பதிவு எழுதுறோம் நாங்க-தமிழ்ப்
பதிவு எழுதுறோம் நாங்க!
துட்டுக்காக எழுதறது இல்லீங்க
ஹிட்டுக்காக எழுதறோம் நாங்க!
நோட்டு எதுவும் கிடைக்கா திங்க
ஓட்டு மட்டும்தானே போதுமா திங்க!
பின்னூட்டம் வந்துதான்னு பாக்குறோம்
ஒண்ணுமே இல்லைன்னா நோகுறோம்!
ரேங்க்ல முன்னேறணும்னு நோக்கம்
சனி ராவுல போச்சு எங்க தூக்கம்!
கிழடு கட்டையெல்லாம் கூட எழுதுது
இளைஞர் பட்டாளத்தோடு ரேஸ் ஓடுது!
எந்நேரமும் கீபோர்ட்ல அடிக்குறோம்
பொன்னான நேரத்தை வீண் அடிக்கிறோம்!
எப்போதும் கணினியைக் கட்டி அழுவுறோம்வேறெந்த வேலையும் செய்யாம நழுவுறோம்!
பயனில்லா வேலையிது உண்மை
ஆனாலும் ஆயிட்டோமே அடிமை!
(போய்ப் புள்ள குட்டிகளப் படிக்க வையுங்கப்பா!!)