தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 07, 2015

பேஷ்.பேஷ்!ரொம்ப நன்னாருக்கு!
என்.எஸ்.கிருஷ்ணனிடம் காபி வேண்டுமா என்று கேட்டபோது (டீயே), டி.ஏமதுரம்  என்று சொல்ல அவருக்கு அதன் பிறகு காபி கிடைக்கவில்லைஎன்பது  பழைய ஜோக்.

நமது கிருஷ்ணன் ஜோக்கடித்து காப்பியை இழந்தவரல்ல. அவருக்குஏற்பட்ட  அனுபவம் என்ன என்பதை பார்த்துவிட்டு அதை வகைப்படுத்தலாம்.


அவருக்கு தினமும் இரண்டு காபிகள் அத்யாவசியம். காலை பல் தேய்தவுடன் ஒன்று. சுமார் 6.30 மணிக்கு சாருக்கு புதுப் பாலில் போட்டபில்டர் காபி தான் பிடிக்கும். இரண்டாவது காபி மாலை 03.30 மணிக்கு. சர்வீஸில் இருந்த போது ஆபிசிலே இவருக்கும் இவரைப் போன்ற இன்னும் சிலருக்கும் பிரத்யேக ஏற்பாடுகள் மூலம் காபி கிடைத்து விடும்.


அப்போது கிருஷ்ணனுக்கு வயது 46. கர்நாடகாவின் ஒரு சின்ன டவுனில் வேலைபார்த்து வந்தார். ஒரு பெரிய நிறுவனத்தின் ரீஜனல் ஆபீசில் படிப்படியாக முன்னேறிக் கொண்டி
ருந்தார். வேலையை சற்று திறம்பட செய்ததால், பொறுப்புள்ள வேலைகள் அவரிடம் ஒப்படைக்ப்பட்டன.

அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களில் 10 தமிழ் குடும்பங்கள் அந்த ஊரில் இருந்தன. ஜாதி மத பேதங்கள் இல்லாமல் குடும்பங்கள் ஒற்றுமையாக, அளவாக பழகின. தமிழ் வார பத்திரிக்கை சங்கம், பிக்னிக், புதுவருட இரவு டின்னர் போன்ற கொண்டாட்
டங்களுக்கு கிருஷ்ணன் அச்சாணியாக இருந்தார். வாரப் பத்திரிக்கை பட்டுவாடாக்களை பேதமின்றி செய்தார்.

மற்றுமொரு 15 ஊழியர்கள் சென்னை, மும்பை, பெங்களூர்களில் குடும்பத்தை விட்டு விட்டு தனியாக வசிப்பவர்கள். குடியிருப்பு வசதிகளை நிறுவனமே வழங்கியது.

தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு மாறுதல் கேட்டு பெற்றுச் செல்லும் நிர்பந்தம் கிருஷ்ணனுக்கு ஏற்பட்டது. கிருஷ்ணனின் மாற்றம் எல்லோரையும் சிறிது வருத்தத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக வார ஏடுகள் சங்கத்தின் மூலம் தொடர்கதை வாசிப்பவர்களின் வருத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.மே30 ஆம் தேதி சென்னை செல்ல ரயிலில் புக் பண்ணியிருந்தார். ஒரு வாரமாக லஞ்ச், இரவு சாப்பாடு வீட்டில் இல்லை.ராமசாமி என்ற மேல்மட்ட அதிகாரி தமிழ் வாரப்பத்திரிக்கை சங்கத்தின் அங்கத்தினர் கடைசியாக எல்லா பத்திரிக்கைகளையும் வாங்கிக் கொள்வார்.
 திருப்பித் தந்ததில்லை. உறுப்பினர் சந்தாவை பழைய பேப்பர்காரனிடம் சம்பாதித்து விடுவார் என்று அவரது கருமித்தனத்தைப் பற்றி அறிந்தவர்கள் பரிகாசிப்பார்கள்.மே30 திங்கட்கிழமை சனியன்று கிருஷ்ணனுக்கு  அந்த ஆபீசில் கடைசி நாள்.

வியாழனன்று தன்னிடமிருநத மீதி வார இதழ்களை ராமசாமியிடம்ஒப்படைத்து விட்டு திங்களன்று சென்னை செல்வதாக விடைபெற்றார்.

