2015
--------
சாலை ஓரத்தில் அந்த இளைஞன்
காத்திருந்தான்.
யார் அவன்? அவன் பெயர் என்ன?
பெயரில் என்ன இருக்கிறது? அருண் என்று
வைத்துக் கொள்வோமே!
அவன் காத்திருந்தான்
கையில் சுருட்டி வைத்திருந்த
செய்தித்தாளின் நடுவே அதுவும் காத்திருந்தது,அவன் கைவிரலின் அசைவுக்காக.
அவள் வழக்கமாக வரும் நேரம் நெருங்கிக்
கொண்டிருந்தது.
அதோ அவள் வருகிறாள்.இன்று தவற
விடக்கூடாது
எத்தனை ஆண்டுகள் ?எத்தனை வெற்றியடையா முயற்சிகள்?
இன்று கடைசி.
இன்றோடு முடியட்டும் இந்தத் தொடர்கதை.
அவள் நெருங்கி விட்டாள்.
சால ஓரத்திலிருந்து புறப்பட்டு அவளுக்கு
நேராகச் சென்று,ஒளித்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் அவளைச் சுட்டு விட்டு அங்கிருந்து ஓடினான்.பலர் பார்க்க நடந்த நிகழ்வு
ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியாமல் தடுத்தது அந்தத் துப்பாக்கி.
அவள்.....
அந்த இடத்திலேயே மரணம் அடைந்தாள்
1977
--------
ராம்னாத் அதிர்ச்சியடைந்தான்
அன்றுதான் அவன் மனைவி சொன்னாள்”நான் கருவுற்றிருக்கிறேன்”
இது எப்படி முடியும்?
சென்ற ஆண்டுதான் அவசர நிலைசட்டத்தின்
ஒரு விளைவாக அவனுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது
இப்போது இது எப்படி நடக்க முடியும்?
மருத்துவரை நாடினான்.
பரிசோதனைக்குப்
பின் அவர் சொன்னார் அறுவைச் சிகிச்சை சரியாகவே செய்யப்
பட்டிருக்கிறது.குழந்தை தர
அவனால் இயலாது என்று
அப்படியானால்,அவன் மனைவி ரமா அவனை
ஏமாற்றி விட்டாளா?
வேறு ஒருவனின் தொடர்பு இல்லையெனில் இது
எப்படி நடந்திருக்கும். ?
ஒரு முடிவுக்கு வந்தான்.இதையே காரணமாக
வைத்து மண விலக்குப் பெற்றான்.
சில நாட்களுக்குப் பின் உடன்
பணிபுரியும் ராதாவை மணந்தான்.
1992
-------
ராம்னாத் -ரமாவின் மகன்,அருண்.இப்போது
அவனுக்கு வயது 19.
சிறு வயது முதலே தன் தந்தையையும்,அவரது
இரண்டாவது மனைவியையும் பழி வாங்க வேண்டும்
என்ற வெறியுடன் வளர்ந்தவன்.
தன் தாயையும் தன்னையும் தவிக்க
விட்டுப்போன தந்தையை அவன் மன்னிக்கத் தயாராக இல்லை,அவர் அவன் படிப்புக்கு உதவி
செய்து வந்தபோதிலும்.
ஒரு நாள்,பணிக்குச் சென்று கொண்டிருந்த
ராதாவை மடக்கி ஒரு நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றான்.குண்டு
வெடிக்கவில்லை.அவன் தப்பி ஓடி விட்டான்.
நடவடிக்கை எதுவும்
எடுக்கப்படவில்லை.அதன் பின் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன,
கடைசி முயற்சிக்குப் பின் ராம்னாத் அவன்
மீது இரக்கப்பட்டு அவனைக் காப்பாற்றினார்.
அவனும் வருத்தம் தெரிவித்தான்
ஆனால் உள்ளுக்குள் வெறி கனன்று
கொண்டுதான் இருந்தது.
2015 மே 14
சாலையோரத்தில் அந்த இளைஞன்
காத்திருந்தான்.
....................
......................
.........................
(கதையல்ல,)
(கதையல்ல,)