தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 25, 2012

இந்தியா ஒளிர்கிறதா?!நான்காவது தூணின் சக்தி!


வந்து விட்டதா சாந்திக்கு ஒரு விடிவு காலம்?

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளி வந்த,ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்ற சாந்தியின் வேதனையான நிலை பற்றிய செய்தியை அடக்கி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.-”இதுதான் இந்தியா!நெஞ்சு பொறுக்கு தில்லையே!!” என்ற தலைப்பில்.எத்தனை பேரை அச்செய்தி வெகுவாகப் பாதித்தது என்பது வருகை எண்ணிக்கை மூலம் தெரிந்தது.

எழுது கோலின் சக்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது இன்று.

டைம்ஸில் வந்த செய்தியைப் படித்த பின் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் இதை உணர்த்துகின்றன.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்,திரு.அஜய் மக்கன் அவர்கள், லண்டனிலிருந்து(ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கப் போயிருக்கிறாரோ?!) டைம்ஸ் ஃப் இந்தியாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவதுஆசிய விளையாட்டில் பதக்கம் பெற்ற சாந்தியின் நிலை கண்டு வருந்துகிறேன்.அனைத்தையும் சரி செய்யும் நோக்கில் மீண்டும் ஒரு பாலியல் சோதனை நடத்தப்பட வேண்டும்.  மேலும் எத்தனையோ  ஏற்கத் தக்க சோதனை முறைகள் இருப்பதாக அறிகிறேன்.சாந்தியின்  விஷயத்தில் அத்தகைய முறைகள் உபயோகிக்கப்படும்.சோதனையில் சாந்தி தேறினால், தென் ஆப்பிரிக்கா செய்தது போல் நாங்களும் சாந்தியின், பதக்கத்தையும், சான்றுகளையும் திரும்பப் பெறப் போராடுவோம்.சாந்தி மீண்டும் தன்  தடதள விளயாட்டை தொடர எண்ணினால் அதற்கு உதவி செய்வோம்.”மேலும் அவர்,சோதனை முடிவு எதுவாக இருப்பினும்,தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியாளர் படிப்புக்கு இடம் அளிக்கப்படும் என்றும் கூறினார்!

கெயில் நிறுவனம் உதவித்தொகையாக ரூ.ஒரு லட்சம் அளித்துள்ளது.

தமிழக அரசு அதிகாரிகள் பேசும்போது சாந்தியைஅவர்கள் கைவிடவில்லை என்றும்,அவருக்கு பயிற்சியாளர் வேலை வழங்கப்பட்டது என்றும் அவராகவே விலகி விட்டார் என்றும் ,அதன் பின் அவரைப் பற்றித் தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும்தெரிவித்தனர்.(என்ன சம்பளம் வழங்கப்பட்டது?)

அன்றைய தி.மு.க.அரசு சாந்திக்கு ரூ.15 லட்சம் பரிசாக வழங்கியதாம்.
(பணம் சாந்தியிடம் சேர்ந்ததா?எவ்வளவு கிடைத்தது?சாந்தி அதை என்ன செய்தார்?)

எப்படியோ ஒரு பத்திரிகையின் முயற்சியால் சாந்திக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது!

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இந்தியா ஒளிரத் தொடங்கி விட்டதா?


(செய்தி :டைம்ஸ் ஆஃப் இந்தியா 25-07-2012)

டிஸ்கி:நான்காவது தூண் என்ன முயன்றாலும்,ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டிருக்கும் நம் அரசியல்வாதிகளின் பண விஷயத்தில் எதுவும் நடக்காது!

46 கருத்துகள்:

 1. சந்தோஷப்பட்டேன் எழுது கோலின் சக்தி உறுதிப்படுத்தப் பட்டிருப்பதை அறிந்து. செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. எழுத்துக்கு இருக்கும் சக்தி இதுதான் :)

  பதிலளிநீக்கு
 3. எப்படியோ ஒரு பத்திரிகையின் முயற்சியால் சாந்திக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது!

  இவர் போலும் இத்தனை பேர் இருப்பார்களோ?
  நல்ல பகிர்வு ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்
   நன்றி சசிகலா

   நீக்கு
 4. அதோ ஒளி பிறந்து விட்டது என கூறுகிற லகுட பாண்டிகளாய்த் தான் அரசாங்கம் நம்மை வைத்துள்ளது.. நல்லது நடந்தால் மட்டுமே நல்லது இல்லையேல் போராட்டமே வாழ்க்கை தான்...

