தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 03, 2015

சத்திய சாயி பாபாவும் நானும்,இது ஒரு சத்தியசோதனை போல்தான்.

எழுதுவது என்று வந்து விட்டால் எல்லாம் எழுத வேண்டியதுதான்.

சாமியார்கள் பற்றிய என் அனுபவங்களை எழுதிய பின் என் மீதான உங்கள் பார்வை  இதைப் படித்த பின் மாறலாம்.ஆனால் உண்மையான அனுபவங்களைப் பகிர்வது என்று வந்தபின்   சிலவற்றை மறைக்க முடியுமா?

அனுபவங்கள் மாறுபட்டவை.

மனிதர்க்கு மனிதர் மாறக்கூடியவை.

இங்கு எனது இரு வித்தியாசமான அனுபவங்களைப் பகிர்கிறேன்.

அக்மார்க் உண்மை நிகழ்வுகள்.

என் கல்லூரிக்காலத்தில் நான் சத்தியசாயிபாபாவைக் கிண்டல் செய்பவனாகத்தான் இருந்தேன் 1978 வரை .அதன் பின் சிறு மாற்றம்.

திருப்பூர் சென்றபின்,அங்கிருந்த மருத்துவ நண்பர் ,பரம சாயிபக்தரால் என் மனநிலை மாறத் துவங்கியது.அவர் என்னை ஒரு முறை புட்டபர்த்தி அழைத்துச் சென்றார்.

ஒரு மாற்றம் நிகழத் துவங்கியது.

ஆனால் பஜனுக்குச் செல்வதெல்லாம் கிடையாது
.
கணபதி சச்சிதானந்த ஸ்வாமியைச் சந்தித்த நேரம் பற்றிச் சொன்னபோதுஎன் வாழ்க்கையின்  குறுக்குச்சாலையில்,குழம்பி நின்றிருந்த நேரம்” என்று சொல்லியிருந்தேன்

அந்தக் குழப்பத்துக்குக் காரணமான நிகழ்வு நடக்க இருக்கும் நேரம் அது.

ஒரு நாள்.

இரவுத் தூக்கத்தில் ஒரு கனவு

பெரிய கூட்டம்.அனைவரும் பாபாவுக்காகக் காத்து நிற்கின்றனர்;நானும்.

பாபா வருகிறார்

 அனைவரையும் விட்டு ,கூட்டத்தில் சற்றே ஒதுங்கியிருந்த என்னை நோக்கி வருகிறார்

என்னை நோக்கிக் கையை நிட்டுகிறார்.

விபூதியைப் பணிவாகப் பெற்றுக் கொள்கிறேன்

கனவு கலைந்தது.

மறுநாள்.

அலுவலகம் சென்றதும் என் கனவைப் பற்றி என் உதவி மேலாளர் ஒருவரிடம் கூறினேன்

 மற்றோர் உதவி மேலாளர் வரததால் நான் சென்று அவர் இருக்கையில் அமர்ந்து வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன்

அப்போது  முதலில் சொன்ன உதவி மேலாளர் பதட்டத்துடன் வந்து”சார்!உங்களைப் பார்க்க ஒரு சாமியார் வந்திருக்கிறார்.சீரடியிலிருந்து உங்களைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்கிறார்.ஆச்சரியமா இருக்கு சார்”

எனக்கு உடல் சிலிர்க்கிறது.

என் அறை நோக்கி விரைகிறேன்

“எப்படி என்னைப் பார்க்க வந்தீங்க?”

”உன்னை எனக்குத் தெரியாதா?நீஎன்னைப் பார்க்கவேண்டும்னு சொன்னதால் வந்திருக்கிறேன். கொஞ்சம் பேசலாமா?”

பொதுவாக சில ஆன்மீகம் பேசி விட்டு அவர் சொன்னார்”உனக்கு ஓர் ஆபத்து வரப் போகிறது;பயப்படாதே.அதிலிருந்து நான் உன்னைக் காப்பேன்.”

ஒரு பொட்டலம் விபூதி கொடுக்கிறார்”இது உன்னைக்காக்கும்.”

போய்விட்டார்.

எனக்கு எல்லாமே முதல் நாள் கனவின் ஒரு நீட்சி போலத் தோன்றியது.

சில நாட்கள் கழித்து,என் பாதம் மடங்கி ஒரு மயிரிழை முறிவு ஏற்பட்டது.நல்ல வேளையாகப் பெரிதாக எதுவும் நடக்கவில்லை,

நான் அதைத்தான் அவர் சொன்னார் என எண்ணினேன்.

ஆனால் என் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகும் சம்பவம் நடக்க இருக்கிறது. பெரிய சிக்கலில் மாட்டியிருக்கக்கூடிய அந்த நேரத்தில் எதோ தெய்வ சக்தி என்னைக் காக்கப் போகிறது என்பது எனக்கு அப்போது தெரியாதே?!

மற்ற நிகழ்வு பற்றி நாளை.

34 கருத்துகள்:

 1. சில நேரங்களில் இப்படி அதிசயங்கள் வாழ்வில் நடைபெறத்தான் செய்கிறது. அதற்கு நம்மால் விளக்கம் சொல்லவும் முடியாது. ஆனாலும் அடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. சாய் சரணம்...கண்கள் பனித்தன....
  தம +1

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  மனதின் நினைவோட்டத்தை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் அடுத்த பகுதிக்கு காத்திருக்கோம். பகிர்வுக்கு நன்றி த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. சாயி பகவானின் சாநித்யமே சத்யம்.

  சுப்பு தாத்தா

  பதிலளிநீக்கு
 5. காத்திருக்கிறேன் ஐயா
  தமிழ் மணம் 9

  பதிலளிநீக்கு
 6. காத்திருக்கிறேன் ஐயா.

  எனது வலைப்பூவுக்கும் வருகை தந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. கடைசில டிவிஸ்ட் வச்சிட்டீங்களே!!!

  பதிலளிநீக்கு
 8. காத்திருக்கிறேன் அய்யா ..
  தம +

  பதிலளிநீக்கு
 9. Quiet interesting!

  எனக்கு இது போல் ஏதும் நடந்ததில்லை.. ஆனால் My prayers have been answered.

  God Bless You

  பதிலளிநீக்கு
 10. காத்திருக்கிறேன்.

  த ம கூடுதல் 1

  பதிலளிநீக்கு
 11. சாயி பகவானின் சாநித்யமே சத்யம்.

  சுப்பு தாத்தா
  வரிகளை வணங்குகிறேன்!
  த ம 15
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 12. 'சாமியார்கள் பற்றிய என் அனுபவங்களை' சுட்டியை அழுத்தினால் "நீங்கள் தேடும் பக்கம் பதிவில் இல்லை" என வருகிறதே அய்யா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொத்தம் நான்கு பதிவுகளை சுட்டியில் சேர்த்ததால் அவ்வாறு நேர்கிறது.இதோ சுட்டிகள்
   http://chennaipithan.blogspot.com/2015/01/blog-post_27.html
   http://chennaipithan.blogspot.com/2015/01/blog-post_28.html
   http://chennaipithan.blogspot.com/2015/01/blog-post_29.html
   http://chennaipithan.blogspot.com/2015/02/blog-post.html
   நன்றி

   நீக்கு
 13. என்ன நடந்தது என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு