தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 23, 2015

அம்மாவிவின் கண்ணீர்!அம்மாவிடம் மகன் கேட்டான்      
ஏனம்மா நீ அழுகிறாய்
அம்மா சொன்னாள்
நான் பெண்ணாய்ப் பிறந்ததால்!
புரியவில்லை எனக்கு என்றான் புத்திரன்
அணைத்தபடி அம்மா சொன்னாள்
உனக்கு எப்போதும் புரியாது.
அப்பா அம்மா ஏன் அழுகிறாள்?
அவர் சொன்னார்அம்மாஅழுவதற்குக்
 காரணம் வேறு உண்டா?
காலம் சென்றது,கட்டிளங்காளையானான்
கடவுளிடம் கேட்டான் அதே கேள்வியை
சிறப்பானதொன்றைப் படைக்க எண்ணினேன்
படைத்தேன் பெருமையுடன்அன்னையரை
குடும்பச்சுமை தாங்க வலிய தோள் தந்தேன்
குடும்பத்தார்   துன்பத்தில்
சாய்ந்து ஆறுதல் பெற
மென்மையும் தந்தேன் அத்தோள்களுக்கு!
 வலிமை தந்தேன்
குழந்தை பெறுவதற்கு மட்டுமல்ல
அவர்களின் அலட்சியத்தைப் பொறுப்பதற்கும்!
கணவனின் குறைகளைக் கொள்ளாமல்
கண்ணிமை போல் அவனைக் காக்கும்
கனிவான மனம் தந்தேன்!
கடைசியாய்…………
கண்ணீரும் தந்தேன்!
அவள்  வேண்டும்போது சிந்துவதற்கு!
அம்மாவின்அழகு
அவள் நிறத்தில் இல்லை
ஆடை அணிகளில் இல்லை
அந்தக் கண்களில் இருக்கிறது
 அவை
அவள் உள்ளத்தின் வாசல்!
அன்பின் நுழை வாசல்
அவள் கண்ணீரில் தெரிவது
அவள் அன்புள்ளம்தான்!
அடைக்குந் தாழின்றிப் பெருகும்
அன்பன்றோ அது!


22 கருத்துகள்:

 1. //அவள் கண்ணீரில் தெரிவது அவள் அன்புள்ளம்தான்!//

  ஓரளவுக்கு இதை ஏற்றுக்கொள்ளலாம் ....

  எனினும் எதற்காக அந்தத் தாய் அழுதாளோ .... சந்தேகமாகவே உள்ளது . //நான் பெண்ணாய்ப் பிறந்ததால்!// என அவளே சொல்லியும் உள்ளதால்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  மனதை நெருடும் கவிதை நன்றாக உள்ளது த.ம 3  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. அன்பின் வெளிப்பாடு மனதில் பதியும் கவிதை வடிவத்தில். நன்றி

  பதிலளிநீக்கு
 4. அம்மாவின் கண்ணீருக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் அதை புரிந்துகொள்வது கடினம்.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பாச உணர்வில் வெளிவரும் ஆனந்தக் கண்ணீர்!

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. அன்புக்கவிதை....அழகு வாழ்த்துக்கள் ஐயா

  தம +1

  பதிலளிநீக்கு
 8. மனதைத் தொட்டுவிட்டன வரிகள்! அருமை!

  பதிலளிநீக்கு