தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 23, 2012

என் தாயின் பிறந்தநாள்

19 ஜூலை அன்று என் தாய்க்கு 94 வயது நிறைவடைந்தது. யு.எஸ்ஸில்ருந்து வந்திருந்த என் அண்ணா மகள், பிறந்த நாளைக்  கேக்(முட்டையில்லாத) வெட்டிக் கொண்டாட வேண்டும் என விரும்பினாள். நான் வெளியில் செல்ல முடியாது வீட்டில் அடைபட்டிருக்கும் நிலையில் அவளே எல்லா  ஏற்பாடுகளும் செய்தாள்.ஜூலை 8 அன்று நடைபெற்ற ஒரு பூணல் விழாவுக்காகவும்,13 அன்று நடந்த என அண்ணா வின் 50 ஆவது திருமண ஆண்டு நிறைவு விழாவுக் காகவும் வெளிநாடுகளில் இருக்கும்,அநேகர் வந்திருந்தனர்.எனவே அம்மாவின் பிறந்த நாள் விழாவன்று அம்மாவின், மகன்கள் மகள்கள்,பேரன் பேத்திகள்,கொள்ளுப்பேரன் பேத்திகள் என வீடே கலகலப்பாக இருந்தது.அப்போது நான் எடுத்த படங்கள் சில---


                                         பிறந்தநாள்  கேக்

                       
                                                              
           வாழ்வில் முதன்முறையாகக் கேக் வெட்டும் என் தாய்


                                    பேரன் பேத்திகளுடன்


                         கொள்ளுப் பேரன் பேத்திகளுடன்

             இந்த நேரத்தில் என்னை முடக்கி உட்கார வைத்துவிட்டானே அந்த இறைவன்?


                டிஸ்கி:: ஏனோ தெரியவில்லை,எழுதத் தோன்றவில்லை எதுவும்  எட்டு  நாட்களாய்,
                               நானோ காத்திருக்கிறேன் மாறும் இந்த மனோ நிலை  நாளை நாளை என்று!


    

41 கருத்துகள்:

 1. நானும் தினமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
  இதோ இன்று ஒரு பதிவு இட்டுவிட்டீர்கள்.
  அன்னையின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நானும் பங்குபெறுகிறேன்.
  உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினற்கும் எனது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. பிறந்த நாள் வாழ்த்துகள் உங்களை தந்த தாய்க்கு...

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்த வயதில்லை ஐயா..
  வணங்குகிறேன் தாயை...

  பதிலளிநீக்கு
 4. நெகிழ்ச்சியான நிகழ்வு. உங்கள் மனக்குறைகள் விரைவில் நீங்கும்

  பதிலளிநீக்கு
 5. மகேந்திரன் அண்ணன் சொன்னமாதிரி வாழ்த்த வயது இல்லை வணங்கி நிற்கின்றேன்

  பதிலளிநீக்கு
 6. என்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்கிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. அம்மா'வுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் தல....!

  பதிலளிநீக்கு
 8. தங்கள் அன்னைக்கு, அவர்களது பிறந்த நாளில் எனது வணக்கமும் வாழ்த்துக்களும்.
  எழுதமுடியாமல் முடங்கியது பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.உங்களுக்கு ஓய்வு வேண்டுமென்பதற்காக ஏற்பட்ட நிகழ்வு இது.
  முழு ஓய்வெடுத்து பதிவிட வாருங்கள். காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கு என்னாச்சு தல...? உடம்புக்கு முடியலையா என்ன...? நீங்க நூறு வருஷம் பூரண சுகத்துடன் நலம் வாழ வாழ்த்துகிறேன் தல...! கவலைப்படாதீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புக்கு நன்றி .விரைவில் நடமாட முடியும்.(நடனமாட அல்ல!)

   நீக்கு
 10. அம்மாவுக்கு நமஸ்காரங்கள்.
  தோன்றும்போது எழுதுங்கள். வலுக்கட்டாயமாக எழுதினால் சுவை இருக்காது!

  பதிலளிநீக்கு
 11. பூரண குணத்துடன், உடல் நலத்துடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்...

  பதிலளிநீக்கு
 12. Ammavai cake vettum thotrathil parka santhoshamaga irukku Friend. Ammaviukku en namaskarangal. Neengal Seekiram Theri Munbai vida vegamaga varugeergal- because, We are all with you.

  பதிலளிநீக்கு
 13. பாட்டிக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிடுங்கோ அங்கிள்...

  பதிலளிநீக்கு
 14. வாழத்த வயதில்லை...அவர்கள் ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைக்கட்டும் பித்தரே...

  பதிலளிநீக்கு
 15. எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
  எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
  அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
  எனக்கது நீயாகுமா?
  - பாடல்: வாலி ( படம்: தாயின் மடியில்)

  பதிலளிநீக்கு
 16. உங்கள் அம்மாவிற்கு எனது நமஸ்காரங்கள்.

  அம்மா.... வார்த்தையொன்றே போதுமே மகிழ்ச்சி தர.....

  த.ம. 11

  பதிலளிநீக்கு
 17. இறைவன் அருளால் வாழட்டும் இன்னும் பல்லாண்டு.நீங்களும் பதிவு படைக்க வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 18. வாழ்வில் முதன்முறையாகக் கேக் வெட்டும் தாய் --
  நிறைவான இனிய வாழ்த்துக்ள்.. நமஸ்காரங்கள்..

  பதிலளிநீக்கு
 19. தங்க்கள் தாயார் இதே வளத்தோடும்
  உடல் நலத்தோடும்நூறாண்டு கடந்து வாழ
  அன்னை மீனாட்சிடம் வேண்டிக் கொள்கிறேன்
  படங்கள் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
  //நானோ காத்திருக்கிறேன் மாறும் இந்த மனோ நிலை நாளை நாளை என்று!// இதுவும் கடந்து போகும் என்று அறியாதவரா நீங்கள் TM14

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிந்திருந்தாலும்,அலைபாயும் மனமிது!
   நன்றி சீனு.

   நீக்கு
 21. Long live your mother. Photos of family union on this joyous occasion were simply superb. Vasudevan

  பதிலளிநீக்கு
 22. மிக மிக மிக பிந்திய வாழ்த்தை தாய்க்கு தெரிவித்து விடுங்கள்.............ஐயா

  பதிலளிநீக்கு