தொடரும் தோழர்கள்

சனி, ஜூலை 07, 2012

புதிய பதிவர்களுக்குச் சில ஆலோசனைகள்!

கீழே காணப்படுவது 21-11-2010 தேதியிட்ட என் பதிவு.புதிய பதிவர்கள் பயன் பெறட்டுமே என்ற நோக்கில்(!) மீள் பதிவாகத் தருகிறேன்.
                                                ***************************

உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?இத்தலைப்பில் வந்த என் முந்தையபதிவுக்குப்  பல நண்பர்கள் பின்னூட்டமிட்டுத் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். அவற்றின் மூலம் எனக்குக் கிடைத்த மிகத் தெளிவான செய்தி! என் பதிவில் பின்னுட்டம் வர வேண்டும் என்றால் நான் அடுத்தவர் பதிவுகளைப் படித்து(படிக்காமலும்!) பின்னூட்டம் இட வேண்டும்!


இந்த அடிப்படையில் நான் ஒரு பின்னூட்ட ஆராய்ச்சி செய்தேன் அதன் கண்டுபிடிப்புகள் கீழே---
1.)உங்கள் நோக்கம் பிரபல பதிவுகளைப் படித்து,ரசித்துப் பின்னூட்டம் இடுவது மட்டும்தான் என்றால்,அவ்வாறே செய்யுங்கள். ஆனால், அதற்குப் பதிலாக,அவர்கள் உங்கள் பதிவில் பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர் பார்த்துச் செய்யாதீர்கள்.கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிபாராதீர்கள்.பின்னூட்டம் வந்தால் அது ஒரு போனஸ்.
2)சில பதிவர்கள் குழுக்களாகச் செயல் படுகிறார்கள்.குழுவின் உறுப்பினர்கள் பதிவுகளில் மாற்றி,மாற்றி பின்னூட்டம் இடுகிறாரகள்


(உ-ம்) அ வின் பதிவில் ஆ,இ,.ஈ,உ ஆகியோர் பின்னூட்டம் இட்டிருந்தால்,ஆவின் பதிவில் அ,இ,ஈ,உ அவர்கள் பின்னூட்டம் கட்டாயம் இருக்கும்.இவ்வாறு மாற்றி மாற்றி நடக்கும்..
இப்படி ஒரு குழுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் .நீங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டால்,அது பல விதங்களில் சௌகரியம்.


அ).நீங்கள் எழுதுவது ஓட்டையாக இருப்பினும், பாராட்டுப் பின்னூட்டங்கள் வந்து சேரும்.


ஆ)கவிதை என்ற பெயரில் என்ன எழுதினாலும் அது கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும். ஹைக்கூ இலக்கணத்தில் அடங்காதவையும் ஹைக்கூவாகப் போற்றப்படும்..


இ)படிக்கப் படாமலே கூடச் சில பின்னூட்டங்கள் வரக்கூடும்.அது மிக எளிது—super,nice என்ற ஒரே சொல்லில்.


ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு ஒரு சாதனமாக பதிவுலகை நாடியிருந்தால், பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எழுதுங்கள்.எழுதிக் கொண்டேயிருங்கள்.நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்—தன் அழகைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல! !


வாருங்கள்! பதிவுலகை நம் எழுத்துக்களால் நிரப்புவோம்!


(நண்பர்களே!இது முழுக்க முழுக்க ஒரு நகைச் சுவைப் பதிவு.லேபிலில் நானே குறிப்பிட்டிருக்கிறேன்—நகைச்சுவை,மொக்கை என்று)


(மீள்பதிவு)

57 கருத்துகள்:

 1. //எழுதிக் கொண்டேயிருங்கள்.நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்—தன் அழகைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல! !//

  இல்லை இல்லை இதனை நான் நகைச்சுவைப் பதிவாகப் பார்க்க வில்லை. ஒரு சீரிய சீரியசான பதிவாகத் தான் பார்கிறேன். வலைபூ ஒரு நல்ல வழிகாட்டி... நாம் நினைப்பதை பதிவாக வெளியேற்றுவதில் ஒரு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது

  //தன் அழகைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல!// நிச்சயமாக

  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகைச்சுவையாக சீரியஸ் செய்திகளைக் கூடச் சொல்லலாம் !

