தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூலை 01, 2012

சிறு பதிவர் சந்திப்பு!

ஒரு கடையில் அட்டை மாட்டப்பட்டிருந்தது.அதில் எழுதியிருந்தது-

“இங்கு சுத்தமான பசுவின் பால் விற்கப்படும்”

அதைப் பார்த்த ஒருவருக்குச் சந்தேகம்-

பசு சுத்தமானதா அல்லது பால் சுத்தமானதாஎன்று!

அது போல சிறு பதிவர் சந்திப்பு என்றால்,பதிவர்கள் சிறியவர்களா அல்லது சந்திப்புச் சிறியதா என்று சந்தேகம் !

ஐந்து பேர் கலந்து கொண்டதால் இது சிறு சந்திப்பு

பதிவர்கள் கலந்து கொண்டதால் இது பதிவர் சந்திப்பு.
எனவே சிறு பதிவர் சந்திப்பு!


ஏற்கனவே திட்டமிட்டபடி காலை 11 மணி அளவில் புலவர் இராமானுசம் அய்யா ,மின்னல் வரிகள் கணேஷ்,தூரிகையின் தூறல் மதுமதி ஆகியோர் என் குடிலுக்கு வருகை தந்தனர். முக்கியமான நிகழ்வாக 19-8-2012 அன்று நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் என்ன செய்யவேண்டும் எனக் கலந்தா லோசித்து  நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது.இவ்வளவு கலகலப்பாக உரையாடல் இருக்குமென நான் எதிர்பார்க் கவில்லை.வயது வித்தியாசங்கள் மறைந்து,நாம் பதிவர் என்ற ஒரே எண்ணமே மேலோங்கி மிகவும் நகைச்சுவை உணர்வுடன் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.


சந்திப்பு முடியும் தருணத்தில் பதிவர்,கவிஞர் ரிஷ்வன் அவர்கள் வந்து சேர்ந்து மேலும் கலகலப்பு ஊட்டினார்.தனது “உண்மை உழைப்பு உயர்வு தரும்”என்ற கவிதை நூலை அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கினார்.


கணேஷ் அவர்கள் நான் படிப்பதற்காக இரு நூல்கள் நல்கிச் சென்றார்.


மதியம் ஒரு மணி அளவில் ”சிறு பதிவர் சந்திப்பு” இனிதே நிறைவு பெற்றது.


படங்கள் கீழே----


                              கணேஷ்,மதுமதி,புலவர் ஐயா


                  கணேஷுக்கும் மதுமதிக்கும் நடுவில் ரிஷ்வன்


                      புலவர் ஐயாவும்,சென்னை பித்தனும்

41 கருத்துகள்:

 1. மூத்த பதிவர்கள் அனைவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!

  உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 2. மதியம் ஒரு மணிக்கு நடந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவை, சூடு குறையுமுன் அதாவது சந்திப்பு முடிந்து 51 மணித்துளிகள் ஆகுமுன்பே வெளியிட்டு சாதனை படைத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்! புகைப்படங்கள் அருமை. ஆரம்பமே இப்படி யென்றால் அடுத்தது (பதிவர் சந்திப்பு) எப்படியோ??!!

  பதிலளிநீக்கு
 3. சிறு பதிவர் சந்திப்பு - வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. aiyaaa nalamaa ...
  viraivil varuven meendum padaai paduttha poren he he ...tamil manam 4

  பதிலளிநீக்கு
 5. நகைச்சுவைச் சொல்லாடல்களுடன் கூடிய அழகிய பதிவு. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. ம்ம் நடத்துங்க அன்பரே படங்கள் கலக்கல்

  பதிலளிநீக்கு
 7. தலைக்காவேரியை இங்கு பார்க்கிறோம்
  அகண்ட காவேரியை மாணவர் மன்றத்தில் பார்ப்போம்
  விழா வெற்ற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. இது பெரும்பதிவர்கள் சந்திப்பாவுல இருக்கு........? அருமையான சந்திப்பு......!

  பதிலளிநீக்கு
 9. பெரிய பெரிய பதிவர்களின் முகங்களை ஒரு சிறிய பதிவில் காட்டியமைக்கு நன்றி! சென்னையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. மின்னல் பதிவு! சந்தித்து விட்டு, வீடு வருவதற்குள்.......!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் பாஸ்
  அழகான சந்திப்பு படங்கள் அருமை
  புலவர் ஜயாவும்,நீங்களும் இருக்கும் போட்டோ சூப்பரா இருக்கு

  பதிலளிநீக்கு
 12. பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. சிறு பதிவர்களைப் பார்க்கலாம்னு வந்தா, அல்லாரும் பெரியவங்களா இருக்காங்க?

  பதிலளிநீக்கு
 14. அலைபேசியில் தெரிந்துகொண்டேன் தங்கள் சந்திப்பை அதற்குள் பதிவா ? படங்களுடன் அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
 15. மதியம் சந்திதததை
  மாலையில் பதிவிட்டு
  வலையுலகை அதிசிய வைக்கும் - கைவந்த
  கலை எல்லாம் உம்மால் மட்டுமே முடியும்...
  பித்தனாரே.... சென்னைப் பித்தானாரே...!

  பதிலளிநீக்கு
 16. அருமையான சந்திப்பு,அழகிய படங்கள்,அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஆகஸ்ட் பதிவர் சந்திப்பிற்கு.

  பதிலளிநீக்கு
 17. சீனியர்கள் சந்திப்புன்னு நீங்க போடமுடியாது...உங்களின் நட்பின் மூலம் கணேஷ் சார் டி சர்ட் போட ஆரம்பிச்சிட்டாரு போல.....
  பதிவர் சந்திப்பு சிறப்புடன் நடக்க வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. சிறு பதிவர் சந்திப்பு பெரிய பதிவர் சந்திப்புக்கான முன்னோட்டம் என்பது அறிந்து மகிழ்ந்தேன். வரும் நாட்களில் இது பற்றி இன்னும் பல தகவல்களை அறிய ஆவலுடன் உள்ளேன்

  பதிலளிநீக்கு
 19. அருமை.....

  பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 20. மூத்த பதிவர்கள் அனைவரது புகைப்படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி...

  பதிவர்கள் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு