தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூன் 01, 2015

’காப்பர்’ காத்ததோ?
ஆண்டு 1983.

அப்போது எங்கள் வங்கி வசந்தவிஹார்,தில்லி கிளையில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி வந்தேன்

பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் மேட்டுக்குடியினர்தான்.-அரசு உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் என..

அதிலும் மேலாளரின் அறையில் வந்து அமர்ந்து தங்கள் பணிகளை இருந்த இடத்தில் இருந்தே முடித்துக்கொண்டு செல்பவர்கள் என்றால் நிச்சயம் உயர்பதவிக்காரர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர்தான்.

சேவையில் எந்தவிதக் குறைபாடும் நேராதபடி பார்த்துக்கொள்வது என் முக்கியக் கடமையாக இருந்தது. 

ஒரு நாள்

வழக்கம்போல் வந்து அமர்ந்தார் அந்த அம்மையார்.

அவர்கணவர் இரானுவத்தில் லெஃப்டினண்ட் ஜெனரல் ஆக இருந்தவர்.

எப்போது வந்தாலும் என் அறையில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடி விட்டுத்தான் செல்வார்.

அன்று சற்றே வாட்டமாகக் காணப்பட்டார்.

ஏன் என நான் விசாரித்தேன்.

இன்னும் சிறிது நாட்களிள் ஓர் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகவும் சிறிய சிகிச்சைதான் என்றாலும் ஏனோ அச்சமாக இருப்பதாகவும் கூறினார்.

நன் அவருக்குத் தைரியமூட்டினேன்.எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புங்கள் எனச் சொன்னேன்.

அவர் திடீரெனக்கேட்டார்”உங்கள் கையில் நீங்கள் அணிந்திருக்கும் செப்பு வளையத்தை எனக்குத்தருவீர்களா,அறுவைச்சிகிச்சை முடியும் வரை”

நான் அப்போது ஒரு தடித்த செப்பு வளையமும்,அமிர்தசரஸ் பொற்கோவிலிலிருந்த வந்த கடா ஒன்றும் அணிந்திருந்தேன்.

அவருக்கு என்ன தோன்றியதோ அந்தச் செப்பு வளையும் தன்னைக் காக்கும் என்ற நம்பிக்கை
ஏற்பட்டிருக்கிறது.

அந்த வளையத்தைக் கழட்டினேன்.அவரிடம் நீட்டினேன்.

“நீங்களே என் கையில் அணிவித்து விடுங்கள்” என்றார்.

 அவ்வாறே செய்தேன்

அவர் விடை பெற்றுச் சென்றார்.

மீண்டும் ஒரு மாதம் கழித்துதான் அவரைப் பார்த்தேன்.

ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்க வெளியே சென்று திரும்பியபோது என் அறையில் அவர் அமர்ந்திருந்தார்.

என்னைக் கண்டதும் எழுந்து நின்று என் கையைப் பற்றிக் குலுக்கினார்.
இருவரும் இருக்கையில் அமர்ந்தோம்.

”உங்கள் கை வளையம் என்னைக் காத்தது.மிக்க நன்றி இந்தாருங்கள் உங்கள் வளையம்”
என்று வளையத்தைத் தன் கையிலிருந்து கழட்ட முற்பட்டார்.

நான் அவரைத் தடுத்துக் கூறினேன்”அது உங்களிடமே இருக்கட்டும்,உங்களுக்குத் துணையாக எப்போதும்”

அவர் மீண்டும் என் கையைப் பற்றிக் குலுக்கி நன்றி தெரிவித்தார்.கண்கள் லேசாகப் பனித்திருந்தனவோ!

ஒரு விலை குறைந்த,சாதாரண வளையத்தைக் கொடுத்ததற்கு இவ்வளவு நன்றியா என வியந்தேன்.

உபரித்தகவல்: அவர் கணவர் பெயர்  லெஃப்டினண்ட் ஜெனரல் பி.எம் கௌல்.1962 சீனப் போரின் போது “பேர்” பெற்றவர்.தனது பேரைக் காக்க  பின்னர்அவர் எழுதிய புத்தகம்”untold story”

28 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. சொல்லக்கூடாத கதையொன்றும் நான் சொல்லவில்லையே?!:))
   நன்றி டிடி

   நீக்கு
 2. நம்பிக்கை என்ற தங்கள் கை வளையம் அவருக்குத் தும்பிக்கையாக இருந்து காப்பாற்றியுள்ளது.