ராமசாமியின் குடும்பத்தினர் வெள்ளியன்று சென்னையிலிருந்து வருவதாக கிருஷ்ணனிடம் கூறினார். பெண்ணை சென்னையில் வித்யோதயா பள்ளியில் சேர்க்கப்போவதாக கிருஷ்ணன் சொன்னவுடன் தன் மகள் அந்தப்பள்ளியின் மாணவி என்று சொல்லி, அப்பள்ளி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள சனிக்கிழமை 3 மணிக்கு அவரை தன் வீட்டிற்கு அழைத்தார் ராமசாமி.

சனியன்று தன்பிரிவு ஊழியர்களின் பிரிவு உபசாரத்தை ஏற்றுக்கொண்டு சரியாக 3 மணிக்கு ஆபீஸின் சற்று தூரத்தில் இருந்த ராமசாமியின் வீட்டை அடைந்தார். பால்காரன் அப்போது கறந்த பாலை ஊற்றிவிட்டுச் சென்றான். காபி டிகாக்ஷன் மணம் தூக்கியது. சென்னையி லிருந்து கொண்டுவந்த பொடியாக இருக்கலாம்.ராமசாமி கிருஷ்ணனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மதறாஸ் ஆபீஸ் கதை பேசினார். தன் பெண்ணைக் கூப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கையை விட்டு எழுந்து உள்ளே போனார். கெட்டிக்காரப் பெண் வேண்டிய விவரங்களை ஒரு நொடியில் கொடுத்தாள்.

மணி 03.30 கிருஷ்ணனின் புலன்கள் சூடான மணமான டிக்காக்ஷன் காபியை எதிர்நோக்கி காத்திருந்தது. திரும்பி வந்த ராமசாமியிடம் உங்க பொண்ணுக்கு ரொம்ப நன்றி. போயிட்டு வரேன் சார். என்று புறப்பட்டார்.

காபியை மறந்துவிட்டாரோ என நினைத்தார். வாசல் கதவு வரை வழிஅனுப்பினார் ராமசாமி. காப்பி பற்றி கப்சிப்.........!

 (தொடரும்)


27 கருத்துகள்:

 1. மறுபடியும் வருவாருல காஃபி குடிக்க...

  பதிலளிநீக்கு
 2. நானும் நம்ம சகோதரர் கில்லர் ஜியின்
  கருத்தையே வழி மொழிகிறேன் ஐயா!..

  த ம.3

  பதிலளிநீக்கு
 3. அந்த காஃபியை நாளைக்கு குடிச்சுருவார்தானே!! அப்ப நான் நாளைக்கு வரேன்!!

  பதிலளிநீக்கு
 4. காபி வாசனை வந்ததே... என்ன ஆச்சாம்?

  பதிலளிநீக்கு
 5. பேஷ் பேஷ் ரொம்ம நான்னாருக்கு என்று சொல்வார் என்று நினைத்தேன்
  ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே
  தொடர்கிறேன் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 6. தொடருமா அப்போ நாளை தொடர்கிறேன் சகோ ..!

  பதிலளிநீக்கு
 7. புகைப்படத்தைப் பார்த்ததும் கும்பகோணத்தில் தெற்குவீதி ஓட்டலில் பல வருடங்களுக்கு முன்பு குடித்த, மிகவும் பிரபல்யமான, காபி நினைவிற்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 8. காப்பி கொடுக்காததற்கு காரணம் ஏதேனும் இருக்கலாம். காத்திருக்கிறேன் அதை அறிய.

  பதிலளிநீக்கு
 9. காபி குடித்துப பழகிட்டா...பின்னாடி திண்டாட வேண்டி வரும் என்றுதான் காபி்டீகுடிப்பதில்லை..அய்யா....!!!. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 10. பேஷ் பேஷ்! நன்னாருக்கு! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 11. இன்று காப்பி இல்லை நாளைக்கு .முதலில் வரமுயற்ச்சிக்கிறேன்.))))

  பதிலளிநீக்கு
 12. ம்ம்ம் காலை எழுந்தவுடன் காபி தான் இங்கும்....பேஷ் பேஷ்...பின்னர் அவ்வப்போது...அது தனி...

  பதிலளிநீக்கு