   நன்றி சீனு

   நீக்கு
 2. நகைச்சுவை பதிவு என்று சொன்னாலும் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கு பிடித்த பின்னூட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் ஐயா! :)
  * பயனுள்ள பதிவு!
  * நன்றாக சொன்னீர்கள்!
  * ஹா ஹா ஹா
  * //நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்// உண்மையான நிஜம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாவற்றையுமே தேர்வு செய்து கொண்டேன்.
   நன்றி கார்த்திக்

   நீக்கு
 4. எந்தவொரு பொருளையும் அது தரமான பொருளாக இருந்தாலும் கூட விளம்பரம் செய்யாமல் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாது.,

  அதுபோலத்தான் பதிவுலகமும்., குறைந்த காலத்தில் நம்மை பிறருக்கு அடையாளப்படுத்தி குறிப்பிட்ட இலக்கை சென்றடைய விரும்பினால் அடுத்தவர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.! என்னிடம் தரமான பொருட்கள் இருக்கின்றன, என்னால் மக்களை சென்றடைய முடியும் என்று நம்பினால் சிறிது காலம் (ஆண்டுக்கணக்கில் கூட) பொறுத்திருக்கத்தான் வேண்டும்!

  அப்புறம் ஒரு விஷயம் எல்லோரும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்தே பதிவுலகில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்! நாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பதை (கமெண்ட்ஸ்) பிறருக்கும் அளிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அப்புறம் ஒரு விஷயம் எல்லோரும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்தே பதிவுலகில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்! //
   உண்மை!

   நீக்கு
 5. முதல் பாயிண்ட் நச்!

  இரண்டாம் பாயிண்ட் ஹி ஹி நோ கமெண்ட்ஸ்!

  பதிலளிநீக்கு
 6. அழகான நகைச்சுவை ததும்பும் ஆலோசனைகள்.

  மிகவும் ரசித்தேன். சிரித்தேன். நாட்டுநடப்பை நன்றாகவே அறிய முடிந்தது.

  நன்றிகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. //இப்படி ஒரு குழுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் .நீங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டால்,அது பல விதங்களில் சௌகரியம்.


  அ).நீங்கள் எழுதுவது ஓட்டையாக இருப்பினும், பாராட்டுப் பின்னூட்டங்கள் வந்து சேரும்.//

  யோவ் பிலாசபி பிரபாகரா. சென்னை பித்தன் சார் ஒனக்கு ஆப்பு அடிச்சிட்டாரு.

  பதிலளிநீக்கு
 8. //)கவிதை என்ற பெயரில் என்ன எழுதினாலும் அது கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும். ஹைக்கூ இலக்கணத்தில் அடங்காதவையும் ஹைக்கூவாகப் போற்றப்படும்.//

  புய்ப்பம் அழகாக பூத்து இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 9. //நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்//

  இதை விட ஒரு கொடூர தண்டனை பதிவருக்கு உலகில் வேறெதுவும் இல்லை.

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் உங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு ஒரு சாதனமாக பதிவுலகை நாடியிருந்தால், பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எழுதுங்கள்.எழுதிக் கொண்டேயிருங்கள்........super....

  பதிலளிநீக்கு
 11. arumaiyaa sollirukinga anna... enna mathiri padichu ethavathu karuthiruntha karuthu muranpaadu iruntha solluvom ila padikka mattumae seivom... just a active reader..

  பதிலளிநீக்கு
 12. ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு ஒரு சாதனமாக பதிவுலகை நாடியிருந்தால், பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எழுதுங்கள்.எழுதிக் கொண்டேயிருங்கள்.நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்—தன் அழகைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல! !

  -இதுதான் உண்மை.

