தொடரும் தோழர்கள்

செவ்வாய், செப்டம்பர் 22, 2015

ஆரண்ய காண்டம்!இன்று
---------
செப்டம்பர் 12 சனியன்று, ஆந்திர வனத்துறை அதிகாரிகளின் கருணை வெள்ளம் அகண்ட கோதாவரியாக பாய்ந்தது. அனந்தபூர் மாவட்டத்தில் துரத்தகுண்டா என்ற சிறு கிராமத்தில் உள்ள ஒரு உலர்ந்த கிணற்றில் வனக்கரடி ஒன்று தவறி உள்ளே விழுந்தது. வனத்துறை அதிகாரிகள் அந்தக் கரடிக்கு உணவு மற்றும் தண்ணீரை வாளியில் வைத்து கிணற்றுக்குள் இறக்கினர். இரவில் கரடி தப்பி வனம் போய்ச் சேர ஏதுவாக ஏணி ஒன்றும் கிணற்றில்  இறக்கி வைக்கப் பட்டது. அன்று
---------
ஆனால், ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வியாழன் அன்று ஆந்திராவில் ஜாலியன்வாலாபாக் நடந்தது. சித்தூர் மாவட்டத்தில் சேஷாசல வனப்பகுதியைச் சார்ந்த சிறுவாரி மெட்டில் ஏழுமலையானின்பாதாரவிந்தங்களில் அமைந்துள்ள வனப்பகுதியில் ஒரு கொடூர சம்பவம் நடந்தேறியது. 

பழங்குடியை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்களை சந்தனக் கடத்தல்காரர்கள் என்று வனத் துறை போலீஸார் சந்தேகித்து 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சந்தனக் கடத்தல் காரர்களின் கையில் வெறும் பகடைகளே இவர்கள் என்ற பேச்சு வலுத்தது. 
தேசிய மக்கள் உரிமைக் கழகம் (NHRC) தலையிட, ஆந்திர அரசு அதன் வேண்டுகோளை ஏற்று நீதிபதி விசாரணை ஒன்றை ஆணையிட்டது. 

முடிவுகள் விரைவில் வெளியாகலாம். 
அன்று நடந்தது ஆவி துடிக்குது

இன்று நடந்தது நெஞ்சு துடிக்குது” 

கைது செய்து விசாரணை செய்யாததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 
தப்பித் தவறி சுடவேண்டிய அவசர நிலை உருவாகியிருக்கும் எனில், இடுப்புக்குக் கீழே சுட்டிருக்கலாம் என்ற கருத்து வலுவடைந்தது. 

ஒண்ணுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது
சந்திரபாபு கவலையில்லாத மனிதன்

இன்றைய சூடான செய்தி

செப்டம்பர் 19 அன்று ஆந்திராவில் கூடூர் பக்கத்தில் செல்லக்கலுவு வாய்க்கால் அருகில், திருவண்ணாமலையை சேர்ந்த 13 மரம் வெட்டிகள் சந்தன கடத்தல் குற்றத்துக்காக ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை மரம் வெட்ட அமர்த்திய இரண்டு கடத்தல்காரர்கள் தப்பியோடினர். 

எய்தவன் தப்பியோட அம்புகள் சிறையில். கடத்தல்காரர்கள் பிடிபட வேண்டும்.
தண்டிக்கப்படவேண்டியவர்கள் அவர்களே. 

மரம் வெட்டிகளுக்கு நல்வழி காட்டி மறுவாழ்வு கொடுக்க அரசாங்கமும் அவர்களை வைத்து அரசியல் பண்ணுபவர்களும் நல்முயற்சிகளை எடுத்துக் கொள்வதே உடனடித் தேவை. நம்பகமான சேவை.

---பார்த்தசாரதி

15 கருத்துகள்:

 1. ஆமாம் ஐயா! ஒரு உயிரை ஐந்து மிராண்டிகள் உயிர் விடும்வரை அடித்தே? வாட்ஸ்அப்பில் பார்த்து பதறிபோனேன்? ..,தூறு "க்கு போராடுபவர்கள் இதற்கு எங்கே போனார்கள் என்று தெருயவில்லை?

  பதிலளிநீக்கு
 2. ‘படிக்கிறது இராமாயணம் .இடிக்கறது பெருமாள் கோயில்!’ என்று சொல்வதுபோல் வாயில்லா பிராணிக்கு உதவுவதுபோல் நடித்து வாயுள்ள ஜீவன்களை சுட்டு கொன்று விட்டார்கள். இவர்கள் தான் புத்தர் சிலை அமைத்து அமராவதி நகர் காணப் போகிறார்களாம்.

  கேட்பதற்கு நாதியில்லையென்றால் இது தான் நடக்கும். நாம் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 3. கொடுமையான விஷயம். விரைவில் நீதி கிடைக்கட்டும்....

  பதிலளிநீக்கு
 4. நீதி கிடைக்க பிரார்த்திப்போம் வேற எதைச்செய்ய???

  பதிலளிநீக்கு
 5. ஐயா என் தளத்தில் நான் எழுதிய கட்டூரைக்கு தங்கள் கருத்தை அறிய அவல் (நேரமிருப்பின் ) நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று பார்க்கும்போது வெளியாகவில்லை.
   இன்று படித்து விட்டேன் பூபகீதன்

   நீக்கு
 6. கரடியை காப்பாற்றியது மனிதாபிமானம் என்றாலும் அப்பாவிகளை சுட்டதும் கைது செய்து வைத்திருப்பதும் எந்த வகையில் நியாயம்?

  பதிலளிநீக்கு