”இதோ பாருங்க!நீதி மன்றமே சொல்லியாச்சு.உங்களுக்கு
வேண்டியவங்க நாலு பேரை அழைச்சிட்டு வாங்க.எல்லோரும் கூடிப்பேசி சமாதானமாப்
போயிடலாம் உங்களுக்கு என்ன வேணுமோ அதை யோசிச்சுச் சொல்லுங்க.ஓர் உடன்படிக்கைக்கு
வந்துட்டோம்ன சட்டப் படியே அதை நீதி மன்றத்தில தாக்கல் செய்து வழக்கை
முடிச்சுக்கலாம்.நான் சிறைக்குப் போறதாலயோ ,நீதி மன்றத்தில அபராதம் கட்டுவதாலயோ
உங்களுக்கு என்ன பயன்? அந்தப் பணம் உங்களுக்குக் கிடைச்சாலாவது பிரயோசனமா இருக்குமே.ஆறு வயசுக்
கொழந்தை வேற இருக்கு.அதுக்கு எதிர்காலத்துக்குப் பணம் தேவையில்லையா?சீக்கிரம்
முடிவு செய்யுங்க.”
2008! அந்த 15 வயதுப் பெண்ணுக்கு அவள்
வாழ்வின் இருண்ட நாள்.அன்றுதான் அவள் அந்த மிருகத்தால் வன்புணர்வுக்கு ஆளானாள். அந்தப்
பதின்ம வயதுச் சிறுமியின் வேதனை அந்த மிருகத்துக்குச் சுகமாக இருந்தது. முடிந்தது.எல்லாம்
முடிந்தது.
நடந்ததை மறக்க முடியாத வாறு அடுத்த ஆண்டே அவள் ஒரு குழந்தைக்குத்
தாயானாள்.
சட்டத்தின் முன் நின்ற அவனுக்கு மகளிர்
நீதி மன்றம் ஏழு ஆண்டுச் சிறைவாசமும் இரண்டு இலட்சம் அபராதமும் விதித்தது.
அவன் மேன்
முறையீடு செய்தான்.
உயர் நீதி மன்றம் சமாதான உடன்படிக்கைக்குப்
பரிந்துரைத்தது.
அதன் விளைவாக இதோ அவன்
பாதிக்கப்பட்டவர்களிடம் பேரம் பேசிக் கொண்டி ருக்கிறான்.
ஒப்பந்தம் ஏற்படலாம். பணம் கைமாறலாம்.
அது அறியா வயதில் வன்புணர்வுக்கு ஆளாகி
உடல் மட்டுமன்றி மனதளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,அவள் உணர்வுக்கான நஷ்ட ஈடா?
வழக்கு விலக்கப்படலாம்.
அவன் விடுதலையாகி ஊரைச் சுற்றலாம்.
கற்பழிப்புக்காகப் பஞ்சாயத்தின் முன்
நின்று அபராதப்பணத்தை நான் முன் பணமாகவே கட்டியிருக்கிறேன் என்று விவேக்கிடம் திமிராகச் சொல்லும் மைனர் குஞ்சுவின் நினைவுதான்
வருகிறது.
இவன் போன்றவர்களுக்கு விவேக் அளித்த
தண்டனைதான் சரியானது
“மைனர் குஞ்சைச் சுட்டுட்டேன்!”