  UNTOLD STORY யில் அவர் கணவரால் சொல்ல விட்டுப்போயுள்ள (சொல்லாத கதைகளில்) இந்த சம்பவமும் ஒன்றாக இருக்கலாம். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் ஒரு காப்பர் வளையம் வேண்டும்.

  காரணமாகத்தான்.

  எப்ப வரட்டும் ?


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது எந்த வளையமும் அணிவதில்லையே ஐயா;ஆனாலும் நல்வரவு,
   நன்றி

   நீக்கு
 4. செப்பு வளையம் நல்லதா? வெள்ளி நல்லதா? அல்லத இரண்டும் முறுக்கி செய்ய பட்டதா?
  மேலும் செப்பு மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.?
  சுத்தமான செப்பு வளையம் எங்கே கிடைக்கும்? அல்லது பத்தரிடம் சொல்லி தான் செய்ய வேண்டுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுவும் தெரியாமல் ஸ்டைலாக அணிந்த காலம் அது.காப்பர் நல்லது என்றே சொல்கிறார்கள்.முழு வளையமாக இல்லாமல் சிறிது இடைவெளி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
   நன்றி

   நீக்கு
 5. நம்பிக்கையே வாழ்க்கை வேறென்ன சொல்வது ?
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 6. எனக்கு இந்தப் பதிவைப் படித்தபோது ஒரு பழைய திரைப்படம் நினைவுக்கு வந்தது. என் நினைவு சரியாக இருந்தால் பெயர் “ மாமன் மகள்”அதில் ஜெமினி கணேசன் ஹீரொ. மிகவும் கோழை. அவரது பாட்டி ஒரு தாயத்தைக்கட்டி அது அவரது தாத்தா அணிந்திருந்தது. கட்டினால் அபரிமித சக்தி வரும் என்றும் கூறுவார். அதைக்கட்டிய ஜெமினி கணேசன் எதிரிகளைப் பந்தாடுவார். ஒரு சண்டையின் போது அந்த தாயத்து விழுந்து விட அவரது பழைய கோழைத்தனம் வந்துவிடும் அடி வாங்குவார்.மீண்டும் அதை அணிந்து வெற்றி பெருவார். எல்லாமே நம்பிக்கைதான் சார். .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாமன் மகள்தான்.நம்பிக்கைதான் காரணம் என்பதே உண்மை
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 7. உங்களுடைய செயல் அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.

  ஒருவகையில் நீங்கள் செய்தது பெரிய காரியம்தான்.

  நெகிழ்ந்தேன்.

  God Bless You

  பதிலளிநீக்கு
 8. ஒரு விலை குறைந்த,
  சாதாரண செப்பு வளையம்
  எந்தப் பெரிய
  உயரிய எண்ணத்தைத் தந்தது.

  பதிலளிநீக்கு
 9. அந்தப் புத்தகம் பற்றி எழுதுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் படித்தைல்லை ஸ்ரீராம்;ஆனால் அது பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
   நன்றி

   நீக்கு
 10. செப்பு வளையம்மா..அவரை காப்பாற்றியது.....????ஆச்சரியம்தான் !!!!

  பதிலளிநீக்கு
 11. செப்பு வளையம் தானே என்று நான் எண்ணவில்லை அதற்கு சக்தி உள்ளது என்பது உண்மை என்னினும். தங்கள் இருவரது நல்லமனதையும் நிலையையும் தான் புலப் படுத்துகிறது. அந்த அன்பும் நம்பிக்கையும் தான் பெரியது. நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 12. அங்கு நான் செய்தது ஒன்ருமேயில்லை
  நன்றி

  பதிலளிநீக்கு
 13. உண்மையான நம்பிக்கைகள் என்றும் பொய்யானதில்லை!

  பதிலளிநீக்கு
 14. ஆம் ஐயா
  நலமாக இருக்கிறீர்களா?
  நன்றி

  பதிலளிநீக்கு
 15. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை. தங்களின் கை வளையம் அவரின் நம்பிக்கையை அதிகப்படுத்தி மன உறுதியை பெற்று தந்ததுள்ளது. அதற்கு முதற்கண் நன்றி! நம்பிக்கைதானே வாழ்க்கை.
  த ம 11

  பதிலளிநீக்கு
 16. காப்பர் வளையம் அணிந்தால் கடவுள் காப்பார் என அவர் நினைத்தார் போலும்.எது எப்படியோ நாட்டை காத்த ஒரு உயர் இராணுவ அலுவலரின் துணைவியாருக்கு உதவியிருக்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு