தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 13, 2015

மீண்டும் தனி ஒருவன்!-முடிவுகார் ஒன்று அவர்கள்அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வந்து நின்றது. 

நீங்கள்கிருஷ்ணஸ்வாமி சார் தானேஎன்று புதியவர் வினவ, ஆம் என்று ஜெகன் பதிலளித்தார். ஆனந்தம் அடைந்த அந்த நபர் தன்னை செந்தில்நாதன்என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, அயல்நாட்டுப் போஸ்டிங்கிற்கு கிருஷ்ணஸ்வாமி பதவி ஒய்வு அன்று தேர்ந்தெடுத்த 20 பேர்களில் தானும்ஒருவர் என்று கூறி அகமகிழ்ந்தார். போன மாதம் தான் ஒய்வுபெற்றதாகவும் கிருஷ்ணஸ்வாமியின் செயல் அவரை மிகப் பெரியநிலைக்கு கொண்டு போய் விட்டதாக மகிழ்ந்தார். பெசன்ட் நகரில் தன்மகள் இருப்பதாகவும் அவருடன் இரண்டு வாரங்கள் இருந்து விட்ட போகயூ.கே.விலிருந்து வந்திருப்பதாக கூறினார். யூ.கே.. மான்செஸ்டரில் அவரதுபையன் பெரிய டாக்டராக இருப்பதாக கூறினார். ஜெகன் இந்த விஷயங்களை சிரமமில்லாமல் ஸ்வாமிக்கு புரிய வைத்தார்.


பிறகு செந்தில், அருகிலிருந்த தன் மகளின் வீட்டிற்கு அவர்களைஅழைத்தார். தனது 60 வயது நிறைவு விழா நேற்று தான் நடந்ததாகவும்,ஸ்வாமியை அழைத்துக் கொண்டு, அவர்கள் அங்கு வந்து தன்னைஆசீர்வதித்தால் அது தனக்கு அளிக்கும் மிகப் பெரிய மரியாதை என்றுஅவர் கூறினார். ஜெகன் ஸ்வாமியை சம்மதிக்க வைத்தார்.


வீட்டில் செந்தில், அவர் மனைவி மகள், மாப்பிள்ளை பேரன் சித்தார்த்,எல்லோரையும் அறிமுகப்படுத்தினார். ஸ்வாமயின் கால்களில் மனவைியுடன் விழுந்து நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றார். ஸ்வாமி செந்தில் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் ஆசீர்வதித்தார்.  ஜெகன்இந்த விஷயங்களில் இருந்து லகுவாக தப்பித்து சித்தார்த்க்கு மட்டும் ஆசிவழங்கினார்.


செந்தில் முப்பது வருடங்களுக்கு முன் இறந்து போன தன் தந்தையின்இருப்பை உணர்ந்ததாக மெய் சிலிர்த்தார். திரு.கிருஷ்ணஸ்வாமிக்கு ஒரு பட்டுவேட்டி பட்டுப் புடவை அடங்கிய தாம்பூலப் பையை வழங்கினார்.


ஜெகன் ஒரு தேங்காய் பையை மட்டும் வாங்கிக் கொண்டார். சக்கரநாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த தன் தாயையும் ஸ்வாமிக்கு செந்தில்அறிமுகப்படுத்தினார்.


யாரோ விருந்தினர்கள் வர, ஸ்வாமி செந்திலிடமிருந்து விடை பெற்றார்.


ஜெகனிடம் செந்தில் தயவு செய்து சாரை அவரது இல்லத்தில்விட்டுவிட்டு நீங்களும் உங்கள் வீட்டில் இறங்கிக் கொண்டு காரை திருப்பிஅனுப்பி விடுங்கள்.என்று ஒரு தாழ்ந்த வேண்டுகோளை விடுத்தார்.


தனியாக பட்சணங்கள் சணல் பைகளில் வழங்கப்பட்டன.ஸ்வாமியின் தாம்பூலப் பையில் இரண்டு பவுன் தங்க நாணயம்இருந்ததை வீட்டிற்கு திரும்பியவுடன் அவர் மனைவி அதை எடுத்துக்காட்டியபோது தான் தெரிந்தது.ஸ்வாமி அதை என்ன செய்திருப்பார்

 பரந்தாமனுக்கே வெளிச்சம்.

--பார்த்தசாரதி

20 கருத்துகள்:

 1. பூஜையறையில் மாட்டி இருப்பார்... ஐயா

  பதிலளிநீக்கு
 2. .தனது தகுதிக்கு ஏற்ற வெளி நாடு வாய்ப்பு கிடைத்ததால், வாழ்வில் சிறப்பாக முன்னேறிய செந்தில் சஷ்டியப்த பூர்த்தியை மகிழ்ச்சியோடு கொண்டாடிய நிலையில், இதற்குக் காரணமான அப்போதைய நேர்மையான உயர் அதிகாரிக்கு 2 சவரன் தங்கக் காசுகளை அன்பளிப்பாக, அளித்துள்ளார். எனவே இந்த அன்பளிப்பை நிச்சயம் ஸ்வாமி ஏற்றுக் கொண்டிருப்பார்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 30 ஆண்டுகளுக்கு முன் அன்பளிப்புக் காசோலையை பணியாளர் நல நிதிக்கே அளித்தவர்தான்!ஆனால் 30 ஆண்டுகள் கழித்து இன்றைய மன நிலையில் என்ன செய்வாரோ?

   நீக்கு
 3. இன்னுமொரு முடிவு.....

  என்ன செய்திருப்பார் - எனக்கும் அதே யோசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும்!
   நன்றி வெங்கட்

   நீக்கு
 4. # பரந்தாமனுக்கே வெளிச்சம்.#
  பார்த்தசாரதிக்கே வெளிச்சம் என்றும் சொல்லியிருக்கலாம் :)

  பதிலளிநீக்கு
 5. ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் ( சஸ்பென்ஸ்)
  .இனியெல்லாம் சுபமே

  பதிலளிநீக்கு
 6. என்ன செய்திருப்பார்????

  நல்ல காரியத்திற்கு தந்திருப்பார்

  சரியா அய்யா!!!!

  பதிலளிநீக்கு
 7. நிச்சயம் தான் எடுத்துக் கொண்டிருக்கமாட்டார். ஏதேனும் ஒரு அறப்பணிக்கு நன்கொடையாக கொடுத்திருப்பார்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா

  நினைவுகள் சுமந்த பதிவு.... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. முடிந்த கதையை தொடர்ந்து வைத்திருக்கிறீர்கள்! இனியும் தொடரட்டுமே!

  பதிலளிநீக்கு
 10. சுவாமி அதனை நிச்சயமாகத் தனக்கு எடுத்துக் கொண்டிருக்க மாட்டார். கொடுத்துப் பழகிய கைகள் மீண்டும் அதை ஒரு நல்ல விசயத்துக்குத்தான் கொடுக்கும். எனவே அதை ஏதேனும் ஒரு நல்ல விசயத்திற்குக் கொடுத்திருப்பார்.

  பதிலளிநீக்கு