சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதிர் வீட்டில் குடியிருக்கும் பெண் ஸ்கூட்டியில் வந்து இறங்கி உள்ளே சென்றாள்.
அவளுக்கு வயது 30 இருக்கலாம்.
அழகான பெண்.
வாளிப்பான உடற்கட்டு.
இன்னும் திருமணமாகாதவள்.
அந்த வீட்டில் தனியாகத்தான் இருந்தாள்.
அவள் உறவினர் என்று யாரும் வந்து நான் பார்த்ததில்லை.
அவள் ஒரு செல்ல நாய் வளர்த்து வந்தாள்.என்னைக் கண்டால் வாலாட்டும்
அவள் காலை அலுவலகம் சென்று ,மாலை திரும்பி வரும் வரை அந்த நாயைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு வேலைக்காரி வைத்திருந்தாள்.
அந்த நாயை ராஜா என்று பெயரிட்டு அழைத்து வந்தாள்.
அன்றும் அவள் வந்து சிறிது நேரத்தில் வேலைக்காரி போய் விட்டாள்.
நானும் என் ஆசனத்தில் சென்று அமர்ந்து விட்டேன்
சிறிதுநேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்தேன்.
அவள்!
புதிதாக ஒப்பனை செய்து அழகாக உடுத்தியிருந்தாள்.
வெளியில் செல்லத் தயாராக இருக்கிறாள் என்பது தெரிந்தது.
”வாங்க!” அழைத்தேன்.
உள்ளே வந்தாள்.”இன்றைக்கு எனக்கு ஒரு ஊக்கத்தொகை கிடைத்தது. எனவே நான் கொண்டாடும் மன நிலையில் உள்ளேன்.வெளியில் சென்று,கொஞ்சம் ஒயின்,பின் நல்ல உணவு.இரவு சினிமா என ஜாலியாகக் கொண்டாட நினைக்கிறேன்.அதற்காகத்தான் உங்களைத் தேடி வந்தேன்.உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கிறதா?”
எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?மனம் எங்கோ பறந்தது. எதையெதையோ நினைத்தது.
”ரொம்ப சந்தோஷம்.எனக்கு ஒரு வேலையும் இல்லை” சொன்னேன்.
”அதற்குத்தான் உங்கள் உதவி வேண்டும்.நான் இல்லையென்றால் ராஜா கத்த ஆரம்பித்து விடுவான்.உங்களுடன் அவன் பழகியிருக்கிறான்.எனவே நான் வரும் வரை ராஜாவைக் கொஞ்சம் பார்த்துக் கொள்வீர்களா?”
இப்படி ஒரு பல்பா?!