இன்று மார்கழி 27 ஆம் நாள்.திருப்பாவை 27ஆம் பாடல்”கூடாரை வெல்லும் சீர்  கோவிந்தா” என்று தொடங்குகிறது.எனவே இன்று வைணவர்களுக்கு ஒரு நல்ல  நாள்.இன்று கூடார வல்லி என்று அழைக்கப் படுகிறது.இன்று அவர்கள் இல்லங்களில்  கட்டாயம் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள்.அதற்கும் காரணம் இருக்கிறது.மேலே  குறிப்பிட்ட பாடலில் ஒரு வரி”பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார”  என்பது.’பாற்சோறு மூட ஊற்றிய நெய் முழங்கை வழியாக வழியும்படி’ என்பது  பொருள்.எனவேதான் இன்று சர்க்கரைப் பொங்கலின் அவசியம்.
ஆனால்  பாட்டில் கூறியது போல் இன்று நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது  என்பது நடக்காது.இன்றைய விலை வாசியில் கட்டுப்படியாகாது என்பது ஒரு புறம்  இருக்க,நமது உடல் நிலையும் அதற்கு இடம் கொடுப்பதில்லை.  பெரும்பானமையானவர்களுக்குச் சர்க்கரை வியாதி;சர்க்கரைப் பொங்கலை  வளைத்துக்கொண்டு சாப்பிட முடியாது.அது தவிர ,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்டரால்  எல்லாம்.’நெய் பெய்து முழங்கை வழி வார’ எனபதை நினைத்துகூடப் பார்க்க  முடியாது.சம்பிரதாயத்துக்கு ஏதோ இனிப்பு குறைந்த,நெய்யில்லாத பொங்கல் சாப்பிட  வேண்டியதுதான்.
என் அத்திம்பேர் ஒருவர் இருந்தார்.அவர் மார்கழி மாதத்தின் 27 ஆம் நாளை  மறக்கவே மாட்டார்.திருப்பாவையின் 27ஆம் பாடலும் அவருக்கு  நன்கு தெரியும்.குறிப்பாகக் கீழ்க்கண்ட பகுதி--
” பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார” (!)
முதல் நாளே என அக்காவிடம் கூறிவிடுவார்”நாளைக்குக் கூடார வல்லி.சர்க்கரைப் பொங்கல் பண்ணிவிடு” என்று.
எனக்கு  வேதம் கற்பித்த குருஜி ஒருவர்.சாப்பாட்டில் ரசிகர்.அடிக்கடி  சொல்வார்.”சர்க்கரைப் பொங்கல் என்றால் அந்தப் பாத்திரத்தை லேசாச் சாய்த்து  வைத்தால் நெய் அதிலிருந்து வடிய வேண்டும்” என்று!
கூடார வல்லி பற்றியும்,அன்று செய்ய வேண்டிய  அக்கார அடிசில் பற்றியும்(செய்முறையுடன்) சகோதரி ஜயஸ்ரீ கோவிந்தராஜனின் மிகச் சுவையான பதிவைப் படித்துப் பாருங்களேன்.
கூடாரவல்லித்திருநாள் வாழ்த்துகள்!
 
நெய் பொங்கலைப்பற்றி நீங்கள் எழுதியுள்ள பதிவும்,திருமதி ஜயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் அக்கார அடிசில் செய்வதைப்பற்றிய பதிவும் உடனே வீட்டில் அதை செய்யச் சொல்கின்ற அளவுக்கு ஆவலைத் தூண்டிவிட்டது என்பது உண்மை. நாவை மணக்க செய்த நல்ல பதிவு.
பதிலளிநீக்குசுவையான பகிர்வு பாஸ்
பதிலளிநீக்கு//அந்தப் பாத்திரத்தை லேசாச் சாய்த்து வைத்தால் நெய் அதிலிருந்து வடிய வேண்டும்” என்று!//
பதிலளிநீக்குதிருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் சக்கரைப்பொங்கல் ஒரு காலத்தில் இப்படித்தான் இருக்குமாம்.பிரசாதம் வீட்டிற்கு கொண்டு வரும்போது அதன் மேல் இருக்கும் நெய்யை என் பாட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் வடித்து எடுத்து வைப்பாராம்.அவ்வளவு நெய் இருக்குமாம்,என் அம்மா சொல்லுவார்.
சிறப்பான பதிவு.
நல்லதொரு பகிர்வு. சர்க்கரைப் பொங்கல் உடனே செய்து சாப்பிட ஆசை வந்து விட்டது.....
பதிலளிநீக்குகாலையிலே திருப்தியா நெய் வழிய பொங்கல் சாப்டாச்சு! பொங்கல்னா அது கூடாரவல்லி பொங்கல்தான்!..பேஷ்..பேஷ்!
பதிலளிநீக்கு"கூடாரவல்லி!(நெய்ப்பொங்கல்)"
பதிலளிநீக்குமண்ம் மிக்க ருசியான பொங்கல் பகிர்வுக்கு வாழ்த்துகள்..
நல்லதொரு பகிர்வு...நெய்யில்லாத பொங்கல் waste...-:)
பதிலளிநீக்குநாளுக்கேற்ற பதிவு நன்று.
பதிலளிநீக்கு