற்கப்பட்டிருக்காது. தொடர்கிறேன்.


  பதிலளிநீக்கு
 3. காலங் காலமாய் வாழ்ந்த வீட்டை
  பிரிந்த துயரை அனுபவித்தவன் நான்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 4. நாடக முடிவு நன்று. அதன் பிறகு வீடு என்னவாயிற்று.... தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. முடிவு அழகானது.அடுத்த கட்டம் அறியும் ஆவலுடன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா !

  உயிரோட்டமான கதை பொதுவாக கிராமங்களில் கூட இவாறான சம்பவங்களைக் காணலாம் தொடர்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 7. வீடு முழுவதும் படித்துவிட்டுத்தான் முடிவில் கருத்திட்டோம். அருமை....
  ஹும் எங்கள் வீடு ஒன்றும் கூறு போடப்படுவதில் இருக்கின்றது...அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகாமல் இருந்தால் நல்லது. இது போன்று வாழ்ந்தால் நல்லது...என்ன செய்யப்போகின்றார்கள் என்று தெரியவில்லை.....

  பதிலளிநீக்கு