  நான்காவது தூண் என்றாவது ஒரு முறை தான் தான் சக்தியை காண்பிக்கிறது என்பது தான் வேதனையான விஷயம்

  எழுத்தின் பலம் எழுதுபவனுக்கே சமயங்களில் புரியாமல் போனது இன்னும் கேவலம்

  பதிலளிநீக்கு
 5. எழுதும் சக்தி நல்லவற்றுக்கு பயன்பட்டால் நன்மை...
  நன்றி ஐயா ! (த.ம. 5)

  பதிலளிநீக்கு
 6. ஏதோ விடிவு காலம் வந்தால் சரி. (தினமணி, தினமலரிலும் செய்திகள் படித்தேன்)

  பதிலளிநீக்கு
 7. இந்தியாவில் இந்திய குடிமகன்களின் திறமைகளுக்கு மதிப்பு இருப்பதில்லை, என்ற குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க... இதுபோன்ற நிகழ்வுகள் நம் கண்முன்னே நடக்கும்போது வெட்கி தலைகுனியவேண்டியிருக்கிறது. எனினும் மீண்டும் அவருக்கு நல்வாழ்வு கிடைத்தால் அது இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.

  பதிலளிநீக்கு
 8. பொதுவாக நமக்கு மறதி அதிகம்.
  இதை அனைவரும் சரியாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
  follow up என்று எதையாவது கேட்டால் "இவனுக்கு வேற வேலையில்லை" என்று சலித்துக்கொள்வர்.
  அப்படியும் சில சமயங்களில் இப்படிபட்ட நல்ல விஷயங்களும் நடைபெறுகின்றன.

  பதிலளிநீக்கு
 9. எழுதுகோலின் சக்தியால்தான்
  தற்போது ஒரு சில நல்ல விஷயங்களும் நடக்கின்றன்
  மகிழ்வு தந்த பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. எதையும் எழுத்தால் வெல்லலாம்..

  பதிவிற்கு நன்றி....

  பதிலளிநீக்கு
 11. எழுது கோலின் சக்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது

  பதிலளிநீக்கு
 12. ஐயா சாந்திக்கு நீதி கிடைச்சாச்சு .. சந்தோசம் கிழே இந்த பதிவுக்கு வந்து பாருங்க இது சென்ற வாரத்தில் ஒரு நாள் வெளிவந்தது ... நீங்க பார்த்தா தான் நல்ல இருக்கும் ஆமா

  Http://tamilyaz.blogspot.com/2012/07/lost-love.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்துக் கருத்தும் சொல்லிவிட்டேன் ரியாஸ்
   நன்றி

   நீக்கு
 13. சாந்தி அம்மாவின் வாழ்வில் இனி ஒளி வீசட்டும்....வீசவேண்டும்...

  பதிலளிநீக்கு
 14. என்னாது தல, கடைசியில பன்ச் வச்சிட்டீங்க டிஸ்கில....ம்ம்ம்ம் வரும்.....ஆனா வராது.....போங்க...

  பதிலளிநீக்கு
 15. எழுத்துதான் உண்மைய சொல்லும்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார், உண்மைனு புரிஞ்சது

  பதிலளிநீக்கு
 16. சந்தோஷமான செய்தி எழுத்தின் சக்தி அறிகிறேன்........

  பதிலளிநீக்கு
 17. எழுதுகோல்கள் குனியும் போது மானிடம் நிமிர்ந்ததாய் கவிதையில் படித்ததுண்டு.இது தான் அது!!வாழ்த்துக்கள் சொந்தமே!

  பதிலளிநீக்கு
 18. மிக்க மகிழ்ச்சி சார் நேற்று அந்த செய்தியை படித்து மிகுந்த வருத்தப்பட்டேன். இப்போதுதான் நிம்மதி உண்டாகியது. மற்றபடி இந்தியா ஒளிர்கிறதா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 19. நல்ல விஷயம். நடந்தால் மிக்க மகிழ்ச்சி... பார்க்கலாம் என்ன நடக்கிறதென.

  பதிலளிநீக்கு
 20. டிஸ்கி:நான்காவது தூண் என்ன முயன்றாலும்,ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டிருக்கும் நம் அரசியல்வாதிகளின் பண விஷயத்தில் எதுவும் நடக்காது.//

  Amen.

  பதிலளிநீக்கு
 21. Power of fourth pillar of democracy demonstrated effectively. Unless the mindset changes things would not improve. Fourth pillar may not and cannot intervene in all cases. They too select cases that would boost their readership/circulation.
  True ill gotten wealth can never be retrieved as all the forces collude to prevent this. If USA could arm twist Swiss/Germany etc to get details of account holders who have stashed their ill gotten wealth why not India. Even the media beyond a certain level does not pursue these cases. K.Vasudevan

  பதிலளிநீக்கு
 22. உங்கள் விரயுப்பதை எதிர்பார்த்து ஒரு பதிவு ... படித்து உங்கள் உங்கள் விருப்பம் கூறுங்கள்
  http://seenuguru.blogspot.in/2012/07/blog-post_27.html

  பதிலளிநீக்கு