  பதிலளிநீக்கு
 13. அடி ஆத்தாடி, ஜீனியஸ்கள் மட்டும் தான் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என் நினைத்தேன். மொக்கைப் பதிவர்கள் கூட ஒரே மாதிரி சிந்திக்க முடியும் என்று இப்போது தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

  இப்பத்தான் இப்படி ஒரு பதிவைப் போட்டுட்டு அதற்கு நானே பின்னூட்டமும் போட்டுக்கிட்டேன்.

  பதிலளிநீக்கு
 14. சுவையுணர்வுடன் அருமையான அனுபவத் தகவல்கள் ஐயா....

  பதிலளிநீக்கு
 15. உண்மையிலே பலருக்கும் பயனளிக்கும் பதிவு நண்பா!
  இப்படி மேலும் மேலும் பதிவுகளை எழுத எனது
  மனமார்ந்த நன்றிகள் .

  பதிலளிநீக்கு
 16. சூப்பர்... நைஸ்...

  நிஜமாவே படிச்சுட்டு போட்ட கமெண்ட்... :)

  நல்ல ஐடியாக்கள்.

  பதிலளிநீக்கு
 17. ///என் பதிவில் பின்னுட்டம் வர வேண்டும் என்றால் நான் அடுத்தவர் பதிவுகளைப் படித்து(படிக்காமலும்!) பின்னூட்டம் இட வேண்டும்!///
  இதை தான் பதிவுலக அரசியல் என்று சொல்லி என்னையும் செய்ய சொன்னங்க .. நான் காணமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் ...

  //ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு ஒரு சாதனமாக பதிவுலகை நாடியிருந்தால், பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எழுதுங்கள்.எழுதிக் கொண்டேயிருங்கள்.நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்—தன் அழகைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல! !/////
  ரொம்ப அழகான வார்த்தைகள் மூலமா சொல்லி அசத்திடீங்க ஐயா . இனி நானும் இவ்வாறே நடப்பேன். இதை நகைசுவைன்னு சொல்லி புட்டேன்களே ஐயா ... இது நிஜம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட சீரியஸ் விஷயம்!(sugar coated pills!)

   நன்றி ரியாஸ்

   நீக்கு
 18. இப்படியும் ஒன்றா?அப்புறம் ஒரு படைப்பு அதிகம் படிக்கப்படாவிட்டால் அது நல்ல படிப்பு இல்லை என்றோ, அதிக கருத்துக்கள் வரவில்லை என்றால் அது நல்ல படைப்பு இல்லை என அர்த்தமா?என்ன புரியவில்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் தரத்துக்கும் கருத்துகளின் எண்ணிக்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை!
   நன்றி விமலன்

   நீக்கு
 19. பணப்பயன் ஏதும் இல்லாத நிலையில் பாராட்டுக்கள்தானே நம்மை ஊக்கப் படுத்தும்.
  நம்மை மதித்து தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து பின்னூட்டம் இடுபவர்களுக்கு நாமும் பின்னூட்டம் இடுவதுதானே சிறந்தது. பின்னூட்டங்களில் பலர் நல்ல ஆலோசனைகளைக் கூறுகிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்த்ச் சொல்பவர்களின் பதிவுக்குக் கருத்துச் சொல்வது என்பதுதான் நாகரிகம்!ஆனால் அது ஒர் வெறும் சடங்காக மாறி விடக் கூடாது!
   நன்றி முரளி

   நீக்கு
 20. நகைச்சுவை பதிவு என்றாலும்

  இதில் பல உண்மை இருநடததை மறுக்க முடியாது அங்கிள்...

  அருமை....

  பதிலளிநீக்கு
 21. உண்மை மறைந்திருக்கும் நகைச்சுவை ஐயா.

  பதிலளிநீக்கு
 22. நானும் ஆரம்◌ாத்தில் கருத்துக்களை எதிர்பார்த்தேன்.ஆனால் இப்பொழுது மனத்திருப்திக்காகவும் என் உணர்வுகளுக்கு வடிகாலாகவும் என் தேடலடகளுக்கு நல்ல விடைதரும் தளமாகவே இந்தப்பதிவுலகு தெரிகிறது...!நன்றியும் வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு