இப்போதெல்லாம் எத்தனையோ தினங்கள் கொண்டாடப் படுகின்றன.....அன்னையர்
தினம்,தந்தையர் தினம்,பெண்கள் தினம்,குழந்தைகள் தினம் என்றெல்லாம்.இவற்றுக்கிடையே நேற்று
ஆரவாரமில்லாமல் ஒரு தினம் கடந்து சென்றிருக்கிறது.நமது வாழ்க்கையில் மிக முக்கியமான
ஒரு பொருளின் தினம்
ஆம்.
அகில உலக தேங்காய் தினம்.
தேங்காயின் முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சில சமையல் வகைகளுக்குத் தேங்காய் இருந்தால்தான்
சுவை.
என்றுமே மற்ற முடித் தைலங்களை விடத் தேங்காய் எண்ணெய்தான் தலைக்குத் தடவச் சிறந்தது.
கேரளாவில் சமையலுக்கு முழுவதும் பயன்படும் எண்ணெய்,தேங்காய்
எண்ணெய்தான்.
இந்தத் தேங்காயைத்தரும் தென்னை மரம் ,கவிஞர்களின்
வாக்கிலும் இடம் பெறுகிறது.
மூது’ரையில்
அவ்வையார் சொன்னார்
’நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.’’
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.’’
எனவேதான் ஒரு திரைக்கவிஞன் சொன்னான்
தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
என்று.
நன்றிக்கு எடுத்துக்காட்டாகப் புகழப்
படுவது தென்னைதான்.
காணி நிலம் கேட்ட பாரதி கூட,வேறெந்த மரத்தையும் கேட்காமல்,”பத்துப்
பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேண்டும்” என்றுதான் கேட்கிறான்.
நேற்று விநாயகர் சதுர்த்தி.
வேண்டுதல் நிறைவேற,விநாயகருக்குச் சிதறுகாய்(தேங்காய்) உடைப்பது வழக்கம்.
சதுர்த்திப் பிரசாதங்களில் மிக முக்கியமானது,தேங்காய்ப் பூரணத்தில் செய்த கொழுக்கட்டைதான்
தேங்காய் தினம் நேற்று அமைந்தது மிகப் பொருத்தம்தான்.